Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா

Image
"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தக வெளியீட்டு விழா  படங்கள் திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன் திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு  வழங்கப்படுகிறது  திரு.திருமாவளவன்  அவர்களால் "அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தகம் வெளியிடப்பட்டு  புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார். இவ்விழாவிற்கு   குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, கவியாழி.கண்ணதாசன்

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய் சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள் சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள் தெருவோரம் நின்று தினமும்  ரசித்து தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும் மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம் அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள் இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான கிழமை தோறும விரதமும் இருந்தார்கள் இத்தனையும் செய்தும் இழி மனதில் பித்தனாய் மாறி  பிறள் புத்தியால் தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால் புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்

யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனை பார்க்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று    உடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்    கனவாக தெரிந்திடும்! மெய்யும்    பொய்யும் மேனியு    ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்    செயலும்    சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்    மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே! நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்    வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-இயன்றதை துஷ்ட மெல்லாம் தூரசென்று    விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவா

புத்தக வெளியீடு விழா அழைப்பிதழ்

Image
     அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் நான் எழுதிய  மேற்கண்டப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நாளை 13.01.2013 மாலை 4.00 அளவில்  நந்தனம் YMCA  கல்வி வளாகத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் மணிமேகலை பிரசுரத்தாரினால் வெளியிடப்பட உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் அனைவரும்  வருக ஆதரவு தருக. கவியாழி கண்ணதாசன் சென்னை கைப்பேசி எண்:9600166699

இனிய குழந்தைக்கு.........

Image
  இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால் இனிமையான பிள்ளைப்பேறு இனிதே க்  கிடைத்திட துணையோடு தோள் சேர்த்து துள்ளலுடன் - விளையாடி கனியாக அம்பெய்து கணக்காக இணைந்து விந்துள்ளே சென்றதும் வீரனாய்த் தேடி சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி திங்களாய் சேர்ந்தத் திரவியத்தை – முத்தாக ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைக்கும் அன்று முதல் குடத்துள்   கருவாக்கி அய்ந்தாவது வாரத்தில் அழகாக உருவாகி பிஞ்சு விரலும் அவயங்களும் பேழைக்குள்-உருவாகி நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளரும் கொஞ்சும் குரலையும்க் குடும்ப உறவையும் மஞ்சதுள்ளேயே மனதுள் இருத்தியும் கேட்க பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே  

ரசித்தவர்கள்