Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன்

எப்போதோ எண்ணியதை எழுதியதை மறக்காமல் இப்போது எழுதுகிறேன் இளமையின்றி  ஏங்குகிறேன் வாழ்க்கை ஓட்டத்திலே வெற்றிபெற ஓடிக் கொண்டே வாய்த்த வாய்ப்புகளை வழிதவறி விட்டுவிட்டேன் அப்போது எண்ணவில்லை அதற்குமே நேரமில்லை அந்தகாலமும் முடிந்ததால் அதற்குமே வேலையில்லை தப்பாக நினைப்போரே தரமறிந்துப் பார்ப்போரே முப்போதும் காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன் எப்போதும் மகிழ்ச்சியாய் எண்ணமதை வைத்திருக்க தற்போதே எழுதுகிறேன் தவறிருந்தால் மன்னிப்பீரே கண்குளிரப் படித்திடவும் கவிஎழுதி முடித்திடவும் காதலிக்கத் தமிழுண்டு காலமெல்லாம் மகிழ்வுண்டு

மேகத்தின் சேதியது...

Image
மேகத்தின் சேதியது மேனியிலே பட்டவுடன் தாகமெடுக்கிறதோ தனிமை தவிக்கிறதோ? பூவெல்லாம் பேசியதும் புல்செடியும் கேட்டவுடன் பூவைக்கு இனிக்கிறதோ பூவைக்கத் துடிக்கிறதோ? வழியெங்கும் பசுமரங்கள் வாழ்த்தாக தூவியே பூமழை பொழிகிறதோ புதுப்பாதைத் தெரிகிறதோ பச்சைக்கிளியும் புறாவும் பக்கமாய்  நெருங்கியே இச்சைச் செய்வது இம்சையாய் இருக்கிறதோ? இளம்மனது கருகியதால் இன்பத்தை இழந்துவிட்டு இப்போது ஏக்கத்தையே இனிமையாக்க மறுப்பதோ? தவறென்ன வாழ்கையில் தைரியமாய் செய்யுங்கள் உறவங்கே மறுத்தாலும் உரிமையாய் தொடருங்கள் வாழ்கையை தீர்மானிக்க வயதுண்டு அறிந்துகொள் வாழ்கையே உன்கைளில் வாழ்வுமுந்தன் உரிமையே

கடவுளை நானும் கண்டதுண்டு..

கடவுளை நானும் கண்டதுண்டு கண்டு நன்றி சொன்னதுண்டு கண் கலங்கி பார்த்ததுமே கடவுளே மயங்கி நின்றதுண்டு பழகியே நான் மகிழ்வதுண்டு பாசமோடு அன்பு கொண்டு பார்க்கும் போது பரவசமாய் பக்தியோடு அமைதி கொண்டு மன மொடிந்த நேரத்திலே மகிழ்ச்சி வேண்டி நின்றதுண்டு நாலு வார்த்தை  மகிழ்ச்சியாக. நானுயர நன்று கேட்டதுண்டு கள்ளமில்லா  நட்பை நானே கடவுளாகப் பார்த்த துண்டு கடைசியிலே சிலர் மறந்து கஷ்டம் தந்து பிரிந்ததுண்டு உடலதிலே உள்கூட்டில் ஒளிந்திருக்கும் தசையதுவே உண்மை அன்பு நேர்மையாக்கும் ஒளி மிகுந்த கடவுளாக்கும் உள்ளபடி சொல்லப் போனால் உருவ முள்ள கடவுளில்லை உள்ளோரின் நல்ல அன்பே உணர்ச்சி யுள்ள கடவுளாகும்

உத்தமியே நற்சுவையே ...

தூக்கத்திலே தொல்லைத் தரும் தூரதேசப் பேரழகித் தமிழே ஏக்கத்திலே  எப்பொழுதும் நீ என்னை ஏன் இம்சிக்கிறாய் ஆக்கத்திலே உன் பெயரை அனுதினமும் உச்சரித்து ஆனந்த பாடுகிறேன் உன்னை ஆண்டவ நெனனான் போற்றுகிறேன் பாக்களிலும் பரவசம் தந்தாய் பார்த்தவுடன் நவரசமும் ஈந்தாய் ஈரெழுத்து மூவெழுத்து சீருடன் எழுத வைத்தாய் சிரித்தாய் சீர்கொடுத்துச் செம்மைப் படுத்தி சின்னஞ்சிறுப்  பிழையும் பொறுத்து எதுகை மோனையுடன் என்னை எழுதத் தூண்டியே  மகிழ்கிறாய் என்னை ஆட்கொண்டத் தமிழே எண்ணமதில் சிறைபிடித்த அமுதே உன்னை எப்படி மறப்பேன் உத்தமியே நற்சுவையே இனியே..

தினமும் பார்த்தேச் சிரித்திடுமாம்

ஒவ்வொரு உயிருக்கும் உணர்ச்சியுண்டு உண்மையில் அதற்குமே வருத்தமுண்டு பூவும் பிஞ்சும் உதிர்வதனால் பெற்றவள் மரத்துக்கும் செடிக்கும் பிரிவுண்டு பொல்லா நோயும் வரும்போதும் பொழுதும் தலையைச் சாய்த்திடுமே எல்லா உயிரும் மரணத்திலே ஏக்கம் கொண்டே மடிந்திடுமே இடியும் மழையும் வரும்வேளை மனதில்  மகிழ்ந்தே இருந்திடுமே இயற்கை சீற்றம் வரும்போது எளிதில் பயந்தே சரிந்திடுமாம் நீரைச் சுவைத்தே வாழ்த்திடுமாம் நிம்மதி கொண்டேப்  பாடிடுமாம் தேரைப் பாம்பு பூச்சிகளை தினமும் பார்த்தே சிரித்திடுமாம் இயற்கைப் பொய்த்துப் போனாலே எல்லா உயிரும் கலங்கிடுமாம் எப்படி மனித வாழ்க்கையோ  அதற்கும் அப்படி உயிருண்டாம்

ரசித்தவர்கள்