புனிதக் கல்விப் பணிசெய்விரே....
மனதை ஒன்றாய் நிலைப்படுத்தி
மக்களின் செயலை முறைப்படுத்தி
மானுடம் போற்றி வளப்படுத்தி
மனதைக் காப்போம் திடப்படுத்தி
நல்லோர் பலரின் சொல்லையுமே
நலிந்தோர் சிலரின் வாழ்கையுமே
கல்வியில் சிறந்த மாண்பையுமே
கற்றதில் நல்லதை போற்றுவோமே
இல்லா நிலையில் உள்ளவர்க்கும்
இனிதே கல்வியை தொடர்பவருக்கும்
பொல்லா பணத்தை கொடுக்காமல்
ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
உயரும் வழியைக் காட்டுங்கள்
உழைத்தே சிறக்கும் நல்வழியை
உயர்வாய் சொல்லித் தாருங்கள்
இளையோர் இன்றும் நேர்மையதை
இனிதாய் போற்றி வாழ்கின்றனர்
துணையாய் படித்த கல்வியது
தூய்மைப் படுத்தியது உண்மையன்றோ
மக்களின் செயலை முறைப்படுத்தி
மானுடம் போற்றி வளப்படுத்தி
மனதைக் காப்போம் திடப்படுத்தி
நல்லோர் பலரின் சொல்லையுமே
நலிந்தோர் சிலரின் வாழ்கையுமே
கல்வியில் சிறந்த மாண்பையுமே
கற்றதில் நல்லதை போற்றுவோமே
இல்லா நிலையில் உள்ளவர்க்கும்
இனிதே கல்வியை தொடர்பவருக்கும்
பொல்லா பணத்தை கொடுக்காமல்
ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
உயரும் வழியைக் காட்டுங்கள்
உழைத்தே சிறக்கும் நல்வழியை
உயர்வாய் சொல்லித் தாருங்கள்
இளையோர் இன்றும் நேர்மையதை
இனிதாய் போற்றி வாழ்கின்றனர்
துணையாய் படித்த கல்வியது
தூய்மைப் படுத்தியது உண்மையன்றோ
கல்வியின் பெருமைதனைச்
ReplyDeleteசொன்னவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் முதலில் வந்தமைக்கும் நன்றிங்க சார்
Deleteகல்வி வாணிகமாகி பல நாள் ஆய்யிற்று!
ReplyDeleteஉங்க காலமெல்லாம் மீண்டும் வராது.இப்போது வணிகமயமாகிவிட்டது
Deleteசிலர் கல்விதனை பணம் காய்ச்சும் மரமாக நினைத்து ஈரக்கொலையை அறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்..!
ReplyDeleteகல்வியின் மாண்பு உங்கள் கவிதையில் புரிகிறது அண்ணே...!
இந்த உண்மையும் புரிஞ்சுகிட்டீங்க தம்பி.இவங்களை யாராலும் மாற்ற முடியாது காரணம்.வியாபாரம்
Deleteஅரசாங்க நடத்த வேண்டிய கல்வித்துறை தனியார்க்கு தாரை வார்த்து கொடுத்ததால் அத்துறை இன்று பலத்த லாபம் கொழிக்கும் தொழிலாகிட்டு..,
ReplyDeleteகொள்ளையடிக்கும் தொழிலாகவே செய்கிறார்கள்
Deleteஉண்மை..
ReplyDeleteநன்றிங்க தம்பி
Deleteசிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்
Deleteகல்வியின் சிறப்பினையும் அதைக்காக்கும் வழியினையும்
ReplyDeleteஇனிய கவிவரிகளில் அருமையாகச் சொன்னீர்கள்.
மிகச்சிறப்பு.
வாழ்த்துக்கள்!
த ம.7
வாழ்த்துக்கு நன்றிங்க இளமதி.
Delete''...ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
ReplyDeleteஉயரும் வழியைக் காட்டுங்கள்!...'''
மிக நல்ல வரிகள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteஅழகான வரிகள்...
ReplyDeleteநல வாழ்த்துகள்...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க கடல்.சுரேஷ் அவர்களே
Deleteகல்வியின் சிறப்பை இதை விட சிறப்பாய் சொல்லத்தான் முடியுமா? அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சுரேஷ்
Deleteஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
ReplyDeleteஉயரும் வழியைக் காட்டுங்கள்
உழைத்தே சிறக்கும் நல்வழியை
உயர்வாய் சொல்லித் தாருங்கள்//
ஆம் , இது தான் முக்கியம்.
படிப்புடன், ஒழுக்கமும் கற்றுத்தர பட வேண்டும்.
நன்றாக சொன்னீர்கள்.
அருமையான கவிதை.
ஆம் உண்மைதான் ஆனால் காசு,பணம்,மணி மணி... இப்படித்தான் இருக்கிறது கல்வியின் தரம்
ReplyDeleteகல்வியின் பெருமை அருமை. நன்றி
ReplyDeleteநீங்கள் சொல்வது போன்ற கல்வி முறை சிறப்புதான்.. ம்ம் என்ன செய்வது தற்காலத்தில் பிள்ளைகளை பள்ளிகூடத்தில் சேர்த்து இயந்திரங்களை அல்லவா திரும்ப பெறுகிறோம்
ReplyDeleteஉலகமும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது அதுபோல் நாமும் மாறித்தான் ஆகவேண்டும்.நல்லதை நாம்தான் சொல்லித்தரவேண்டும்
Delete