கனவு-சின்ன வயது நிகழ்வே
உண்மை சொல்ல முடியா
உணர்வை காண தெரியா
கண்ணு றக்க கனமே-நமது
கனவு என்ற நிசமாம்
சின்ன வயது நிகழ்வே
சொல்லி வந்த வார்த்தை
மெல்ல பேசும் உளறல்-மீண்டும்
சொல்லி பார்க்க விடுமாம்
வண்ண இளமை நாளை
வாழ்ந்து முடிந்த வேளை
திண்ணை தோறும் சென்று-அதை
தெருவில் பேச விடுமாம்
உண்ண முடியா விருந்தய்
உறக்கம் கூட தொடரா
வண்ண மேனி கனவே-காதல்
வாசல் தேடி தருமாம்
சின்ன பெரிய சனங்க
சிரித்துப் பேசும் மனங்க
எண்ணம் பேசும் நிசமே-காலை
எழுமுன் வரும் கனவாம்
எண்ணம் போல வருமாம்
இந்த உண்மை நிசமாம்
வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு
வாசம் கூட தருமாம்
/// எண்ணம் போல வருமாம்
ReplyDeleteஇந்த உண்மை நிசமாம் ///
ரசிக்க வைத்தது...
வாழ்த்துக்கள் ஐயா....
உங்கள் ரசனைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி
Deleteகனவு மகிழ்ச்சியை தரட்டும்..!
ReplyDeleteகனவு பலிக்கிறதோ இல்லையோ கவிதை எப்படி? நீங்க வந்ததுக்கு மகிழ்ச்சிங்க
Deleteஎண்ணம் போல வருமாம்
ReplyDeleteஇந்த உண்மை நிசமாம்
வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு
வாசம் கூட தருமாம்//
நனவில் நடந்தவை கனவாக வரும் போது ஆனந்தம் தான்.
நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்கம்மா
Deleteசின்ன வயது நிகழ்வுகள்...
ReplyDeleteகவிதையில் நினைவுகளாகத் தெரிகிறது கவியாழி ஐயா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete//எண்ணம் போல வருமாம்
ReplyDeleteஇந்த உண்மை நிசமாம்
வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு
வாசம் கூட தருமாம்/
கவிதையை அருமையாக நிறைவு செய்தது இந்த வரிகள்
கவிஞரே புகழ்ந்தமையால் மகிழ்ந்தேன்.நன்றி நண்பரே
Deleteநினைவுகள்
ReplyDeleteகவிவரிகளில்
இனிமையாக...
நன்றிங்க மகேந்திரன்
Deleteஎண்ணம் போல வருமாம்
ReplyDeleteஇந்த உண்மை நிசமாம்
வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு
வாசம் கூட தருமாம்-- இனிமை...
உண்மைதானே கருண்.வந்தமைக்கு நன்றி
Deleteஅருமை.கனவுக் கவியில் நானும் கொஞ்சம்
ReplyDeleteமிதந்துக் களித்தேன்.வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் வரும் நிகழ்வுதானே .இனிமையான தருணம்தானே.
Deleteநன்றிங்க சார் .வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்
tha/ma 8
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteஉண்மை சொல்ல முடியா
ReplyDeleteஉணர்வை காணத் தெரியா
கண்ணுறக்க கணமே-நம்
கனவு என்னும் நிசமாம்//நன்று
ஆனால் இப்போது உங்கள் கனவை வீடியோவாக எடுக்கக்கூடிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம்.இனி எங்கள் கனவுகளை வீடியோவாக பார்க்கமுடியும்
எப்போ கனவு வரும்ன்னு யாருக்கு தெரியும்,அந்த மசினே வாங்கினா ஓசியா தாங்களேன்நண்பரே.நானும் பார்கிறேன்.தகவலுக்கு நன்றி
Deleteபால்யகால நினைவுகளும், காலத்தே நிறைவேறாத ஆசைகளும் ஆழ்மனத்தில் படிந்துகிடக்கும் ஏராள எண்ணங்களுமே கனவின் அடிப்படை என்பதை அழகிய கவியால் உணர்த்திவிட்டீர்கள். பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க மஞ்சரி
Deleteகனவுக் கவியில் திளைத்தோம்.
ReplyDeleteஉங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியே
Deleteதங்களின் கனவுக் கவியில் நானும் கலந்தேன், கனவு வானில் மிதந்தேன். நன்றி
ReplyDeleteஉங்கள் வருகைக் கண்டு வியந்தேன்,மகிழ்ந்தேன்,நன்றி.தொடர்ந்து வருக ஆதரவு தருக
Delete