இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்
இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன் இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன் மார்புக்குள் அவளை அணைத்தேன் மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள் சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள் செழுமையாய் உரிமையாய் இணைந்தே சேதியை முடித்தேன் ருசித்தேன் பூவுக்குள் தேனை எடுத்தேன் புரிந்ததும் பார்வையாலே சிரித்தாள் தூறலும் நின்றது மகிழ்ச்சியாய் தூரத்தில் தெரிந்தது வானவில் மார்புக்குத் திரைப் போட்டு மனதிலே அசைப் போட்டு ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள் உண்மையான சிறந்த நாட்களே யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ