Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கல்விப்பணி செய்வீரே....

நல்ல உள்ளம் கொண்டோரே நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே இல்லா நிலையில் உள்ளோர்க்கு இதயம் கனிந்தே உதவிடுங்கள் கல்விப் பணியைச் செய்திடுங்கள் கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள் நல்லச் செயலைச் செய்வதற்கு நான்குபேரைத் தத்தெடுங்கள் காசுப் பணமாய் கொடுக்காமல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே பேசும் உலகம் உங்களையே போற்றி மகிழும் நற்செயலை இன்றைய நாளில் தவிப்போரை இயலா நிலையில் உள்ளோராம் அருகில் சென்று கேட்டறிந்து அவரை உயரச் செய்வீரே கல்விப் பணியை முடிந்தவரை கடமையாகச் செய்து வந்தால் எல்லா தெய்வமும் துணைவந்தே ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே

தெய்வத்தின் கருணைக் கிடைத்திட.....

ஏழரைச் சனியின் தாக்கத்தால் ஏற்றம் குறைந்ததாய் சொல்வோரே காலையில் எழுந்ததும் கடவுளுக்கும் கற்பூரம் காட்டி வணங்குவோரே இறைவன் செயலைக் குறைப்பதற்கே எல்லா கோவிலும் செல்வோரே ஏழை எளியவர் தவிப்பதற்கு இறைவன் காட்டும் வழியென்ன வாழ்க்கைச் சக்கரம் இதுவன்றோ மேலும் கீழும் வருமன்றோ வாழும் முறையுயே என்றிருந்து வந்தத் துயரையும் வென்றிடலாம் உள்ளக் குறையை சரிசெய்தால் உயரும் வழியைக் கண்டிடலாம் நல்லச் செயலை நாள்தோறும் நம்பிச் செய்தால் உயர்ந்திடலாம் தெய்வம் தங்கும் கோவிலாக தினமும் மனதை வைத்திருந்து தெரிந்தோர் உயர வழிசெய்தால் தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே

குண்டுத் தொல்லைக் குறையவே இல்லை

ஆணுக்கும் பெண்ணுக்கும்  ஒற்றுமை அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை ஆனாலும்  பெரிதாகத் தொல்லையில்லை அதற்குமே யாருக்கும் கவலையில்லை காலங் கடந்து  திண்பதும் கறியும் கொழுப்பும் உண்பதும் கடையில் கூடி பேசிக்கொண்டே கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம் விற்பனையில் முன்னாக வருவதற்கு வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு எத்தனையோ மருந்துகள்  உள்ளது எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு கற்பனைச்  செய்தாலும் குறையாது கண்டபடியும் சுருக்கவும் முடியாது கைவீசி நடப்போரை கடந்து கனதூரம் செல்லவே  இயலாது பட்டினிப் பசியாய் கிடந்து பழக்குவோம் உடலைக் குறைத்து பாட்டன் பாட்டி உடலைபோல பாதுகாப்போம் உடல் இளைத்து தினமும் காலையில் நடந்தே தண்ணீர் நிறையக் குடித்தே திண்பதில் கொஞ்சம் குறைத்தே திடமாய் வாழலாம் செழித்தே

புனிதக் கல்விப் பணிசெய்விரே....

மனதை ஒன்றாய் நிலைப்படுத்தி மக்களின் செயலை முறைப்படுத்தி மானுடம் போற்றி வளப்படுத்தி மனதைக் காப்போம் திடப்படுத்தி நல்லோர்  பலரின் சொல்லையுமே நலிந்தோர் சிலரின் வாழ்கையுமே கல்வியில் சிறந்த மாண்பையுமே கற்றதில் நல்லதை போற்றுவோமே இல்லா நிலையில் உள்ளவர்க்கும் இனிதே கல்வியை தொடர்பவருக்கும் பொல்லா பணத்தை கொடுக்காமல் ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள் உயரும் வழியைக் காட்டுங்கள் உழைத்தே சிறக்கும் நல்வழியை உயர்வாய் சொல்லித் தாருங்கள் இளையோர் இன்றும் நேர்மையதை இனிதாய் போற்றி வாழ்கின்றனர் துணையாய் படித்த கல்வியது தூய்மைப் படுத்தியது உண்மையன்றோ

திரண்டக் கனியைக் கசக்கினாலே...

இயற்கை அன்னைப் படைப்பிலே எத்தனையோ அற்புதங்கள் இருக்கு எண்ணற்ற உயிரினங்கள் பிழைக்க ஏரிக்குளங்கள் மலைகள் மரங்கள் அதற்கும் உயிருண்டு மகிழ்வுண்டாம் அன்னையைப் போல் சீராட்டி கற்பனைக் கெட்டா முறையில் கருவாகி உருவாகி மலருமாம் பூவும் பிஞ்சாகிக் கனியாகுமாம் புயல் காற்றையும்  தாங்குமாம் நெஞ்சம் மகிழத் தாலாட்டி கொஞ்சி வளர்த்தே மகிழுமாம் பச்சை நிறத்தில் தொங்குமாம் பார்ப்பவர் கண்ணும் கெஞ்சுமாம் பக்கம் செல்லப் பார்த்தாலே பயந்துச் சிரித்தே ஆடுமாம் மஞ்சள் நிறமாய் மாறுமாம் மனதைக் கொள்ளை யாக்குமாம் பிஞ்சு முகத்தில்  காணுமாம் பெண்ணாய் வயதைத் தீண்டுமாம் திரண்டக் கனியைக் கசக்கினாலே தீண்டும் சுவையோ அதிகமாம் மீண்டும் மீண்டும் வேண்டுமாம் மிகுந்து விளைவது சேலமாம் புரிந்ததா...? தெரிந்ததா...? இனித்ததா...?

ரசித்தவர்கள்