துயரங்கள் தொலைந்து போகும்
துயரங்கள் தொலைந்து போகும் ஆம் மறந்தால் துயரமும் மறைந்து விடும்.மறக்க முயற்சிக்க வேண்டும் எல்லோருக்குமே மனதில் இனம்புரியாத வலி இருந்துகொண்டுதான் வரும்.யாருக்குமே துன்பமோ துயரமோ இல்லாத வாழ்க்கை அமைவதில்லை. சிலபேர் சொல்லுவதுண்டு நான் எப்போதுமே துன்பப்படவில்லை என்று ஆனால் உண்மை அல்ல.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சியை உணர முடியும் என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்ள வேண்டும் .இந்த அனுபவத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியவே முடியாது.அப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது காரணம் அவர்களுக்காக வேறுயாரேனும் கஷ்டப்பட்டிருப்பார்கள்.
துயரை உணர்ந்தால் தெளிவு பிறக்கும். காரணம் தெரியும் அதனால் மீண்டும் அவ்வாறு நடக்குமுன் நம் மனது நம்மை எச்சரித்துவிடும்.எல்லோருமே எப்போதுமே நிம்மதியாக இருப்பதில்லை.சின்னச்சின்ன விஷயங்களிலும் நாம்
கோபப்படவோ எரிச்சலடையவோ இருப்பதன் காரணம் அதனால் ஏற்பட்ட மனகஷ்டமே நம்மை அவ்வாறு செய்யச்சொல்கிறது.
வாழ்கையில் ஓவ்வொரு நிலைகளில் துயரப்பட்டிருப்போம் ஒவ்வொருவரும் துன்பப்பட்டிருப்போம்.இதுதான் வாழ்கையின் பரிணாம நிகழ்வு.நம்மையே மறந்து நாம் செய்யும் செயல் சிலருக்கு வேதனையைத் தந்திருக்கலாம் இப்படி ஏதேனும் ஒரு காரணமாய் நாமே இருந்திருக்கலாம்.அது நாமே காரணமாய் இருப்பதாய் சொல்லமுடியாது.
சில நேரங்களில் உதவி செய்ய எண்ணி நாமும் தெரிந்தே அவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு அதையும் நாமே ஏற்றுக்கொள்கிறோம். அப்படி அடுத்தவருக்கு உதவியாக செய்து வரும் துன்பம் உங்கள் கணக்கில் சேராது அடுத்தவர் நலனில் அக்கறைக்கொண்டு நம்மை நாமே தெரிந்தே வருத்திக்கொளவது துன்பமாகாது.
ஏண்டா வம்பை விலை கொடுத்து வாங்கினோம் என்று வருந்துவதுண்டு அது தவறு.அங்கே உங்களால் ஒரு நல்ல தெளிவான நிகழ்வைக் காணமுடிந்தது அதற்காக நீங்கள் செய்த, உணர்ந்த, செலவிட்ட நேரமோ பணமோ குறைவுதான் ஆனால் கிடைத்த அனுபவம் வாழ்கையில் உங்களுக்கு நல்லச் செய்தியை படிப்பினையைத் தரும்.
இவ்வாறு நாம் செய்த அறிந்த செயல்களினால் உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவருக்கோ அல்லது மற்றவருக்கோ ஒரு நிகழ்வினால் நல்லப் பாடத்தை சொல்லித்தரும் வாய்ப்பைப் பெற்று அதனால் நீங்களுமே அதன் நிலையை உணரமுடிகிறது.அவ்வாறு உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது அல்லது தவிர்ப்பது என்பதுபோன்ற தெளிவு கிடைக்கும்'
எனவே துன்பமோ துயரமோ நமது வாழ்க்கைப் பாதையில் தவறாக நிற்பதில்லை .அப்படி நின்றாலும் அதைத்தவிர்த்து சரியான வழியைத் தேர்ந்தெடுத்து சரியான பாதையில் செல்ல அறிவுறுத்தும்.ஆம் துன்பமும் நமக்குத் தெளிவைத்தரும் துயரங்களும் நம்மைக் கடந்துபோகும்.
---கவியாழி---

ஆம் (இ)எதுவும் கடந்து போகும்...
ReplyDeleteநன்றிங்க நண்பரே .கடந்துபோகும் கவலைவேண்டாம்
Deleteநமக்கு வரும் துன்பங்கள் எல்லாமே அடுத்து வரப்போகும் நம் பயணத்திற்குப் பாதையைச் செப்பனிடும் முயற்சிகளாகக் கருதினால் வாழ்வு இனிக்கும் என்பது பெரியோர் கண்ட முடிவு.. - கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.
ReplyDeleteNநன்றிங்க நீங்க சொல்வதும் உண்மைதான்
Deleteநேற்று பதிவுப் பக்கமே காண முடியவில்லை
ReplyDeleteஇன்று ஒரு தத்துவப் பதிவு
காரணம் புரியவில்லை
பதிவின் மூலம்
எங்கள் மனப் பாரத்தையும்
குறைக்க வழி சொன்னமைக்கு நன்றி..
வாழ்த்துக்களுடன்....
நன்றிங்க சார்..சிறிதுகாலம் ஓய்வு வேண்டியுள்ளது
Deletetha.ma 2
ReplyDeleteநம் இருவரின் மன அலைகள் ஒன்றுபோல் தோன்றுகிறதே ...இன்றைய என் பதிவு ..
ReplyDelete#வாழ்க்கை தத்துவமே இதிலே அடங்கி இருக்குது !
உரிக்கும்போது கண்ணில் நீரை வரவழைத்த வெங்காயம்தான் ...
நாவிற்கு சுவையாய் இருக்கிறது !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீர் வருகிறது
கடந்த பின் மகிழ்ச்சியும் வருகிறது !#
தொடர்ந்து பயணிப்போம் கவியாழி!
இதெல்லாம் வயசுக்கோளாறு .அப்பப்ப வரத்தான் செய்யும் கடமைக்காக
Deleteநல்ல பகிர்வு அண்ணா....
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்...
ஆம்.கடந்தும் போகும்
Deleteதுன்பமும் நமக்குத் தெளிவைத்தரும் துயரங்களும் நம்மைக் கடந்துபோகும்.
ReplyDeleteவாழ்க்கை தத்துவம்
பட்டாத்தானே தத்துவமே வருது என்ன செய்ய?
Deleteதுன்பமும் இன்பமும் வாழ்வின் இருபகுதிகள்! சிறப்பான பகிர்வு நன்றி!
ReplyDeleteஆம்.உண்மைதான் சுரேஷ்
Delete//வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சியை உணர முடியும்// நிதர்சனமான உண்மை வரிகள். துன்பங்களிலிருந்து எதிர் நீச்சல் போடக் கற்று கொண்டால் பிறவிக்கடலை எளிதாகக் கடக்க முடியும். வந்த துன்பங்கள் அனைத்தும் நம்மை வளப்படுத்த வந்தவையே என எண்ணி துன்பத்தை மறந்து அது கற்றுக் கொடுத்த பாடத்தை மனதில் வைக்க வேண்டும். அருமையான, சிந்தனை மிக்க பகிர்வுக்கு நன்றி அய்யா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் நன்றிங்கையா
Deleteசில நேரங்களில் உதவி செய்ய எண்ணி நாமும் தெரிந்தே அவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு அதையும் நாமே ஏற்றுக்கொள்கிறோம். அப்படி அடுத்தவருக்கு உதவியாக செய்து வரும் துன்பம் உங்கள் கணக்கில் சேராது //
ReplyDeleteநன்மைசெய்து துன்பம் வாங்கும் இதயம் கேட்பேன்! என்ற கவியரசரின் வரிகள் ஞாபகம் வந்தன! அருமையான சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றி!
தங்களின் வருகைக்கு நன்றிங்க
Deleteதுயரத்திற்கு (பதிவிற்குத்தான்) காரணம் என்ன?
ReplyDeleteஉங்களுக்குத் தெரியாததா?
Deleteதுன்பமும் நமக்குத் தெளிவைத்தரும் துயரங்களும் நம்மைக் கடந்துபோகும்.//
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை.
துயரங்கள் தொலைந்து போகும் ஆம் மறந்தால் துயரமும் மறைந்து விடும்.மறக்க முயற்சிக்க வேண்டும்.....சரியாகத்தான் சொன்னீர்கள் அண்ணேன் ஆனால் மறக்கத்தான் முடியவில்லை
ReplyDeleteமறதி ஒரு நோய் என்கிறார்கள் எல்லா நோயும் வருது மறதி நோய்தான் வரமாட்டேங்கிறது...
வயதானால் தானாய் வந்துவிடும் .அதுவரை அவஸ்தைதான் என்ன செய்ய?
Deleteதுயரங்களும் நம்மைக் கடந்துபோகும்.இதுவே நியதிசார்.
ReplyDeleteஆமாங்க கடந்தே ஆகவேண்டும்
Deleteஇதுவும் கடந்து செல்லும் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்