Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கத்திரி வெய்யிலை வெல்லுவோம்

ஆண்டில் சிலநாள் இதுபோல ஆருடம் பலநாள் சொல்லிவரும் தாண்டவ மாடும் வெய்யிலில்-சூரியன் தகதக வெனவே எரிந்திடுமாம் மரமும் செடியும் காய்வதற்கும் மாடுகள் ஆடுகள் மடிவதற்கும் தினமும் சிலபேர் மடிவதற்கும்-கதிரவன் தீக் கதிரை வீசுவதேன் மக்கள் துயரில் வாழ்வதற்கும் மலையை நோக்கிச் செல்வதற்கும் அக்கம் பக்கம் எல்லோரும்-சூடாய் அலைந்தே திரிய வைப்பதுமேன் சின்னஞ் சிறுவர் பெரியோரை சீண்டும் கொடுமைக் காரணத்தால் எண்ணம் யாவும் சுட்டெரிக்கும்-உடலில் எல்லா நோயும் சேர்ந்திடுமே வெய்யிலில் நாளும் அலைவதற்கு வேறுவழியை தெரிந்தெடுத்து நாம் வீணாய் சுற்றி வருவதையே-கொஞ்சம் வேதனையோடு நிறுத்தி வைப்போம் குளுர்சியான உணவுகளும் நன்றே குளிர்மைப் பானைத் தண்ணீரும் மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை மனதில் தருமே உற்சாகம் இந்த வேதனை எனக்குமே இன்றும் இங்கே உள்ளதால் நொந்த நிலையும் இதுவாகும்-உங்கள் நோயை நீவிர்த் தடுப்பீரே

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என்னையே ஈன்ற எனக் குயிரீந்த கல்லே யல்லாத கடவுள்கள் நீவீரே அன்னையின் சேவையை அருகில் செய்யும் திண்ணைப் பாட்டியும் தேடும் தெய்வமே உண்மை உணர்ந்து உள்ளம் உவந்து செவ்வனே செய்யும் செவிலியரும் அன்னையே பிள்ளையாய்ப் போற்றி படிப்பைக் கொடுத்து நல்லொழுக்கம் தந்த ஆசிரியரும் உண்மையே அருகருகே படித்தாலும் அன்பாய் பழகிய பள்ளித் தோழியரும் பண்பில் அன்னையே என்னையும் ஆணாய் எடுத்துச் சொன்ன மனைவிக்கும் இன்று நன்றி சொல்லுவோம்

இதயமே .... இனிய இயந்திரமே !

இதயமே இயக்கத்தை நிறுத்தாத இனிய இயந்திரமே ! என்றுமே நிற்காத உன் தந்திரமே எனக்கு மாத்திரமே ! காற்றடைத்த என் உடம்பில் திரவம் குடித்து தினம் வாழ்கிறாயே ! மகிழ்ச்சியும் வேதனையும் ஏற்றுக்கொள்ளும் உனக்கு எசமான் யார் ? நீயும் பரிதாபம் ஓய்வு கொடுத்தால் மீண்டும் வருவாயா வருந்தி விடுவாயா ! எனக்கும் ஆசை எப்படி கொடுப்பதென்று நான் இருந்தால் முடியாது இறந்தால் முடியும் ? வேண்டுமென்று கேட்பாயா வேதனையில் துடிப்பாயா போதுமென்றுச் சொல்வாயா போய்சேர்ந்துத் துயில்வாயா.....

கனவு-சின்ன வயது நிகழ்வே

உண்மை சொல்ல முடியா உணர்வை காண தெரியா கண்ணு றக்க கனமே-நமது கனவு என்ற நிசமாம் சின்ன வயது நிகழ்வே சொல்லி வந்த வார்த்தை மெல்ல பேசும் உளறல்-மீண்டும் சொல்லி பார்க்க விடுமாம் வண்ண இளமை நாளை வாழ்ந்து முடிந்த வேளை திண்ணை தோறும் சென்று-அதை தெருவில் பேச விடுமாம் உண்ண முடியா விருந்தய் உறக்கம் கூட தொடரா வண்ண மேனி கனவே-காதல் வாசல் தேடி தருமாம் சின்ன பெரிய சனங்க சிரித்துப் பேசும் மனங்க எண்ணம் பேசும் நிசமே-காலை எழுமுன் வரும் கனவாம் எண்ணம் போல வருமாம் இந்த உண்மை நிசமாம் வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு வாசம் கூட தருமாம்

என்னுள் மழையைத் தா !

மோகமாய் பவனிவரும் பருவ மங்கை மேகமே அங்கங்கள் அசைவதால் உன் மேகலைகள் திரண்டெழுந்தே இடிவருதோ மின்னலும் கண்டவுடன் பயந்து மின்னுகிறதோ உன் விருப்பத்தால் மீண்டும் மீண்டும் மழை வருதோ தாகமே தீருமுன் தடம்பார்த்து ஓடும் மழைநீர் தவம் கிடக்கும் மரங்களுக்கு சேர்கின்றதோ ஆகவே மேகமாய் தவழ்ந்து வா மீண்டும் மீண்டும் அசைந்துவா என் மனதும் மகிழ வா என்னுள் மழையைத் தா

ரசித்தவர்கள்