தெய்வங்கள்

தெய்வங்கள்

சொந்தவூர் செல்லுவேன்

சொந்தவூர் செல்லுவேன்
சொந்தங்களைக் காணுவேன்
சேர்ந்திருந்த நாட்களையே
சொர்கமாக எண்ணுவேன்
நண்பர்களைத் தேடுவேன்
நல்லபடிப் பேசுவேன்
நான்படித்த நாட்களிலே
நடந்ததையே  யோசிப்பேன்
ஆசிரியரைக் காணவும்
ஆசிபெற்று  மகிழவும்
நேசமுடன் நட்புடனே
நீண்டநேரம் தங்குவேன்
வந்தவேலை முடிந்ததும்
வாழ்ந்த நாட்கள் எண்ணியே
நொந்து நானும் வருந்தியே
நேரத்தோடு திரும்பி செல்லுவேன்

(கவியாழி)



Comments

  1. வணக்கம்
    ஐயா

    பிறந்த ஊர் சொல்வது என்றால் அதைப்போல மகிழ்ச்சி இல்லை.. எல்லாம் நல்ல படியாக நடக்க எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ..உறவுகளுடன் கலந்தாடி களிப்படைவீர் கனிவுடனே .

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு கவிதை.

    ReplyDelete
  4. எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறக்க முடியாது. சொந்த ஊர் செல்லும் கவிஞருக்கு இனிய பயண வாழ்த்துக்கள்.
    த ம 4

    ReplyDelete
  5. எந்த ஊர் என்றாலும் சொந்த ஊர் போல் ஆகுமா? சென்று வாருங்கள்
    கடந்த வாரம் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  6. கவிஞரின் பயணம் சிறக்கட்டும்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  7. சொந்த ஊரின் நினைவுகள் தாலாட்டுகின்றன.வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  8. எல்லோருக்கும் அவரவர் ஊர்மண்ணும் மணமும் மணக்கத்தான் செய்யும் இல்லையா!

    ReplyDelete
  9. அன்புள்ள அய்யா,


    ‘சொந்தவூர் செல்லுவேன்’ சொந்த ஊரை நேசிக்கும் ...சொர்க்க புரியாக யோசிக்கும் சொக்க வைக்கும் கவிதை.

    நன்றி.
    த.ம. 8.

    ReplyDelete
  10. சொந்த ஊருக்குச் சென்று வாருங்கள்
    சுகமான நினைவுகளோடு திரும்பி வாருங்கள்
    மகிழ்ச்சிஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  11. சொந்த ஊருக்குச் செல்லும்போது இருக்கும் மன மகிழ்ச்சி திரும்பும்போது இருப்பதில்லை. எதையோ விட்டுவிட்டு வருவதுபோன்ற எண்ணம் ஏற்படும்.நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர்கள். எனக்கு அத்தகைய அனுபவம் அதிகம் உண்டு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. சொந்த ஊர் தரும் மகழ்ச்சி வேறில்லை,,,,,,,,

    ReplyDelete
  13. சொந்த ஊருக்கு செல்வவதென்றால் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும் ? கவிதை மிக அருமை. எனது வலைப்பூவுக்கும் வருகை தரலாமே !

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்