தெய்வங்கள்

தெய்வங்கள்

தினமும் பார்த்தேச் சிரித்திடுமாம்

ஒவ்வொரு உயிருக்கும் உணர்ச்சியுண்டு
உண்மையில் அதற்குமே வருத்தமுண்டு
பூவும் பிஞ்சும் உதிர்வதனால் பெற்றவள்
மரத்துக்கும் செடிக்கும் பிரிவுண்டு

பொல்லா நோயும் வரும்போதும்
பொழுதும் தலையைச் சாய்த்திடுமே
எல்லா உயிரும் மரணத்திலே
ஏக்கம் கொண்டே மடிந்திடுமே

இடியும் மழையும் வரும்வேளை
மனதில்  மகிழ்ந்தே இருந்திடுமே
இயற்கை சீற்றம் வரும்போது
எளிதில் பயந்தே சரிந்திடுமாம்

நீரைச் சுவைத்தே வாழ்த்திடுமாம்
நிம்மதி கொண்டேப்  பாடிடுமாம்
தேரைப் பாம்பு பூச்சிகளை
தினமும் பார்த்தே சிரித்திடுமாம்

இயற்கைப் பொய்த்துப் போனாலே
எல்லா உயிரும் கலங்கிடுமாம்
எப்படி மனித வாழ்க்கையோ
 அதற்கும் அப்படி உயிருண்டாம்




Comments

  1. உண்மைதான் சார்... இயற்க்கை சரியானபடி இயங்கா விடில் எதுவுமே சரியாக இராது ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.இனிமேல் இயற்கையாக மரம் செடி,புல்,பூண்டுக்கும் உயிருண்டு என்பதை அறிந்துகொள்ள வேண்டும்

      Delete
  2. // இயற்கைப் பொய்த்துப் போனாலே
    எல்லா உயிரும் கலங்கிடுமாம்// உண்மை உண்மை!
    அழகான கவிதை..ஆமாம், இன்று நானும் இயற்கைப் பற்றியே எழுதியுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றிங்கம்மா

      Delete
  3. பரந்து விரிந்த சிந்தனையில்
    பிறந்த படைப்பு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

      Delete
  4. உண்மை வரிகள்... உணர வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

      Delete

  5. "இயற்கைப் பொய்த்துப் போனாலே
    எல்லா உயிரும் கலங்கிடுமாம்
    எப்படி மனித வாழ்க்கையோ
    அதற்கும் அப்படி உயிருண்டாம்"

    அருமையான வரிகள். வாழ்த்துகள் ஐயா !!!

    ReplyDelete
  6. உயிருள்ள மரங்களுக்கு மனிதன் எமனாய் மாறுவது ..நிறுத்தப்படவேண்டும் என்பதை சொல்லி இருக்கும் விதம் அருமை !

    ReplyDelete
    Replies
    1. இயற்கையை போற்றுவோம் நமக்கு வரும் இன்னலைத்தவிர்ப்போம்.வருகைக்கு நன்றிங்க

      Delete
  7. உண்மை தான் ஐயா இயற்கை இல்லை என்றால் உலகே இல்லை என்ற நிலை வருமுன் நாமெல்லாம் மாறவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தானே மாறிவருகிறது சுற்றுசூழல் சீர்கேடு எல்லா பகுதியிலும் உள்ளதை தவிர்க்க வேண்டும்

      Delete
  8. இயற்கையைப் போற்றியே
    இனிமையைக் காணுவோம்
    இயம்பினீர் பாட்டிலே
    இதமான செய்தியே...!

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!.

    த ம. 5

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ.

      Delete

  9. இயற்கைப் பொய்த்துப் போனாலே
    எல்லா உயிரும் கலங்கிடுமாம்
    >>
    இன்னிக்கு இதான் நாம அனுபவிச்சிட்டு இருக்கோம்.., சுவையான குடி தண்ணி இல்லாம, காற்று இல்லாம..,

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இப்போதே கஷ்டப்படுகிறோம் எதிர் காலத்தில் என்ன நடக்குமோ?

      Delete
  10. இயற்கைப் பொய்த்துப் போனாலே
    எல்லா உயிரும் கலங்கிடுமாம்
    எப்படி மனித வாழ்க்கையோ
    அதற்கும் அப்படி உயிருண்டாம்

    அருமையான கவனிப்பு ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிங்கம்மா

      Delete
  11. இயற்கைக்கும் உயிருண்டு என்று இனிமையாக உரைத்தமை அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே சுரேஷ் எல்லா படைப்புக்கும் உயிருண்டு என்பதில் மாற்றுக் கருத்தில்லைதானே,வருகைக்கு நன்றிங்க

      Delete
  12. இயற்கையின் வனப்பில்
    செயற்கைகள்
    செயலிலந்துபோகும்..


    அழகிய கருத்துகளடங்கிய வரிகள். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  13. இயற்கை இன்றேல் நாமேது?
    அருமையான கவிதை அய்யா

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மைதான் அதனால் இயற்கையை மதிப்போம்

      Delete
  14. வருகைக்கு நன்றிங்க கருண்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more