யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !
அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு
அகிலமும் உனை பார்க்க நேர்நிறுத்து
சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில்
யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !
உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும்
உன் கணக்கு என்னவென்று உடலில்
வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக
கண்ணுள் காட்டிடும் கனவாக தெரிந்திடும்!
மெய்யும் பொய்யும் மேனியு ளதில்லை
மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை
சொல்லும் செயலும் சேர்ந்தே யன்றி -எளிதில்
சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை!
இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்
பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
புரிந்திடும் மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே!
நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும்
நாணயம் எப்போதும் துணை நிற்கும்
வம்பிலுப்போர் வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக
சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் !
கஷ்டம் கடக்கும் காலம் வந்தால்
நஷ்டமும் தீரும் நன்மை பெறும்
இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-இயன்றதை
துஷ்ட மெல்லாம் தூரசென்று விலகிடும் !
நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்
நன்றியுள்ள ஜீவனுக்கும் நண்பனாவாய் அன்பனாவாய்
இல்லாதவனாய் இருந்தாலும் இன்ப வாழ்வில்-நேர்மையான
இல்லறத்தில் துன்பமில்லா நல் இறைவனாவாய் !
நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்
ReplyDeleteநன்றியுள்ள ஜீவனுக்கும் நண்பனாவாய் அன்பனாவாய்
இல்லாதவனாய் இருந்தாலும் இன்ப வாழ்வில்-நேர்மையான
இல்லறத்தில் துன்பமில்லா நல் இறைவனாவாய் !
அர்த்தமுள்ள வரிகள். ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மடி கணீணீ பழுதின் காரணமாய் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன். நன்றீ
Deleteஉண்மைதான் .. ஆணவத்தை அடக்கினால் அகிலம் ஆளலாம்.
ReplyDeleteநன்று. இனிய பொங்கல் வாழ்த்து.
மடி கணீணீ பழுதின் காரணமாய் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன். நன்றீ
Deleteஇனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDelete//இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்//
உண்மையான வரிகள்
நேற்று புத்த கண்காட்சிக்கு வந்திருந்தேன். நூல் வெளியீட்டு விழாவிற்கு
தொல்.திருமா அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது வந்தேன். கூட்டம் அதிகம் இருந்ததால் தங்களை சந்திக்க இயலவில்லை.
///பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
ReplyDeleteபுரிந்திடும் மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே!///
நிதர்சனமான வார்த்தைகள் ஐயா...
மடி கணீணீ பழுதின் காரணமாய் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன். நன்றீ
Deleteஅன்பு வணக்கம் ஐயா...
ReplyDeleteஉங்கள் வலைப்பூவுக்கு இன்றுதான் முதன் முதல் வருகிறேன். அழகான அறிவுக்கடலாக இருக்கிறது உங்கள் தளம். சிந்தனைக்கு தேவையான அற்புத முத்துக்கள் நிறையவே இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்க்கவேண்டும். அருமை!
//இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்//
இறைவன் எங்கே இருக்கிறான் என்று ரத்தினச்சுருக்கமாக குறிப்பிட்டவிதம் அருமை. முழுக்கவிதையுமே நன்றாக இருக்கிறது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
மடி கணீணீ பழுதின் காரணமாய் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன். நன்றீ
Deleteதங்களூடன் மீண்டும் தொடர்புகொள்கிறேன்
இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
ReplyDeleteஇல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்
பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
புரிந்திடும் மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே!//
நன்கு சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள்.
நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும்
ReplyDeleteநாணயம் எப்போதும் துணை நிற்கும்
நம்பிக்கை விதைக்கும் நல்ல வரிகள்..
நல்வாழ்த்துகள்..
மடி கணீணீ பழுதின் காரணமாய் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன். நன்றீ
Deleteஇயல்பான வார்த்தைகளால் உங்கள் உணர்வின் வெளிப்பாடு அதிகம் !
ReplyDeleteஉண்மைதான் அப்படித்தான் உணர்த்த முடியும். நன்றிங்கம்மா
Delete