இனிவேண்டாம் என்தாயே
பழிவாங்கும் செயலாலே
பாவம் மட்டும் குறையுமா
பாரம் அதிகமாய் மாறுமா
பழியும் உன்னோடு சேருமா
மொழியாலே சின்னக் கணைவீசி
முறையின்றி சொன்ன வார்த்தை
வினையாக எனைக் தாக்குமா
விதிமாறி உன்னை வெல்லுமா
வயதான காலத்தில் வேண்டுமா
வாழ்த்துகிற நிலையும் மீறுமா
தடையான காரணம் என்ன
தயை கூர்ந்து சொல்வாயா
விதியோடு விளையாடும் நீ
வீணான மதிகொள்ளக் காரணம்
விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா
விடுத்தவர் கல்வியின் கொள்கையா
இனிவேண்டாம் என்தாயே
இப்போதே இதை நிறுத்திவிடு
இளவலைநீ அன்பாலே வாழவிடு
இனிமையை இனியேனும் காணவிடு
மதிகெட்டேன் மனையை விட்டேன்
மருத்துவம் விரும்பியே இழந்தேன்
இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை
இனியாவது விதியை மாற்றிவிடு
பாவம் மட்டும் குறையுமா
பாரம் அதிகமாய் மாறுமா
பழியும் உன்னோடு சேருமா
மொழியாலே சின்னக் கணைவீசி
முறையின்றி சொன்ன வார்த்தை
வினையாக எனைக் தாக்குமா
விதிமாறி உன்னை வெல்லுமா
வயதான காலத்தில் வேண்டுமா
வாழ்த்துகிற நிலையும் மீறுமா
தடையான காரணம் என்ன
தயை கூர்ந்து சொல்வாயா
விதியோடு விளையாடும் நீ
வீணான மதிகொள்ளக் காரணம்
விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா
விடுத்தவர் கல்வியின் கொள்கையா
இனிவேண்டாம் என்தாயே
இப்போதே இதை நிறுத்திவிடு
இளவலைநீ அன்பாலே வாழவிடு
இனிமையை இனியேனும் காணவிடு
மதிகெட்டேன் மனையை விட்டேன்
மருத்துவம் விரும்பியே இழந்தேன்
இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை
இனியாவது விதியை மாற்றிவிடு
இனிவேண்டாம்... வேண்டவே வேண்டாம்...
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteமொழியாலே சின்னக் கனைவீசி...//
ReplyDeleteஇதில் வருகின்ற கனை என்ற சொல் சரிதானா? கணை வீசி என்று வரவேண்டுமோ?
எப்படிங்க தினம் ஒரு கவிதை எழுத முடியுது? நாலு நாளைக்கு ஒரு கட்டுரை எழுதறதே பயங்கர விஷயம்.
கற்பனை சக்தியுடன் மனதில் உதிப்பவற்றை கவிதை வடிவில் தருவது என்பது மிக, மிக கடினம். பேர் சரியாகத்தான் வைத்துள்ளீர்கள். கண்ணதாசனின் படைப்புகளிலேயே அவர் இறுதியில் எழுதிய இயேசு காவியம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அத்தனை அருமையாக பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதியிருந்தார்.
ReplyDeleteஇனிவேண்டாம் என்தாயே
இப்போதே இதை நிறுத்திவிடு
இளவலைநீ அன்பாலே வாழவிடு
இனிமையை இனியேனும் காணவிடு//
அருமை அருமை
இனிய சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்
//இனிவேண்டாம் என்தாயே
ReplyDeleteஇப்போதே இதை நிறுத்திவிடு//
அருமையான வரிகள் ஐயா.. தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
த.ம.4
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteபழி வாங்கும்போது வாங்குபவர் பழியைத் தன்னுடன்
ReplyDeleteசேர்க்கின்றார்! அதுவும் நல்லதல்ல.
வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டாம் இதனை!...
அருமையான கவிதை!
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் சகோ!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteபழிவாங்கும் எண்ணம் அழிவுக்கே வழி வகுக்கும் .மனமொத்த
ReplyDeleteவாழ்வோடு வாழ்ந்திருக்க அனைவருக்கும் என் இனிய விநாயகர்
சதுர்த்தி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteஒரு நிகழ்வை உணர்த்து போல் இருக்கிறது. உண்மைதானா?
ReplyDeleteகவிதை அருமை
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteகவிதை அருமை அய்யா, பழி வாங்கும் எண்ணம் நம்மை பாதாளத்திற்குத் தான் இழுத்துச் செல்லும். சமீபத்திய நாட்டு நடப்புகள் எண்ணும் போது சரியான நேரத்தில் எழுதப்பட்ட கவிதையாக எனக்குத் தோன்றுகிறது. நன்றி அய்யா.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteகவிதை அருமை ஐயா
ReplyDeleteஆனாலும்
ஏதோ ஒரு நிகழ்ச்சியின்
வேதனை வெளிப்பாடாய்
தோன்றுகின்றது.
இதுவும் கடந்து போகும்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteமனது நொந்தாலும் கவிதைதான் உங்களுக்கு ஆறுதல் போலிருக்கிறதே !புண் பட்ட மன வேதனை தீரட்டும்!
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
Deleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
ReplyDeleteபழி வாங்குதல் என்று போய் விட்டால் தொடர்ந்து கொண்டே இருக்கும்! மன்னித்தல் சிறப்பு! சிறப்பான படைப்பு! நன்றி!
ReplyDeleteமன்னிக்கவும் மனம் வேண்டுமே
ReplyDelete