Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

துயரங்கள் தொலைந்து போகும்

துயரங்கள் தொலைந்து போகும் ஆம் மறந்தால் துயரமும் மறைந்து விடும்.மறக்க முயற்சிக்க வேண்டும்  எல்லோருக்குமே மனதில் இனம்புரியாத வலி இருந்துகொண்டுதான்  வரும்.யாருக்குமே துன்பமோ துயரமோ இல்லாத வாழ்க்கை அமைவதில்லை. சிலபேர் சொல்லுவதுண்டு நான் எப்போதுமே துன்பப்படவில்லை என்று ஆனால் உண்மை அல்ல. வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சியை உணர முடியும் என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்ள வேண்டும் .இந்த அனுபவத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியவே முடியாது.அப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது காரணம் அவர்களுக்காக வேறுயாரேனும் கஷ்டப்பட்டிருப்பார்கள். துயரை உணர்ந்தால் தெளிவு பிறக்கும். காரணம் தெரியும் அதனால் மீண்டும் அவ்வாறு நடக்குமுன் நம் மனது நம்மை எச்சரித்துவிடும்.எல்லோருமே எப்போதுமே நிம்மதியாக இருப்பதில்லை.சின்னச்சின்ன விஷயங்களிலும் நாம் கோபப்படவோ எரிச்சலடையவோ இருப்பதன் காரணம்  அதனால் ஏற்பட்ட மனகஷ்டமே நம்மை அவ்வாறு செய்யச்சொல்கிறது. வாழ்கையில் ஓவ்வொரு நிலைகளில் துயரப்பட்டிருப்போம் ஒவ்வொருவரும் துன்பப்பட்டிருப்போம்.இதுதான் வாழ்கையின் பரிணாம நிகழ்வு.நம்மையே மறந்து நாம் செ

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஆசிரியை. நான் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கும்போது எனக்குப் பிடித்த ஆசிரியையை  இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நல்ல சிகப்பாய் மிகவும் அழகாக இருப்பார்கள் .அடிக்கவே மாட்டார்கள்.கன்னத்தை கிள்ளி செல்லமாய் முத்தமிடுவார்கள்.இன்னும் அவரின் முகமும் முத்தமும் அன்பும்  நினைவில் இருக்கிறது.  அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் இரண்டாவது படிக்கும்போது  . மதிய நேரத்தில் நிறைய மாணவர்கள் தூங்கி வழிவார்கள் நானும் அப்போது அப்படித்தான் தூங்கினேன். இதை மறுக்க யாராலும் முடியாது அப்போதைய வயது அப்படித்தான் இருக்கும்.ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் கதை சொல்ல தொடங்கினால் எல்லோருமே தூங்காமல் இருந்ததுண்டு அப்போதெல்லாம் நல்ல கான்கிரீட் கட்டிடங்கள் இருக்கவில்லை  ஓடுபோட்ட கூரைகள்தான் இருந்தது. ஆனால் நல்ல உஷ்ணமான காற்றோட்டமாய்  இருக்கும்.அவ்வாறான மதிய வேளையில் சில நேரங்களில் நானும் அசந்து தூங்கி வழிந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் சிறு குச்சியை வைத்து அடிப்பதுபோல்  மிரட்டுவார்கள். இன்னும் சில ஆசிரியர்களோ வீட்டுப்பாடம்  எழுதாமல் தல

கல்விக் கற்க உதவுங்கள்

பணம் மட்டும் வாழ்வாகாது பணத்தை  உண்ண முடியாது பணமும்  குணத்தை வாங்காது பணமே வருந்தி அழாது மனிதம் கண்டு மகிழுங்கள் மக்கள் மனதில் நில்லுங்கள் மட்டில்லாத உதவி செய்து மற்றோர் மனதில் வாழுங்கள் நேரில் பார்க்கா தெய்வத்தை நேர்மை இருந்தால் காணலாம் நன்மை நாளும் செய்தாலே நன்றே மகிழ்ந்து காணலாம் உண்மை உழைப்பு சத்தியத்தை உலகில் அனைவரும் போற்றியும் பெண்ணை மதித்து வாழ்ந்தாலே பேரும் புகழும் கிடைக்குமே கல்விக் கற்க உதவுங்கள் கருணை கொண்டே செய்யுங்கள் கஷ்டம் கொண்டே படிப்போரை கண்டு உதவி செய்யுங்கள் படிக்கும் பிள்ளைகள் யாவருமே பதராய் போக மாட்டார்கள் பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே

இனிவேண்டாம் என்தாயே

பழிவாங்கும் செயலாலே பாவம் மட்டும் குறையுமா பாரம் அதிகமாய் மாறுமா பழியும் உன்னோடு சேருமா மொழியாலே சின்னக் கணைவீசி முறையின்றி சொன்ன வார்த்தை வினையாக  எனைக் தாக்குமா விதிமாறி உன்னை வெல்லுமா வயதான காலத்தில் வேண்டுமா வாழ்த்துகிற நிலையும் மீறுமா தடையான காரணம் என்ன தயை கூர்ந்து சொல்வாயா விதியோடு விளையாடும்  நீ வீணான மதிகொள்ளக் காரணம் விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா விடுத்தவர் கல்வியின் கொள்கையா இனிவேண்டாம் என்தாயே இப்போதே இதை நிறுத்திவிடு இளவலைநீ  அன்பாலே வாழவிடு இனிமையை இனியேனும்  காணவிடு மதிகெட்டேன் மனையை விட்டேன் மருத்துவம் விரும்பியே இழந்தேன் இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை இனியாவது விதியை மாற்றிவிடு

மனிதம் போற்றி வாழுங்களேன்

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்துப் பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் திண்ணைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

ரசித்தவர்கள்