பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............
பேயும் இருந்தால் நன்றே
பேதைமை கொள்வோரைக் கடித்தே
போதையும் கொண்டே மீண்டும்
பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே
அரக்கனை அழிக்க வேண்டாம்
அவனையே வாழவும் வைத்தால்
அத்தனை திருடனையும் கொன்றே
அகிலமும் சிறக்கும் நன்றே
உணவில் கலப்படம் செய்வோர்
உரிமையை மறுத்திடும் முதலாளி
ஊரையே சுரண்டும் தலைவன்
ஊழலை வளர்க்கும் மனிதன்
சோம்பலை விரும்பும் மக்கள்
சொன்னதைக் கேட்கா இளைஞன்
சுரண்டலைச் செய்யும் அரசியலார்
சுற்றித் திரியும் சோம்பேறி
உழைக்க மறுக்கும் கணவன்
ஊதாரி செலவிடும் பெண்கள்
உடலை வருத்தா ஊழியன்
உண்மையே சொல்லாத் திருடன்
நாளையை விரும்பா மாணவன்
நாணயம் இல்லா ஆசிரியர்
நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே
நாளும் வட்டிக் கேட்பவன்
போன்றோரைக் கொன்று வதைக்கவே
போக்கிடம் இன்றி அலைந்தே
பொழுதும் கொல்லுதல் செய்தே
பேயும் வாழட்டும் மகிழ்ந்தே
=======கவியாழி======
பேதைமை கொள்வோரைக் கடித்தே
போதையும் கொண்டே மீண்டும்
பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே
அரக்கனை அழிக்க வேண்டாம்
அவனையே வாழவும் வைத்தால்
அத்தனை திருடனையும் கொன்றே
அகிலமும் சிறக்கும் நன்றே
உரிமையை மறுத்திடும் முதலாளி
ஊரையே சுரண்டும் தலைவன்
ஊழலை வளர்க்கும் மனிதன்
சோம்பலை விரும்பும் மக்கள்
சொன்னதைக் கேட்கா இளைஞன்
சுரண்டலைச் செய்யும் அரசியலார்
சுற்றித் திரியும் சோம்பேறி
உழைக்க மறுக்கும் கணவன்
ஊதாரி செலவிடும் பெண்கள்
உடலை வருத்தா ஊழியன்
உண்மையே சொல்லாத் திருடன்
நாளையை விரும்பா மாணவன்
நாணயம் இல்லா ஆசிரியர்
நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே
நாளும் வட்டிக் கேட்பவன்
போன்றோரைக் கொன்று வதைக்கவே
போக்கிடம் இன்றி அலைந்தே
பொழுதும் கொல்லுதல் செய்தே
பேயும் வாழட்டும் மகிழ்ந்தே
=======கவியாழி======
இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் பேயும் வாழட்டும்...!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நண்பரே
Deleteஇப்படிப்பட்ட ஒரு பேயிருந்தால் அதுவும் வாழட்டும்
ReplyDeleteமற்றவரையும் நன்று வாழவைக்கட்டும்
அருமை ஐயா
வருகைக்கு நன்றி
Deleteவித்தியாசமான ஆசை. அந்தப் பேய் அவர்களை மட்டுமே கொல்ல வேண்டுமே... நல்ல மனம் கொண்டோரையும் சேர்த்தே கொன்றால்...? :)))))
ReplyDeleteஅப்படி அந்தப் பேய் நல்லவங்களை ஒன்றும் செய்யாது
Deleteஇப்படிப்பட்ட பேய் இருந்தால் கள்ளன் நல்லவன் ஆகிருவான் - அருமை...!
ReplyDeleteஉண்மைதான் மனோ. திருத்த வந்தப் பேய் அல்லவா?
Deleteகெட்டவர்களை மட்டுமே ஆட்டிப்படைக்கும் நல்ல பேய் போல!!
ReplyDeleteஆமாம்.கெட்டவங்களை மட்டுமே அழிக்கும்
Deleteஇந்த பேய்களை அந்நியன் என்றும் ,இந்தியன் என்றும் சினிமாவில் பார்த்தோம் .நேரில் ...?பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்ற பாரதியாரின் வரிகள் நினைவில் வருகிறது !
ReplyDeleteஇன்று பணம் திண்ணுவோரைத் தின்றால் தவறில்லையே
Deleteவாழ்த்துகள் அய்யா...
ReplyDeleteபேயும் வாழட்டும்...!
நன்றிங்க வெற்றிவேல்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபயந்திட்டீங்களோ?
Deleteபேயும் வாழட்டும்! வித்தியாசமான கவிதை...
ReplyDeleteஅருமையான கவிதை! வித்தியாசமான தலைப்பு! அருமை! நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteவித்தியாசமான சிந்தனை சகோதரரே.
ReplyDeleteசங்க இலக்கியங்கள் கூறும் சதுக்கப் பூதம் போல் இந்த பேயும் போல. இதையெல்லாம் செய்யும் இந்த பேய் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழட்டும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே..
ஆம்.வாழவேண்டும் இப்படியானவர்களைத் தின்றே வாழவேண்டும்
Deleteதீயோரையும் நல்லோர் ஆக்க வேண்டும் இந்த பேய்.
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.
ஆம்.நல்லவர்களாய் மாற்றும்
Deleteகவிதை அருமை ஐயா.
ReplyDeleteநன்றிங்க குமார்
Delete''..பேதைமை கொள்வோரைக் கடித்தே
ReplyDeleteபோதையும் கொண்டே மீண்டும்
பேயும் வதைக்கட்டும் ...'''
god idea...
Vetha.Elangathilakam.
வதைக்கவே வரவேற்கிறேன்
Deleteசமுதாய நோக்குள்ள பேய்... மிக அருமை ஐயா!
ReplyDeleteஉண்மைதான்.இப்படியும் வேண்டும்
Deleteமாறுபட்ட அருமையான சிந்தனை
ReplyDeleteபடித்து அகமகிழ்ந்தேன்
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteபேய் பிசாசு பூதம் இவையெல்லாம் அஞ்சி நடுங்கும் ஒரு விலங்கு இப்போது உலகில் உள்ளது கவிஞரே..
ReplyDeleteஅப்படியா? இத்தியாவுக்கு வரச்சொல்லுங்களேன்
Deleteநன்றிங்க சார்
ReplyDelete