நெடுநெடுவென வளர்த்தவள்............
நெடுநெடுவென வளர்த்தவள்
நேர்ப் பார்வை இல்லாதவள்
சிடுசிடுவென இன்று எரிகிறாள்
சினத்துடன் ஏனோத் தவிக்கிறாள்
கடுகடுவெனும் காரணம் காணாது
கண்ணைக் கசக்கி அழுகிறாள்
விடுவிடுவென எதேயோ தேடி
வழியை நோக்கியேப் பார்க்கிறாள்
தடதடவென வண்டியில் அவன்
தலையைக் கண்டதும் மகிழ்கிறாள்
குடுகுடுவெனப் பாய்ந்து ஓடி
கொஞ்சி அவனை அணைக்கிறாள்
கிடுகிடுவென இடியின் சத்தம்
கண்டு பயந்ததுபோல் நடிக்கிறாள்
சலசலவென மழையைப் பார்த்ததும்
சத்தமின்றி முத்தமும் கொடுக்கிறாள்
சிடுசிடுவும் எங்கோ மறைந்தது
சீக்கிரம் உண்மையும் தெரிந்தது
படபடவென இதயம் துடித்ததும்
பயமும் அவளுக்குத் தெளிந்தது
அருமை! மடமடவென்று மகிழ்வாய் எழுதி குவிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவிடுவிடுவென்று சொல்லியமைக்கு நன்றி.தொடருங்கள் நண்பரே
Deleteஊடலும் கூடலும் இன்பம்தானே!
ReplyDeleteநன்று
எல்லா இடத்திலும் மனத்திலும் உள்ளதுதானே .வருகைக்கு நன்றி
Deleteபுரிஞ்சிபோச்சு சார் எனக்கும் புரிஞ்சி போச்சு.சார்
ReplyDeleteதெரிஞ்சுப் போச்சா அதையும் தெரிஞ்சுபோச்சா? ,வாங்க நண்பரே சமாதானமா போயிடலாம்.நன்றி
Deleteபுதுமணத் தம்பதிகள் சநதிக்கின்ற முதல் மழை குறித்த கவிதை என நினைக்கிறேன் மழைச் சூழலை சொல்லியவிதம் அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஇளசுங்களுக்கு அப்படித்தானே இருக்கும் .உண்மைய நீங்க கண்டுபிடிசிடீங்க சார். நன்றி
Deleteதஂம.4
ReplyDeleteநன்றி
Deleteசிட்டோ சிலையோ சிந்தை நிறைந்ததுவோ
ReplyDeleteபட்டோ பரிமளமோ பாவினிக்கும் பைந்தமிழோ
கட்டுக் கடங்காத கவின்மிகும் கலையழகோ
விட்டிட முடியவில்லை விடையும் தெரியவில்லை...
அடுக்குமொழிக் கவியினை ரசித்தேன் சகோதரரே!
உட்பொதிந்த அர்த்தம் புலப்படவிலை எனக்கு...
த ம. 5
Ramani S23 May 2013 16:45
Deleteபுதுமணத் தம்பதிகள் சநதிக்கின்ற முதல் மழை குறித்த கவிதை என நினைக்கிறேன் மழைச் சூழலை சொல்லியவிதம் அருமை வாழ்த்துக்கள்//
இது இளசுங்க சமாசாரம் .முதல்மழையும் பிரிவும் அப்படித்தானே இருக்கும்
மீண்டும் ஒரு அழகிய கவிதை...
ReplyDeleteநன்றிங்க சௌந்தர்.தொடர்ந்து படிங்க ஆதரவு கொடுங்க
Deleteநன்றிங்க தனபாலன்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
ReplyDeleteமகிழ்ந்தேன்.
ReplyDeleteகவிதை துடிக்கிறதே.. உயிருள்ளதோ..
ReplyDeleteஅழகிய கவிதை...
நன்றிங்க .உங்களின் ரசனைக்கு பாராட்டுக்கள்
Deleteகவிதை ரசி ரசி என ரசிக்க வைக்கிறது!
ReplyDeleteத.ம.-10
உங்கள் ரசனை என்னை மகிழ்விக்கிறது.மேலும் நன்றாய்? எழுதத்தூண்டுகிறது நன்றிங்கம்மா
Delete
ReplyDelete'அட அட', 'பலே பலே' என்று சொல்லும்படியான கவிதை..'மழை வருகிறதே அவரைக் காணோமே', என்று கலங்கித் தவித்தாளோ என்று நினைத்தேன்..ரமணி ஐயாவின் கருத்துரையையும் பார்த்தேன்..புரிந்துகொண்டேன். அழகாக கவி படைக்கிறீர்கள்! நன்றி!
நீங்கள் நினைத்ததைப் போலத்தான் எழுதினேன்.அது நிச்சயம் புதுமணத் தம்பதிகள் தானென்று ராமனிசார் உறுதி செய்தார் .தொடர்ந்து வாங்க
ReplyDeleteசடுகுடு கவிதையா ? நன்று!
ReplyDeleteஆமாங்கையா இளசுகளின் இளமைத் திண்டாட்டங்கள்.வருகைக்கு நன்றிங்கயா
Deleteகவிதை அருமை.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்கம்மா
Deleteஅடுக்குமொழிக் கவிதை அருமை.
ReplyDeleteஉண்மைதான் அடுக்குமொழியில் முயற்சித்தேன் .வருகைக்கு நன்றிங்கம்மா
Delete