திரண்டக் கனியைக் கசக்கினாலே...
இயற்கை அன்னைப் படைப்பிலே
எத்தனையோ அற்புதங்கள் இருக்கு
எண்ணற்ற உயிரினங்கள் பிழைக்க
ஏரிக்குளங்கள் மலைகள் மரங்கள்
அதற்கும் உயிருண்டு மகிழ்வுண்டாம்
அன்னையைப் போல் சீராட்டி
கற்பனைக் கெட்டா முறையில்
கருவாகி உருவாகி மலருமாம்
பூவும் பிஞ்சாகிக் கனியாகுமாம்
புயல் காற்றையும் தாங்குமாம்
நெஞ்சம் மகிழத் தாலாட்டி
கொஞ்சி வளர்த்தே மகிழுமாம்
பச்சை நிறத்தில் தொங்குமாம்
பார்ப்பவர் கண்ணும் கெஞ்சுமாம்
பக்கம் செல்லப் பார்த்தாலே
பயந்துச் சிரித்தே ஆடுமாம்
மஞ்சள் நிறமாய் மாறுமாம்
மனதைக் கொள்ளை யாக்குமாம்
பிஞ்சு முகத்தில் காணுமாம்
பெண்ணாய் வயதைத் தீண்டுமாம்
திரண்டக் கனியைக் கசக்கினாலே
தீண்டும் சுவையோ அதிகமாம்
மீண்டும் மீண்டும் வேண்டுமாம்
மிகுந்து விளைவது சேலமாம்
புரிந்ததா...? தெரிந்ததா...? இனித்ததா...?
ரசித்தும் சிரித்தும் படித்தேன்... நல்ல சுவைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிண்டுக்கல்லாரே,உமக்கு சிரிப்பென்ன ....
Deleteமாம்பழம் பற்றிய கவிதை அருமை ஐயா !!! வாழ்த்துகள் !!!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா.
Deleteஆஹா.... மாங்காய்....
ReplyDeleteகசக்கினால் மாம்பழம்.ருசித்துப்பாருங்க
Deletesweet mango.
ReplyDeleteஆம்.அருமையான மாம்பழம்
Deleteயப்பா அடுத்த கண்ணதாசனே நீங்கதாம் அண்ணே ஹா ஹா ஹா ஹா ருசியோ ருசி ஹி ஹி...!
ReplyDeleteஎலேய்,என்னாலே என்னென்னமோ கூவுறீங்க எனக்கு புரியலையே.ருசிக்கும் ரசிப்புக்கும் நன்றி
Deleteசந்தோசமாக சாப்பிடுங்கள் சகோதரரே :)))
ReplyDeleteஇப்போது அதிகமாய் மாம்பழம் கிடைக்கிறது விளைச்சலும் விலையும் அதிகம்தான்.உங்களுக்கும் வேண்டும்மா இங்கே வந்து பாருங்கள்
Deleteபழங்களின் அரசனை பற்றிய கவி அருமை
ReplyDeleteபழங்களை பெண்ணுக்குத்தான் நிகராய் சொல்லுவார்கள்.வருகைக்கு நன்றி
Deleteதெரிந்தது புரிந்தது இனித்தது
ReplyDeleteசார் ருசித்ததான்னு சொல்லவே இல்லையே.வருகைக்கு நன்றி
Deletetha.ma.5
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteபுரிந்ததா...? தெரிந்ததா...? இனித்ததா...? - சேலத்து மாங்கனி உங்கள் கவிதையில் வந்து ஆடுகிறது.
ReplyDeleteஆமாம் அய்யா.எனக்கு சேலம்தான் சொந்த ஊருங்க.வருகைக்கு நன்றிங்க அய்யா
Deleteசெம செம சார் ... வாழ்த்துக்கள்
ReplyDeleteஅப்படியா சாப்பிடீங்களா?வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அரசன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசேலத்து மாம்பழத்திற்கு
ReplyDeleteநீளமாய்க் கவிபடித்தீர்
காலத்திற்கு கவியரசாக
ஞாலத்தில் உயர்ந்திடுவீர்!
பழம்போன்ற இனிமை கொண்ட கவி தந்தீர் சகோதரரே!
வாழ்த்துக்கள்!
த ம.7
எங்க ஊரு மாம்பழம் எப்போதுமே இனிக்கும் .தப்பாது சுவைக்கும் .வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteமாம்பழம் கவிதை மாம்பழமாய் இனித்தது! அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteசேலத்துக்காரரே!புரிந்தது!
எங்க ஊரு பழமாக்கும் எல்லாமே சுவையாகும்.வருகைக்கு நன்றிங்கய்யா
ReplyDeleteஉங்கள் ஊர் மாம்பழத்துக்கு சிறப்பான கவிதையால் மகுடம் சூட்டி விட்டீர்கள்!
ReplyDeleteஉண்மைதான்.எங்க ஊரு மாம்பழம் எல்லோருக்குமே பிடிக்குமே.வருகைக்கு நன்றிங்க
Deleteசேலத்து மாம்பழத்தின் சுவையே தனிதான். சுவைக்கு மேலும் மெருகூட்டுகிறத தங்களின் கவிதை. நன்றி
ReplyDeleteஎங்க ஊரு மாம்பழம்போல என் கவிதையும் சுவையாகத் தானிருக்கும்
Deleteபுரிகிறது! இனிக்கிறது!
ReplyDeleteதெரிகிறதா ? வருகைக்கு நன்றிங்க
Deleteசேலத்து மாம்பழங்களுக்கு ஈடு உண்டோ... அருமையான கவிதை சார்...
ReplyDeleteகருத்துக்கும் கனிவுக்கும் நன்றிங்கம்மா.
Deleteசேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அல்லவா!
ReplyDeleteகவிதை அருமை.
நானும் சேலம்தான் .என்கவிதையும் சேலத்துக் கவிதைதான்.வருகைக்கு நன்றிங்க
Delete