தெய்வங்கள்

தெய்வங்கள்

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்


இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்
இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன்
மார்புக்குள் அவளை அணைத்தேன்
மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே
சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள்
செழுமையாய் உரிமையாய் இணைந்தே
சேதியை முடித்தேன் ருசித்தேன்

பூவுக்குள் தேனை எடுத்தேன்
புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள்
தூறலும் நின்றது மகிழ்ச்சியாய்
தூரத்தில் தெரிந்தது வானவில்

மார்புக்குத் திரைப் போட்டு
மனதிலே அசைப் போட்டு
ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள்
உண்மையான சிறந்த நாட்களே

யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை
எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல
ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை
ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

Comments

  1. அந்த கண்ணதாசனை காண்கிறேன் இந்த கவியாழி கண்ணதாசன் வரிகளில் !
    த.ம 2

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  2. Replies
    1. மகிழ்ந்தேன்.தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  3. கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  4. //மார்புக்குத் திரைப் போட்டு
    மனதிலே அசைப் போட்டு
    ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள்
    உண்மையான சிறந்த நாட்களே
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  5. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  6. "தூரத்தில் தெரிந்தது வானவில்" என்கிறீர்களே, அப்படியானால் மாலை மயங்கி இரவு இன்னும் வந்திருக்காத நேரத்திலா (அதாவது மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கா) இவ்வளவு கூத்தும் நடந்தது?......

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  7. அருமை சகோதரரே.
    கவிவரிகள் அனைத்தும் மனதை கவ்வி இழுக்கிறது. தங்களின் சிந்தனை சிறப்பு. அழகான கவிகளை அசராமல் கொடுத்துக் கொண்டே இருக்கீறீர்கள் தொடரட்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. சிறந்த பதிவு,
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாவு நல்வரவாகுக.பாராட்டுக்கு நன்றி

      Delete
  9. Replies
    1. தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  10. Replies
    1. தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  11. கவிதை மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete
  12. ரசித்தேன்.... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாவு நல்வரவாகுக

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more