Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நல்லதைச் சொல்லிடும் நட்பு

நல்லதைச் சொல்லும்  நட்பு நாடகம் போலவே இன்றி நன்மையே செய்திடும் வல்லமை நட்புக்கு உண்டாம் உண்மையே எல்லையே இல்லையாம் அன்புக்கு ஏக்கமாய் இருக்குமாம் பார்ப்பதற்கு தொல்லையே இல்லாத நட்பினால் துன்பமும் விலகிடும் இன்பமாய் உள்ளதைக் கொண்டே தொடருமாம் உண்மையைப் பேசியே மலருமாம் ஊரும்  மாறிப் போனாலும் உண்மை நட்பு மாறாது பணத்தால் விலையோ போகாது பண்பால் மறக்கக் கூடாத மனத்தால் அன்றி நல்லன்பை மனிதன் பெறவே முடியாது நல்லவை மட்டுமே செய்யுமாம் நன்மைத் தீமையைச் சொல்லுமாம் எல்லையைத் தாண்டிய அன்புக்கு எளிதில் பிரிவும் இல்லையாம் பிள்ளைகள் பிறந்த பின்புமே பேரனைப் பார்த்துச் சொல்லுமாம்  நடந்ததை மகிழ்ந்ததைச் சொல்லியே நகைச்சுவை பொங்கச் செய்யுமாம் -------கவியாழி--------

சீக்கிரம் எழுந்து விடுவாள்.........

ஏக்கம் மனதில் வளர்த்தே எப்போதும் நம்மைக் காத்து தூக்கம் கெட்டும் நமக்காய் -வாழ்வைத் தொலைக்கும்  உத்தமி அவளே ஆத்திரம் மனதில் வந்தால் அதையும்  உள்ளுள் வைத்தே அன்புடன் அடக்கி இருந்தே-நம்மை ஆசைக் கோபமாய்க் கடிவாள் சாத்திரம் அனைத்தும் படித்து சரியெனப் பட்டதை மட்டுமே சீக்கிரம் விளக்கிச் சொல்லி-கதையாய் சிறந்திடப் புரிந்திட வைப்பாள் மிச்சம் மீதியைத்  தின்று மேனியைக் கெடுத்தும் நமக்காய் உச்சி முகந்தே அருகில்-தொட்டு உண்மை மகிழ்ச்சியைத் தருவாள் சீக்கிரம் எழுந்து விடுவாள் சேவைகள் பலதும் செய்வாள் சிந்தனை நமக்காய்ச் சுமந்து-மனதால் சிரித்தே சமைத்துத் தருவாள் சீருடன் உடம்பை மதியாள் சீக்கிரம் தூங்க மாட்டாள் பாத்திரம் அனைத்தும் கழுவி-இறுதியில் படுத்து உறங்கச் செல்வாள் அவள்தான் பெற்ற அன்னை.....

உடலும் கழிவாய் மாறும்...

உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை  புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை  போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும்  உள்ள போதே உரிமை  கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......

பாம்பும் தேளும் பூரானும் பார்த்தே ஓடி மறைந்திடுமாம் பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப் பயந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டிடுமாம் விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு வீணாய் நம்மைத் துரத்திடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினால் வேற்றுமை வந்தே பிரித்திடுமாம் விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில் வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற  பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால் இருப்பதைக் கொடுப்பதும்  நலமாகும் சோதனை  துயரம் ஏழ்மையுமே சாதனை செய்ய வழிதருமாம் சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய் செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய் காரியம் கெட்டிடுமாம் எதிலும் பொறுமை  காத்தாலே-அதனால் எல்லா நன்மையும் கிடைத்திடுமாம் ......கவியாழி........

அவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா?கோபமா ?

ராத்திரி நேரத்திலே குளிருது ரகசிய ஆசையும் தொடருது போர்த்திக்கத் தோணுது தேடுது போர்வைய பார்த்ததும் தோணுது தனிமையை இப்போ வெறுக்குது தலைவியைத் துணைக்கு அழைக்குது இளமைக்குத் தேவையும் கிடைக்குது இனிமையும் சிணுங்குது தொடங்குது இதழ்களை வருடிட விரும்புது இருவிரல் விலக்கிடத் துடிக்குது இன்னும் அதிகமாய் இருக்குது இமைகளும் ரகசியம் சொல்லுது அணைத்திட்ட இடைவெளி குறையுது ஆசையும் தொடர்ந்திடச் சொல்லுது அவளுக்கு இப்படிச் செய்வது ஆனந்தக் கோபமாய்த் தோணுது அடுத்ததை மகிழ்ச்சியாய் முடித்ததும் ஆசையும் அடங்குது முடிந்தது வாழ்கையில் இன்பமாய் இருப்பது வளமாய்ச் சேர்த்திடும் மகிழ்வன்றோ

ரசித்தவர்கள்