Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/

தெய்வங்கள்

தெய்வங்கள்

வயது இரண்டென் ஒன்பதில்

வயது  இரண்டெண் ஒன்பதில் வாலிபம் தொடங்கிய நிலையில் பயமென தெளிந்த பருவத்தில் பார்வையால் காதல் கொண்டோர் பள்ளியைத் துறந்துமுடித்துப் பல்கலைப் படிப்பில் நுழைந்து பிள்ளையைப் பொறுப்பாய் வளர்த்து பிணையில்லா வேலைக் கிடைக்க மெல்ல வெளியுலகில்உலவ மிதமான அறிவுரைச் சொல்லி செல்லமாய் சிறகடித்துச் செல்ல சினமின்றி வழி சென்றோர் கள்ளமின்றிக் கல்வியைக் கடந்து கைநிறையக் காசுக் கிடைத்தும் உள்ளம் மாறாமல் பெற்றோர் உறவினர் நண்பர்கள் வாழ்த்துரைக்க இல்லறம் தொடங்கும் இனியோரும் இணைந்தும் பிணைந்தும் இருப்பார்கள் சொல்லறம் புரிந்தும் மகிழ்வார்கள் சோதனை இடறின்றி வாழ்வார்கள் கவியாழி.......

சொந்தவூர் செல்லுவேன்

சொந்தவூர் செல்லுவேன் சொந்தங்களைக் காணுவேன் சேர்ந்திருந்த நாட்களையே சொர்கமாக எண்ணுவேன் நண்பர்களைத் தேடுவேன் நல்லபடிப் பேசுவேன் நான்படித்த நாட்களிலே நடந்ததையே  யோசிப்பேன் ஆசிரியரைக் காணவும் ஆசிபெற்று  மகிழவும் நேசமுடன் நட்புடனே நீண்டநேரம் தங்குவேன் வந்தவேலை முடிந்ததும் வாழ்ந்த நாட்கள் எண்ணியே நொந்து நானும் வருந்தியே நேரத்தோடு திரும்பி செல்லுவேன் (கவியாழி)

குறள் வெண்பா

ஏனிந்த நாட்கள் இனிமை இழந்திங்கு ?   நானெங்குப் போவேன் நவில்   பூமானே! பெண்ணே! பூத்தமுதே! வந்தெனக்குத் தா..மானே இன்பம் தழைத்து! திடுக்கிட வைத்த தொடரைப் பார்த்து நடுங்கியே சென்றேன் நகர்ந்து! உறவுகள் சோ்பணம் உள்ளவரைத் சேரும்! சிறப்புகள் போகும் சிதைந்து தலைகுனிந்து நிற்கின்றேன்! தாயே அருள்செய்!   நிலையறிந்து காப்பாய் நிலத்து! சொல்லாலே இன்றும் சுடுகின்றாய்! வாழ்நாளில்   இல்லா நிலைஇஃது எனக்கு இனத்தின் பெயரால் இடும்பை தொடரும்   பணமே படைக்கும் பழி   இறைவன் இருந்திங்கு மக்களைக் காத்தால் குறைகள்   வருமோ குவிந்து ?   தாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற   பாரதி தாசனைப் பாடு!

கடவுளை நானும் கண்டதுண்டு..

கடவுளை நானும் கண்டதுண்டு கண்டு நன்றி சொன்னதுண்டு கண் கலங்கி பார்த்ததுமே கடவுளே மயங்கி நின்றதுண்டு பழகியே நான் மகிழ்வதுண்டு பாசமோடு அன்பு கொண்டு பார்க்கும் போது பரவசமாய் பக்தியோடு அமைதி கொண்டு மன மொடிந்த நேரத்திலே மகிழ்ச்சி வேண்டி நின்றதுண்டு நாலு வார்த்தை  மகிழ்ச்சியாக. நானுயர நன்று கேட்டதுண்டு கள்ளமில்லா  நட்பை நானே கடவுளாகப் பார்த்த துண்டு கடைசியிலே சிலர் மறந்து கஷ்டம் தந்து பிரிந்ததுண்டு உடலதிலே உள்கூட்டில் ஒளிந்திருக்கும் தசையதுவே உண்மை அன்பு நேர்மையாக்கும் ஒளி மிகுந்த கடவுளாக்கும் உள்ளபடி சொல்லப் போனால் உருவ முள்ள கடவுளில்லை உள்ளோரின் நல்ல அன்பே உணர்ச்சி யுள்ள கடவுளாகும்

நுங்கும் நீரும்

இளமையான நுங்கெடுத்து பதமாகப் பார்த்து சீவி அதுள் ஒரு விரலால் அழுத்தினால் உடனே ப்ளீச் என்று நீர் வரும் மீண்டும் மீண்டும் விரல் நுழைத்து வாயால் கவ்வினால் தீண்டும் சுவை தீராது மீண்டும் கேட்கும் மறுபடி அதையே நோக்கும் பின் ஆசையும் அப்போதே அடங்கும் மனமும் அமைதியாகும்

மீண்டும் அந்தநாள் வாராதோ !

11.03.1990 அந்தநாள் ஞாபகம் 11.03.2013  அன்றும் வருவதால் வாழ்ந்த நாள் எண்ணிக்கையில் வருடம் இருபத்து மூன்றாகிறது கொஞ்சநாள் வாழ்க்கையில்லை குறைவான மகிழ்ச்சியில்லை நிறைவான நாட்களிலே-எங்களுக்கு நெடுந்தூரப் பயணமிது எல்லாமும் பார்த்துவிட்டோம் ஏழ்மையைத்  தாண்டிவிட்டோம் எங்களுக்கு ஒரே பெண்ணென-இறைவன் எழுதியதாய் நிறுத்திவிட்டோம் தொலைவானப் பயணத்திலே தோல்விகளும் பார்த்திருந்தும் இனிதான வாழ்க்கைக்கு-இனியும் இணைந்தே வாழ உள்ளோம் இந்நாளில் எல்லோரும் இனிய வாழ்த்துச் சொல்லி இனிவரும் நாட்களையும்-சேர்ந்து இன்பமாக்க வாழ்த்துங்களேன்

ரசித்தவர்கள்