எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......
பாம்பும் தேளும் பூரானும்
பார்த்தே ஓடி மறைந்திடுமாம்
பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப்
பயந்தே நம்மைக் கடித்திடுமாம்
வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டிடுமாம்
விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு
வீணாய் நம்மைத் துரத்திடுமாம்
வேண்டா வெறுப்பாய் பழகினால்
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்
ஈன்ற பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
இருப்பதைக் கொடுப்பதும் நலமாகும்
சோதனை துயரம் ஏழ்மையுமே
சாதனை செய்ய வழிதருமாம்
சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்
எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமை காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்
......கவியாழி........
பார்த்தே ஓடி மறைந்திடுமாம்
பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப்
பயந்தே நம்மைக் கடித்திடுமாம்
வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டிடுமாம்
விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு
வீணாய் நம்மைத் துரத்திடுமாம்
வேண்டா வெறுப்பாய் பழகினால்
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்
ஈன்ற பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
இருப்பதைக் கொடுப்பதும் நலமாகும்
சோதனை துயரம் ஏழ்மையுமே
சாதனை செய்ய வழிதருமாம்
சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்
எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமை காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்
......கவியாழி........
வணக்கம்
ReplyDeleteஐயா
கவிதை அருமை .வாழ்த்துக்கள்.....ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Deleteதங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
ReplyDeleteஎதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமைக் காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்//
எளிமையாகச் சொல்லப்பட்ட
அருமையான கருத்து
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
வேண்டா வெறுப்பாய் பழகினாலே
ReplyDeleteவேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டாலே-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்
அருமையான அனுபவ மொழிகள்..!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
// சோதனைத் துயரம் ஏழ்மையுமே
ReplyDeleteசாதனை செய்ய வழி தருமாம்.. //
அருமையான உண்மையான வரிகள்...
வாழ்த்துக்கள் ஐயா...
தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Deleteசோதனைத் துயரம் ஏழ்மையுமே
ReplyDeleteசாதனை செய்ய வழிதருமாம்
சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்
நன்று நன்று ...!உண்மை தான் அருமையான வரிகள்
தொடர வாழ்த்துக்கள்....!
தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Deleteவேண்டா வெறுப்பாய் பழகினாலே
ReplyDeleteவேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டாலே-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்
உண்மைதான்!
தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Deleteஅருமை! அருமை! எப்படி இப்படி அருமையான கருத்துகளுடன் ஒரு கவிதை எழுதுகிறீர்கள் !!!!
ReplyDeleteவேண்டா வெறுப்பாய் பழகினாலே
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டாலே-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்
ஈன்றப் பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
இருப்பதைக் கொடுப்பதும் நலமாம்
எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமைக் காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்
வாழ்த்துக்கள்! தொடர்கிறோம் உங்களை!! எங்கள் வலைப்பூவில் ஒரு பூவாக சேர்ந்ததற்கு மிக்க நன்றி!!!
Deleteஎன்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிங்க அய்யா.தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
த.ம. போட்டாயிற்று!
ReplyDeleteதுளசிதரன், கீதா
தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Deleteபொறுமை பற்றிய அழகான பாட்டு...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Deleteஅருமை...
ReplyDeleteகவிதை நன்று ஐயா.
ReplyDeleteஇதைப் படிக்கையிலே
ReplyDeleteஆனந்தத் தேன்மழை
மனதெங்கும் கொட்டிடுதே
நன்றி ரொம்ப நாளைக்குப் பிறகு எளிமையும், இனிமையும், ஆழமுடைமையும் உள்ள கவிதை வாசிக்க தந்ததற்கு
தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Delete'பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே' என்ற ஒரு பழைய பாடல் உண்டு. பொறுமைக்கு ஈடு இணை இல்லை.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Deleteஅருமை.
ReplyDeleteத.ம 8
தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Deleteசகோதரருக்கு வணக்கம்
ReplyDeleteபொறுமையும் வஞ்சகமும் வன்முறையையும் களைந்தாலே இந்த உலகம் நன்மை பொருந்தியாக உருவெடுக்கும். அன்பு செய்யின் பகைவரும் நண்பர்களாக மாறுவார்கள். மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி..
அன்பின் கவியாழி கண்ணதாசன் - எளிதில் உண்ர்ச்சியில் தவறிழைத்தால் - கவிதை அருமை -
ReplyDelete//வேண்டா வெறுப்பாய்ப் பழகினால்
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம் // - அருமையான சிந்தனை
புலவர் இராமானுசமும் பாராட்டி இருக்கிறார்
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.
Delete[[[எதிலும் பொறுமை காத்தாலே-அதனால்
ReplyDeleteஎல்லா நன்மையும் கிடைத்திடுமாம்]]
பொறுமை அவசியம்; பொறாமை அனாவசியம்!
தமிழ்மணம் +1
ஆஹா....ஒருமாதம் கடந்தாலும் வந்திருந்தமைக்கு நன்றி
ReplyDelete