அன்னையர் தின வாழ்த்துக்கள்
என்னையே ஈன்ற
எனக் குயிரீந்த
கல்லே யல்லாத
கடவுள்கள் நீவீரே
அன்னையின் சேவையை
அருகில் செய்யும்
திண்ணைப் பாட்டியும்
தேடும் தெய்வமே
உண்மை உணர்ந்து
உள்ளம் உவந்து
செவ்வனே செய்யும்
செவிலியரும் அன்னையே
பிள்ளையாய்ப் போற்றி
படிப்பைக் கொடுத்து
நல்லொழுக்கம் தந்த
ஆசிரியரும் உண்மையே
அருகருகே படித்தாலும்
அன்பாய் பழகிய
பள்ளித் தோழியரும்
பண்பில் அன்னையே
என்னையும் ஆணாய்
எடுத்துச் சொன்ன
மனைவிக்கும் இன்று
நன்றி சொல்லுவோம்
எனக் குயிரீந்த
கல்லே யல்லாத
கடவுள்கள் நீவீரே
அன்னையின் சேவையை
அருகில் செய்யும்
திண்ணைப் பாட்டியும்
தேடும் தெய்வமே
உண்மை உணர்ந்து
உள்ளம் உவந்து
செவ்வனே செய்யும்
செவிலியரும் அன்னையே
பிள்ளையாய்ப் போற்றி
படிப்பைக் கொடுத்து
நல்லொழுக்கம் தந்த
ஆசிரியரும் உண்மையே
அருகருகே படித்தாலும்
அன்பாய் பழகிய
பள்ளித் தோழியரும்
பண்பில் அன்னையே
என்னையும் ஆணாய்
எடுத்துச் சொன்ன
மனைவிக்கும் இன்று
நன்றி சொல்லுவோம்
படிப்பவர்கள் அனைவரையும் நிச்சயம்
ReplyDeleteஅவரவர்கள் தாயின் நினைவில்
கொஞ்சம் தஞ்சமடையச் செய்யும்
அருமையான சிறப்புப் பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
நீங்கள் கூறியதைப் போல வஞ்சனை இல்லா மனமும் அளவில்லா அன்பும் உடைய தாயை போற்றுதல் நன்றே.
Deleteநல்ல சிந்தனை.
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துகள்.
உண்மைதானே நண்பரே.இந்த நேரத்தில் நன்றி சொல்ல நமக்குக் கிடைத்த வாய்ப்பு.உங்கள் வருகைக்கு நன்றி
Deleteசிறப்பு கவிதை அருமை...
ReplyDeleteஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
நன்றிங்க நண்பரே எல்லோருக்கும் சொல்லுவோம் அன்னையர்தின வாழ்த்துக்கள்
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteபார்க்கும் பெண்கள் அனைத்துப் பேர்களையும் அன்னையரா கப் போற்றி எழுதிய கவிதை அருமை! மாறுபட்ட, சீரிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள்! மனைவியும் ஒரு அன்னையே என்று அவளுக்கும் வாழ்த்து கூறியது மனதை தொட்டது.
ReplyDeleteஉண்மைதானே அம்மா.அன்னைக்கு அடுத்தது மனைவியே அன்னையாகிறாள் என்பது உண்மைதான்,உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா
Deleteஅனைத்துப் பெண்களையும் அன்னையராய்ப் போற்றி எழுதிய கவிதை மிக அழகு. மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!
ReplyDeleteநன்றிங்க கிரேஸ்.அன்னையர் தினத்துக்கும் நீங்கள் தளத்துக்கு வந்தமைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்
Deleteஅடேங்கப்பா.. மன்னிக்கவும் அடேங்கம்மா
ReplyDeleteகவிதையைப் பற்றி சொல்லவில்லையே .ஆனாலும் வந்தமைக்கு நன்றி
Deleteஇனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்க வந்தமைக்கு நன்றிகம்மா
Deleteஆஹா..ஆஹா... அருமை...அருமை..
ReplyDeleteதாய் முதல் தோழிவரையும், பாடம் கற்பித்த ஆசிரியர் முதல் இன்ப துன்பத்தில் பங்கெடுக்கும் மனைவி வரைக்கும் அனைவரையும் அன்னையாய் எண்ணி கவிதை வடித்த பாங்கு அருமை.. !!!
படித்தேன் ரசித்தேன்..!!
பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி நண்பரே தொடர்ந்து வருக
Deleteஅழகான கவிதை.. வாழ்த்துகள்..
ReplyDeleteஅன்னையர் தின சிறப்புக் கவிதை அருமை !
ReplyDeleteஅனைவருக்கும் இந்த வாழ்த்துக்கள் சென்றடையட்டும் .
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.அன்னையர் தின வாழ்த்துக்கள்
Deleteஅன்னையரை போற்றுவோம்.
ReplyDeleteஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்னையரைப் போற்றுவோம் அன்பாக இருப்போம்.வருகைக்கு நன்றி
Deleteகுழந்தை பெறுவதால் மட்டும் அன்னையாகி விட முடியாது.அக் குழந்தையை அன்போடு பேணிப் பராமரித்தாலே அன்னை என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅன்பை செலுத்தும் அனைவரும் எனது பார்வையில் அன்னையறாய் தெரிகிறார்கள்
Deleteதோழியரையும் அன்னையாய் காணும் பண்புக்கும் பாராட்டுக்கள்
ReplyDeleteஏன் இருக்கக்கூடாது நம்மோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகியவர் என் அன்னையைப்போல
Deleteசுற்றிலும் வாழும் உறவுகள் அனைவரிலும் அன்னையை கண்டு போற்றி கூறியமை அருமை
ReplyDeleteநன்றிங்கம்மா.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Delete