தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிய குழந்தைக்கு.........




 
இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால்
இனிமையான பிள்ளைப்பேறு இனிதேக்  கிடைத்திட
துணையோடு தோள் சேர்த்து துள்ளலுடன் - விளையாடி
கனியாக அம்பெய்து கணக்காக இணைந்து

விந்துள்ளே சென்றதும் வீரனாய்த் தேடி
சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி
திங்களாய் சேர்ந்தத் திரவியத்தை முத்தாக
ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைக்கும்

அன்று முதல் குடத்துள்  கருவாக்கி
அய்ந்தாவது வாரத்தில் அழகாக உருவாகி
பிஞ்சு விரலும் அவயங்களும் பேழைக்குள்-உருவாகி
நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளரும்

கொஞ்சும் குரலையும்க் குடும்ப உறவையும்
மஞ்சதுள்ளேயே மனதுள் இருத்தியும் கேட்க
பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை
பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே
 

Comments

  1. குழந்தை கரு கவிதைக் கருவானது இங்கே !

    ReplyDelete
    Replies
    1. வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க.கடந்த இரண்டு நாளா எனது மடிக்கணினி மக்கர் பண்ணியதால் உங்களுக்கு நன்றி உடனே சொல்ல முடியவில்லை

      Delete
  2. Vannakkam, good one

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்,தங்களின் வருகை மகிழ்ச்சியே ஆனாலும் உங்களைபற்றிய தகவலை மறைப்பதன் ? .எனக்கு தனித்தகவலாக தெரிவியுங்களேன்

      Delete
  3. Replies
    1. வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க.

      Delete
  4. குழந்தை கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க.கடந்த இரண்டு நாளா எனது மடிக்கணினி மக்கர் பண்ணியதால் உங்களுக்கு நன்றி உடனே சொல்ல முடியவில்லை

      Delete
  5. வணக்கம்
    கயல்விழி

    வலைச்சரம்வலைப்பூவில் ஆறிமுகம்ஆனாது உங்கள் வலைப்பூ நல்ல ஆளுமை விருத்தி உங்களிடம் உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
    பார்க்க இங்கேhttp://blogintamil.blogspot.com/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க! எனது பெயர் கவியாழி கயல்விழி அல்ல.
      வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க.கடந்த இரண்டு நாளா எனது மடிக்கணினி மக்கர் பண்ணியதால் உங்களுக்கு நன்றி உடனே சொல்ல முடியவில்லை

      Delete
  6. வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள். உங்களது பதிவை தொடர்ந்து படித்து வந்தேன் ஆனால் இரண்டு நாட்களாக எனது மடிக்கணினி பளுதாகியாதால் இரண்டு நாட்களாக எதையுமே பார்க்கவில்லை .தாமதத்திற்கு மன்னிக்கவும்
    வந்தமைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  7. தாய்மை கவிதை அருமை. இனிய குழந்தையை காலகாலத்தில் பெற்று கொள்ள சொல்லும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. உங்களது பதிவை தொடர்ந்து படித்து வந்தேன் ஆனால் இரண்டு நாட்களாக எனது மடிக்கணினி பளுதாகியாதால் இரண்டு நாட்களாக எதையுமே பார்க்கவில்லை .தாமதத்திற்கு மன்னிக்கவும்
      வந்தமைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி

      Delete
  8. ஒரு பிரசவம்.....குழந்தையின் உணர்வு வெளிப்பாடு அருமை !

    ReplyDelete
    Replies
    1. உங்களது பதிவை தொடர்ந்து படித்து வந்தேன் ஆனால் இரண்டு நாட்களாக எனது மடிக்கணினி பளுதாகியாதால் இரண்டு நாட்களாக எதையுமே பார்க்கவில்லை .தாமதத்திற்கு மன்னிக்கவும்
      வந்தமைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more