இதயமே .... இனிய இயந்திரமே !
இதயமே
இயக்கத்தை நிறுத்தாத
இனிய இயந்திரமே !
என்றுமே நிற்காத
உன் தந்திரமே
எனக்கு மாத்திரமே !
காற்றடைத்த
என் உடம்பில்
திரவம் குடித்து
தினம் வாழ்கிறாயே !
மகிழ்ச்சியும் வேதனையும்
ஏற்றுக்கொள்ளும்
உனக்கு
எசமான் யார் ?
நீயும் பரிதாபம்
ஓய்வு கொடுத்தால்
மீண்டும் வருவாயா
வருந்தி விடுவாயா !
எனக்கும் ஆசை
எப்படி கொடுப்பதென்று
நான் இருந்தால் முடியாது
இறந்தால் முடியும் ?
வேண்டுமென்று கேட்பாயா
வேதனையில் துடிப்பாயா
போதுமென்றுச் சொல்வாயா
போய்சேர்ந்துத் துயில்வாயா.....
இயக்கத்தை நிறுத்தாத
இனிய இயந்திரமே !
என்றுமே நிற்காத
உன் தந்திரமே
எனக்கு மாத்திரமே !
காற்றடைத்த
என் உடம்பில்
திரவம் குடித்து
தினம் வாழ்கிறாயே !
மகிழ்ச்சியும் வேதனையும்
ஏற்றுக்கொள்ளும்
உனக்கு
எசமான் யார் ?
நீயும் பரிதாபம்
ஓய்வு கொடுத்தால்
மீண்டும் வருவாயா
வருந்தி விடுவாயா !
எனக்கும் ஆசை
எப்படி கொடுப்பதென்று
நான் இருந்தால் முடியாது
இறந்தால் முடியும் ?
வேண்டுமென்று கேட்பாயா
வேதனையில் துடிப்பாயா
போதுமென்றுச் சொல்வாயா
போய்சேர்ந்துத் துயில்வாயா.....
நினைவிற்கு ஓய்வு ஏ(எ)து...?
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
சொல்ல முடியா சுகமான தருனங்கள்,வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க தனபாலன் சார்
ReplyDeleteஇதயம் - அதற்குதான் எத்தனைப் பரிமாணம்! இதயத்துக்கும் ஓய்வளிக்க விரும்பும் இளகிய மனம் கொண்ட தங்களுக்கும் இனிய கவிதைக்கும் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஎன் மனம்போல இதயமும் நன்றாய் உள்ளது.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteஇதயம் கவரும் கவிதை!
ReplyDeleteநன்றிங்கயா.தொடர்ந்து வாங்க
Deleteவித்தியாசமான மாறுபட்ட சிந்தனை
ReplyDeleteரசித்தேன்.தொடர வாழ்த்துக்கள்
இப்போதைக்கு எனது மனநிலை அப்படித்தான் உள்ளது.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteமகிழ்ச்சியும் வேதனையும்
ReplyDeleteஏற்றுக்கொள்ளும்
உனக்கு
எசமான் யார் ? - மனதை கவரும் கவிதை..
நன்றிங்க கருண்.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteமகிழ்ச்சியும் வேதனையும்
ReplyDeleteஏற்றுக்கொள்ளும்
உனக்கு
எசமான் யார் ?
இதயம்.... இனிய இயந்திரமே !
உண்மைதான் நன்றிங்கம்மா
Delete
ReplyDeleteவணக்கம்
இதயக் கவிதை! இனிய கவிதை!
உதயக் கதிரின் ஒளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றிங்கைய்யா
Delete
ReplyDeleteதமிழ்மணம்! 5
நன்றிங்கையா
Deleteஇதயம்.
ReplyDeleteஇதயமில்லையேல்
மகிழ்வேது
வேதனையோது
வாழ்க்கைதான் ஏது.
இனிய இயந்திரம்தான்.
அருமையான கவிதை அய்யா நன்றி
வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க
Delete''..நான் இருந்தால் முடியாது
ReplyDeleteஇறந்தால் முடியும் ?...'''
ஏனிந்த ஆசை.?
வேதா. இலங்காதிலகம்.
அனைத்துக்கும் ஆசைபடு என்பதுதான் காரணம்.நன்றிங்கம்மா என் உணர்வை புரிந்தமைக்கு
Deleteவேண்டுமென்று கேட்பாயா
ReplyDeleteவேதனையில் துடிப்பாயா
போதுமென்றுச் சொல்வாயா
போய்சேர்ந்துத் துயில்வாயா.....//அருமையான வரிகள்
நன்றிங்க நண்பரே .தொடர்ந்து வாங்க டினேஷ்
Deleteஇதயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கவி படிக்கவும் ஒரு இதயம் வேண்டுமே....!
ReplyDeleteசில வீடுகளில், இல்லை, இல்லை நிறைய வீடுகளில் தாயோ மனைவியோ எல்லோருக்கும் சாப்பாடு கொடுப்பார்கள். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று எத்தனை பேர் பார்க்கிறார்கள்? பல நேரங்களில் அவர்கள் சுவாரஸ்யம் இன்றி கொஞ்சமாகவும், மிஞ்சியதையும் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வார்கள்.
ஓய்வில்லாமல் உழைக்கும் இதயம் பற்றிய உங்கள் கவலைக்கவி படித்ததும் எனக்கு இதுதான் நினைவு வந்தது. :)
உண்மைதான் நண்பரே.வருகைக்கு நன்றி.தொடர்ந்து வாருங்கள்
Deleteதமிழ் மனம் வீசும் கவிதை ...
ReplyDeleteநன்றிங்க தொடர்ந்து வாங்க
Deleteநன்றி
ReplyDeleteவேண்டுமென்று கேட்பாயா
ReplyDeleteவேதனையில் துடிப்பாயா
போதுமென்றுச் சொல்வாயா
போய்சேர்ந்துத் துயில்வாயா.....//நல்ல வரிகள்
நன்றிங்க ப்ரியா தொடர்ந்து வாங்க
Delete