தெய்வங்கள்

தெய்வங்கள்

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து
எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி
அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய்
சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள்

சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து
சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து
உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச
பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள்

தெருவோரம் நின்று தினமும்  ரசித்து
தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும்
மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம்
அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள்

இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று
எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து
வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான
கிழமை தோறும விரதமும் இருந்தார்கள்

இத்தனையும் செய்தும் இழி மனதில்
பித்தனாய் மாறி  பிறள் புத்தியால்
தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து
சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால்

புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை
புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை
மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய
மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா

மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே
விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்
சதியாக சமூகத்தில் கேடாக செய்திட்ட-சண்டாளனே
சாதித்தது என்ன சாக்கடை எண்ணத்தால்?

இதுபோன்ற செய்கையால் எண்ணற்ற உயிர்கள்
இழிவான  பாதைக்கு இடர் தெரியாமல்
மலிவான செய்கையால்  மனம்கெட்டு-தவறாக
மனமுடைந்து  மதிகெட்டு  விதியென்று  சாகிறார்கள்

நஷ்டம் யாருக்கு ? நம்பியோற்கும் தண்டனையா?
கஷ்டமெல்லாம்  வந்ததால்  கடமை மறந்தாயே?
பெற்ற  பிள்ளைக்கு பிரச்னை  வேண்டுமா?-கஷ்டமெல்லாம்
உற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா?

மனிதனாக இரு  மனிதத்தை  மகிழ்ச்சியாக்கி
மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று



Comments

  1. சரளமாக வந்து விழும் வார்த்தைகள்
    கவிதையை உச்சம் தொடச் செய்து போகின்றன
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்

      Delete
  2. நாளும் சந்தம் கவிதையில் சந்தணம் போல் மணக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்

      Delete
  3. வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன. அருமை! உதா: மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய
    மனம்திறந்து சொன்னாயா மனிதனாக நின்னாயா
    ரசிக்க வைத்த, கருத்துள்ள கவிதை! நன்று!

    ReplyDelete
    Replies
    1. நன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்

      Delete
  4. //மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி
    மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
    புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
    இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று//

    அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரரே...
    தனக்கும் உதவாமல் பிறர்க்கும் உதவாமல் தற்கொலை செய்வதால் தீர்ந்திடுமோ பிரச்சனைகள்.
    பிரச்சனைக்கு இதுதான் தீர்வென்றால் உலகில் எவரும் வாழ மாட்டார்கள்!

    நல்ல கற்பனை .அருமையான கவிநடை. சிறப்பு.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்

      Delete
  5. நஷ்டம் யாருக்கு ? நம்பியோற்கும் தண்டனையா?
    கஷ்டமெல்லாம் வந்ததால் கடமை மறந்தாயே?
    பெற்ற பிள்ளைக்கு பிரச்னை வேண்டுமா?-கஷ்டமெல்லாம்
    உற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா?

    மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி
    மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
    புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
    இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று//

    மனிதனாக வாழ சொல்லும் அற்புதமான கவிதை.

    தற்கொலை செய்து கொள்பவர்கள் பின் விளைவை நினைத்து பார்ப்பது இல்லை. தன்னம்பிக்கை என்னும் ஆயுதத்தால் மன தைரியத்தோடு வாழ அருமையான கவிதை சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்

      Delete
  6. கவிதை நன்று.நேற்று தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
    நூல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி

      Delete
  7. மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி
    மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்...
    கருத்து சொல்லும் வரிகள் சிறப்பு. ஓட்டும் போட்டுட்டேங்க.

    ReplyDelete
    Replies
    1. வந்ததுக்கும் வாரி வழங்கியதர்க்கும் நன்றீ

      Delete
  8. அழகான வடிவம்;அருமையான கருத்து

    ReplyDelete
  9. மனதைரியத்தை அளிக்கும் கவிதை.

    ReplyDelete
  10. வார்த்தைகள் தன்னம்பிக்கையைக்
    கொடுக்கிறது கவியாழி ஐயா
    தம. 8

    ReplyDelete
  11. மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி
    மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
    புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
    இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று

    தன்னம்பிக்கை தரும் தத்துவ வரிகள் அருமை ..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. Replies
    1. நண்பரே நீங்க வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி .மேலும் எனது புத்தக வெளியிடு விழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்ததும் மகிழ்ச்சியே.
      அடிக்கடி வாருங்கள் ஆதரவு தாருங்கள்

      Delete
  13. மனிதனை மனிதனாக வாழ் என்று சொல்வதே வெட்கக்கேடான சங்கடமான விஷயம் !

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது? காலம் கெட்டுக் கிடக்குதே.புரியாததை புரிய வைக்கவும் தெரியாததை தெரிய வைப்பதும் நம் கடமையே.

      Delete
  14. ''..மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி
    மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
    புனிதனாக வாழ்ந்து பார்..''
    good ....eniya vaalthu.
    vaarungal kovaikkavi .wordpress.com....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நட்பே .கொஞ்ச காலமாய் எனது மடிக்கணினியில் பழுது ஏற்பட்டதால் சிறு தடங்கல் இருந்தது.இனி தொடர்வேன் வருவேன்.
      நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more