தெய்வங்கள்

தெய்வங்கள்

என்னுள் மழையைத் தா !

மோகமாய்
பவனிவரும்
பருவ மங்கை மேகமே

அங்கங்கள் அசைவதால்
உன் மேகலைகள்
திரண்டெழுந்தே
இடிவருதோ

மின்னலும்
கண்டவுடன்
பயந்து மின்னுகிறதோ

உன் விருப்பத்தால்
மீண்டும் மீண்டும்
மழை வருதோ

தாகமே தீருமுன்
தடம்பார்த்து
ஓடும் மழைநீர்

தவம் கிடக்கும்
மரங்களுக்கு
சேர்கின்றதோ

ஆகவே
மேகமாய் தவழ்ந்து வா
மீண்டும் மீண்டும்
அசைந்துவா

என் மனதும்
மகிழ வா
என்னுள் மழையைத் தா

Comments

  1. அருமை...

    அனைவருக்கும் குளிர்ச்சி தரட்டும்...

    ReplyDelete
  2. நிச்சயம் எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் நீங்கள் தளத்துக்கு வருவதுபோல சந்தோசம்தானே நண்பரே.நன்றி

    ReplyDelete
  3. தவம் கிடக்கும்
    மரங்களுக்கு
    சேர்கின்றதோ

    மழை தருமே மகிழ்ச்சி ..!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானம்மா,நீங்களும் நானும் எல்லோரும் சிறக்க எல்லாமும் சிரிக்க வாழ்த்துவதில் இருவருக்கும் பங்கு உண்டு உண்மைதானே

      Delete
  4. nalla kavithai mazhai..!

    ReplyDelete
  5. மழைக்கவிதை அருமை! விரைவில் மழை பொழிந்து நாடு வளமடையட்டும்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வரும் நிம்மதி தரும் சுரேஷ்

      Delete
  6. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  7. இங்கு மகிழ வந்துவிட்டதே..... இருநாட்களாக.....

    கவிதை + மழை = இருமழையில் நனைந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ எனது வாக்கு பலித்து விட்டதா? கவிஞனின் வாக்கு பொய்யாகாது?

      Delete
  8. என் மனதும்
    மகிழ வா
    என்னுள் மழையைத் தா - super...

    ReplyDelete
    Replies
    1. அழுத்தமான உங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  9. பூமியெங்கும் மழை பொழியட்டும் மண்ணோடு மனங்களும் நனையட்டும்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பமும் என்விருப்பமும் ஒன்றே.நன்றிங்க ஸ்ரீராம்.தொடர்ந்து வாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more