மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்
மின்னலிடைக் கொடியாள் வானத்தில்
மேகத்தின் மேனியெல்லாம் தழுவி
கன்னலென இருந்தக் கார்மேகத்தை
வண்ண ஒளிவீசிச் சிரித்தாள்
எண்ணம் எனக்கோ தெரியாமல்
என்ன சொல்வதெனப் புரியாமல்
சின்ன விழியிரண்டை மூடினேன்
சில்லென்ற காற்றில் தேடினேன்
கன்னம் சிவந்த கயல்விழியால்
கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள்
தின்ன மறந்த தேன்பலாவின்
திகட்டாத சுவையை மறுப்பேனா
இன்னும் வேண்டுமென எப்போதுமே
இனிமையான சுவையைத் தீண்டியே
உண்ண விரும்பும் அவளை
உதறித் தள்ளி விடுவேனா
ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின்
ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா
ஓய்வாய் அருகில் அமர்ந்தேன்
ஒருகிழி நடுவில் கிழித்தேன்
இலை மறை காயாக இடைவெளி தெரிந்தது ,கண்டு மகிழ்ந்தேன் !
ReplyDeleteநம்பள்கியின் படர் தாமரை நினைவுக்கு வந்தது !
த.ம 2
பார்த்துடீங்களா ? மிக்க மகிழ்ச்சி
Deleteஎன்ன சொல்லவருகிறீர்கள் என்பதைத் தயவு செய்து சொல்லிவிடுங்கள் ஐயா! சின்ன விழி என்கிறீர்கள்; பலாச்சுளை என்கிறீர்கள்..இடைவெளி என்கிறீர்கள்! ....(வீட்டில் தெரியுமா இதெல்லாம்?)
ReplyDeleteதெரியாது என நடிக்காதீர்கள் (வீட்டில் தெரியுமா இதெல்லாம்?) கேள்வி மட்டும் குறைச்சல் இல்லை?
Deleteம்ம்.... நடக்கட்டும்....
ReplyDeleteஎழுதிப் பார்த்தேன்
Deleteபாவலரே..
ReplyDeleteகனவுக் கவிதையோ..??
ஆயினும் அழகுணர்ச்சி மிளிர்கிறது...
நன்றிங்க மகேந்திரன்.எல்லாம் கடந்த கால நினைவுகள்
Deleteஅண்ணிக்கு தெரியுமா!?
ReplyDeleteஅழுதுடுவேன்......ஹாங்....
Deleteஎன்ன சொல்லவருகிறீர்கள் என்பதைத் தயவு செய்து சொல்லிவிடுங்கள்
ReplyDeleteVetha.Elangathilakam.
தொடருங்கள் தெளிவு கிடைக்கும் அடுத்தப் பகுதியில்
Deleteஇனிக்கும் கவிதை! அருமை! நன்றி!
ReplyDeleteநன்றிங்க சுரேஷ்
Deleteசகோதரருக்கு வணக்கம்..
ReplyDeleteகற்பனைக் கவிதை என்பதை முன்னுரையாக சொல்லி விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. நல்ல சிந்தனை. சின்ன விழி இரண்டையும் உருட்டி தான் பார்க்கிறேன் எதும் புரியல. நன்றி.
தொடருங்கள் புரியும் தெளிவாய் சொல்வது புரியும்
Deleteகவிதை இன்னும் வரவேண்டுமோ ? அல்லது முடிந்துவிட்டதா.
ReplyDeleteஆம். இன்னும் முடிக்கவில்லையே
Deleteஆட்ட்காசமான பதிவு; தமிழ் மனம் பிளஸ் +1
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
Delete