தெய்வங்கள்

தெய்வங்கள்

உடலும் கழிவாய் மாறும்...

உடலும் கழிவாய் மாறும்
உயிரும் பிரிந்து போனால்
உணர்ந்தே நாளும் வாழ்ந்தால்
உண்மை வாழ்க்கை  புரியும்

தூக்கி செல்ல நால்வர்
துவண்டே அழவும் சிலபேர்
தொடர்ந்தே வந்திட உற்றார்
தொலைத்த குடும்ப உறவோர்

வாழ்ந்த வாழ்க்கை  போற்றி
வாழ்த்தும் நண்பர் கூட்டம்
வணங்கிச் செல்லும் மக்கள்
வருந்தி அழைத்தால் வருமா

ஆக்கம் செய்த பணிகள்
அனைத்தும் முன்னே வருமாம்
அன்பால் செய்த செயலே
அருகில் நின்று அழுமாம்

ஏக்கம் இல்லா வாழ்வும்
ஏழ்மை உணரா உயர்வும்
என்றும் நன்மை செய்யா
எவரும் நம்மை மதியார்

தூக்கம் விழித்துப் பார்க்கத்
தோழமை வேண்டும் உலகில்
தொடர்ந்தே குழிவரை வருவோர்
துயரம் கண்டிட வேண்டும்

உயிரும்  உள்ள போதே
உரிமை  கொண்டோர் மகிழ
உணர்வை மதித்துச் செய்தால்
உடலும் மனமும் அழுமே

எல்லா உயிரும் இதுபோல்
ஏந்தல் செய்வது மில்லை
பொல்லா மனித இனமே
புரிந்தால் வாழ்க்கை நலமே

---------கவியாழி----------

Comments

  1. 'பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள்தானடா' என்கிற கவியரசர் வார்த்தைகளை நினைவு படுத்தும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  2. சரியாய் முடித்துள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  3. அற்புதம்
    கருத்தும் சொல்லிச் சென்ற விதமும்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. /// ஏக்கம் இல்லா வாழ்வும்
    ஏழ்மையை உணரா உயர்வும்
    என்றும் நன்மை செய்யா
    எவரும் நம்மை மதியார் /// அருமை... உண்மை..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  5. Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  6. வணக்கம்
    ஐயா

    மனதை நெருடிய வரிகள்.. கருத்துச் சொல்லிய விதம் நன்று வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  7. Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  8. கருத்தான கவிதை....

    பாராட்டுகள்..

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  9. ஆக்கம் செய்த பணிகள்
    அனைத்தும் முன்னே வருமாம்
    அன்பால் செய்த செயலே
    அருகில் நின்று அழுமாம்

    ஏக்கம் இல்லா வாழ்வும்
    ஏழ்மை உணரா உயர்வும்
    என்றும் நன்மை செய்யா
    எவரும் நம்மை மதியார்

    மிக மிக நல்ல ஆழமான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  10. வணக்கம் சகோதரர்
    மிக அற்புதமான தத்துவக் கவிதை. வாழ்க்கையை வாழ்ந்து அனுபவத்திற்கே வரும் எண்ணங்கள் தங்களுக்கு வந்தது வியப்பாக உள்ளது. கவி முழுவதும் வாழ்க்கையின் எதார்த்தம் பிரதிபலிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  11. Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  12. கவிதை சிறப்பு...
    தொடர்க

    ReplyDelete
  13. //உடலும் கழிவாய் மாறும்//
    வாழ்வியலின் உண்மையை இதைவிட
    எளிமையாய் சொல்ல முடியாது ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  14. Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  15. நல்ல முன்னேற்றம்!

    உடலும் கழிவாய் மாறும்
    உயிரும் பிரிந்து போனால்
    உணர்ந்தே நாளும் வாழ்ந்தால்
    உண்மை வாழ்க்கை புரியும்

    ReplyDelete
  16. அன்பின் கவியாழி கன்ணதாசன் - அருமையான தத்துவக் கவிதை - நன்று நன்று - உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்னர் நட்க்கும் செயல்களைக் அவிதை ஆக்கியமி நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. தொடக்கமும் முடிவும் மிக அருமை. கண்ணதாசன் பெயருக்கேற்ப சிந்திக்கிறீர்கள்.இடையிடையே ஒருசில இடங்களில் ஓசை மாறுபாட்டையும் சரிசெய்திருந்தால் இன்னும் இன்னும் சிறப்பாகும். நல்ல கருத்திற்கு பாராட்டுகள் நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள்.வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more