Sunday, 5 May 2013

நுங்கும் நீரும்


இளமையான
நுங்கெடுத்து
பதமாகப் பார்த்து
சீவி

அதுள்
ஒரு விரலால்
அழுத்தினால் உடனே
ப்ளீச் என்று
நீர் வரும்

மீண்டும் மீண்டும்
விரல் நுழைத்து
வாயால் கவ்வினால்
தீண்டும் சுவை
தீராது

மீண்டும் கேட்கும்
மறுபடி
அதையே நோக்கும்
பின் ஆசையும்
அப்போதே அடங்கும்
மனமும் அமைதியாகும்

29 comments:

 1. நுங்கைப் பற்றி எழுதி நாவில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள். நுங்கின் சுளையை வெளியே எடுத்து மிக்ஸியில் போட்டு துண்டங்களாக்கி, அதில் கொஞ்சம் சர்க்கரையையும் ஏலக்காய் தூளையும் போட்டு சில மணி நேரம் பிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா அய்யா.நானும் முயற்சிசெய்கிறேன் நல்ல ச்விமுரையாக உள்ளது.

   Delete
 2. ரசித்தேன்... ருசித்தேன்...

  வே. நடனசபாபதி ஐயா சொன்னது போல் செய்து பார்க்கவும் வேண்டும்... நன்றி..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னதுபோல் தேனையும் சேர்த்திடலாம்

   Delete
 3. ''..மீண்டும் மீண்டும்
  விரல் நுழைத்து
  வாயால் கவ்வினால்
  தீண்டும் சுவை
  தீராது..''
  ஓ!...தந்தையுடன் நுங்கு சுவைத்த நினைவு ஓடியது.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானுங்க அந்த நாட்களில் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவதே தனி சுவை

   Delete
 4. நுங்கின் சுவையை
  நுட்பமாய் சொல்லி
  பொங்கும் ஆசையை
  இங்கும் தந்தீர்
  தாயகம் தவறிய
  தனிமை வாழ்வில்
  வாயது கேட்டும்
  வாரா அமுதமாய்
  பனைமர அழகை
  படத்தில் பார்த்தே
  நுங்கின் நினைவை
  எங்கும் துறவேன்...!

  அழகு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சங்கம் முதலே சரித்திரம் அதுவே
   நுங்கை தின்னா தமிழன் இல்லை.

   Delete
 5. சகோதரரே!
  இது நினைவுப் பகிர்வோ இல்லை இப்போ நிஜமாகவே உண்டதைச் சொன்னீர்களோ... :) எதுவாயினும் அருமை! வாழ்த்துக்கள்!

  நீங்கா நினைவலைகள் நெருடியதோ உன்றனுக்கு
  தூங்கா எண்ணங்கள் தூண்டிவிட நீருமிங்கு
  நுங்கு நிமிண்டி நீருண்டகளிப்பினைக்கூறி
  எங்களுக்கும் தந்தீரே ஏக்கத்தை மிகவேதான்...

  த ம.2

  ReplyDelete
  Replies
  1. வெயிலும் தொடங்கிடுச்சி
   வேதனையும் அதிகமாச்சி
   மின்சாரம் இல்லாமல்
   பனை ஓலை
   கருப்பட்டி,விசிறி
   தேவையும் இன்று
   அதிகமாச்சி

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 6. நுங்கும் நீரும் இனிமை ..!

  ReplyDelete
 7. நுங்கு சீவி உண்ட நினைவு
  நுகர்ந்த நற் கவிதையினால்
  இன்றும் உண்ண வேண்டும் என எண்ணி
  இதழ்களிலே நீருற வைத்ததும் ஏன் ?...!!

  நன்றி இல்லையோ பாவலரே தம்
  நா சுவைத்த சேதி சொல்லி
  இன்று எங்கள் நாவதனை
  இப்படியா ஊற வைப்பீர் ?....!! :)

  வாழ்த்துக்கள் ஐயா நாம் பெறாத இன்பம் அதைப்
  பெற்ற நீர் வாழியவே (நொந்த மனதின் வாழ்த்துக்களா
  இவைகள் என்று யாரும் என்னைக் கேட்க்க வேண்டாம் :) )

  ReplyDelete
  Replies
  1. இன்றுமே கிடைப்பதில்லை
   இனிய நல் தருணங்கள்
   அன்றுபோல் அடிமரத்தில்
   அமர்ந்து உண்ட நாட்கள்
   கொஞ்சமா நஞ்சமா
   குறைவில்லை அப்பொழுது

   Delete
 8. நுங்கும் நீரும் அருமை.
  கோடைக்கு ஏற்ற கவிதை.

  ReplyDelete
 9. படிக்கும் போது நுங்கு பருக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.கொழும்பில் எங்கப்பா நுங்கு??

  ReplyDelete
  Replies
  1. கிராமத்து வயலொரம்
   கொட்டி வளர்ந்திருக்கும்
   இப்போது எங்கே என்ற கேள்வியும் உண்மைதானோ

   Delete
 10. வெம்மையை குளிரவைக்க கவிதை நுங்கை கொடுத்துவிட்டீர்கள். சுவை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வெயில் அதிகமானதால் நுங்கு சாப்பிட்டேன்

   Delete
 11. கவிதை அருமை!! இப்போ நுங்கு வேண்டுமே..எங்கே போவது....ஹ்ம்ம்ம்ம் :)

  ReplyDelete
  Replies
  1. நாளை காலையில் தேடித் பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்

   Delete
 12. நுங்கிளநீர் போல கவிதையும் இனிமை. பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கவைக்கிறது இக்கவிதை. நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க மஞ்சரி. எனக்கும் அதே நினைவுதான் வந்தது

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்