காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன்
எப்போதோ எண்ணியதை
எழுதியதை மறக்காமல்
இப்போது எழுதுகிறேன்
இளமையின்றி ஏங்குகிறேன்
வாழ்க்கை ஓட்டத்திலே
வெற்றிபெற ஓடிக் கொண்டே
வாய்த்த வாய்ப்புகளை
வழிதவறி விட்டுவிட்டேன்
அப்போது எண்ணவில்லை
அதற்குமே நேரமில்லை
அந்தகாலமும் முடிந்ததால்
அதற்குமே வேலையில்லை
தப்பாக நினைப்போரே
தரமறிந்துப் பார்ப்போரே
முப்போதும் காதலுக்கு
முடிவுண்டாச் சொல்லுங்களேன்
எப்போதும் மகிழ்ச்சியாய்
எண்ணமதை வைத்திருக்க
தற்போதே எழுதுகிறேன்
தவறிருந்தால் மன்னிப்பீரே
கண்குளிரப் படித்திடவும்
கவிஎழுதி முடித்திடவும்
காதலிக்கத் தமிழுண்டு
காலமெல்லாம் மகிழ்வுண்டு
எழுதியதை மறக்காமல்
இப்போது எழுதுகிறேன்
இளமையின்றி ஏங்குகிறேன்
வாழ்க்கை ஓட்டத்திலே
வெற்றிபெற ஓடிக் கொண்டே
வாய்த்த வாய்ப்புகளை
வழிதவறி விட்டுவிட்டேன்
அப்போது எண்ணவில்லை
அதற்குமே நேரமில்லை
அந்தகாலமும் முடிந்ததால்
அதற்குமே வேலையில்லை
தப்பாக நினைப்போரே
தரமறிந்துப் பார்ப்போரே
முப்போதும் காதலுக்கு
முடிவுண்டாச் சொல்லுங்களேன்
எண்ணமதை வைத்திருக்க
தற்போதே எழுதுகிறேன்
தவறிருந்தால் மன்னிப்பீரே
கண்குளிரப் படித்திடவும்
கவிஎழுதி முடித்திடவும்
காதலிக்கத் தமிழுண்டு
காலமெல்லாம் மகிழ்வுண்டு
தமிழின் மீதான காதல் ஈரேழு ஜென்மத்திலயும் மாற வேணாமே!
ReplyDeleteநன்றிங்க ராஜி.நீங்கள் சொன்னபடியே இருக்கத்தான் ஆசை
Deleteதமிழ்மணத்துல இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்
ReplyDeleteசகோதரிக்கு நன்றி...
Delete/// காதலிக்கத் தமிழுண்டு
ReplyDeleteகாலமெல்லாம் மகிழ்வுண்டு... ///
சிறப்பு... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தனபாலன்
Deleteஅருமையான கவி வரிகள்!
ReplyDeleteஎங்கேயும் எப்போதும் எதிலும் காதல் இருந்தால்தான் வாழ்க்கையை ரசிக்கமுடியும்.
வாழ்த்துக்கள் சகோ!
இளமைதிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
Deleteada....
ReplyDeleteஆமா
Deleteகண்குளிரப் படித்திடவும்
ReplyDeleteகவிஎழுதி முடித்திடவும்
காதலிக்கத் தமிழுண்டு
காலமெல்லாம் மகிழ்வுண்டு
மகிழ்வு நிலைக்கட்டும்..!
நிச்சயம் நிலைக்கும் நிம்மதியும் உங்களைப்போல் கிடைக்கும்
Deleteதமிழை காதலிக்க வயதில்லை! சிறப்பான படைப்பு! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteஎல்லோருக்குமே அன்னையவள் .வருகைக்கு நன்றி
Deleteவாலிபத்தில் காதலிக்க
ReplyDeleteஜாதகத்தில் வழியில்லை என்பது
தமிழுக்கு இல்லைதானே
தமிழும் நம் மனம் போல
எப்போதும் இளமையானதுதானே ?
மனம்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் உங்கள் வருகைக்கும் நன்றிங்க சார்.நீங்கள் சொன்னதுபோல் இளமை இளமை !!
Deletetha.ma 5
ReplyDeleteநன்றிங்க
Deleteகாலமெல்லாம் உங்கள் காதல் வாழ்க !
ReplyDeleteயாராலும் மறுப்பு சொல்லமுடியாது எல்லோரும் வாழ்த்தத்தான் வேண்டும்
Delete***எப்போதோ எண்ணியதை
ReplyDeleteஎழுதியதை மறக்காமல்
இப்போது எழுதுகிறேன்
இளமையின்றி ஏங்குகிறேன்.****
காதலுக்கு முடிவுண்டானு நான் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து பார்க்க முடியாது. அதனால் தெரியவில்லை! :)
ஆனால் உங்க இளமை போயிட்டாலும் உங்க காதல் கவிதை இன்னும் இளமையாகவு அழகாகவும்தான் இருக்கு! :)
தமிழுக்கு முதுமையில்லை வாழுங்கள் நான் உங்களை வாழ்த்துகிறேன் முனிவர்கள் ரிஷிகள் இன்னும் வாழ்வதாக சரித்திரம் சொல்கிறது நீங்கள் ஆய்வு செய்யும் உடல்கூறுகளில் அப்படி மாற்றம் செய்ய முடிந்தால் முடியுமே.ஆயிரம் ஆண்டுகள் வாழ நான்வாழ்த்துகிறேன் அப்புறம் சொல்லுங்கள்
Deleteஎந்தக் காதலுக்குமே கால நிர்ணயம் கிடையாது! ! ரசிக்கும்படி இருக்கிறது கவிதை.
ReplyDeleteதமிழைக் காதலிக்க வயதும் அதிகமில்லை,வருகைக்கு நன்றிங்க
Delete
ReplyDeleteஉண்மையுடன் நம்பிக்கையுடன் பழகும்
உள்ளங்களுக்கு
காதலுக்கு முடிவில்லை காணும்...
காதலுக்குச் சாவில்லையே!
ஆமாம் .நமக்கெலாம் காதல்கொண்ட தமிழால் காதலித்துக் கொண்டே இருப்போம் காலம் முடியும்வரை.
Deleteகாதலுக்கு ஏது முடிவு ஐயா?
ReplyDeleteஅதுவும் தமிழ்க் காதல் மிகுதியாகுமே தவிர குறையாது..பின்பு எப்படி முடிவு வரும்.. நல்ல கவிதை ஐயா!
இறுதிவரை துணைக்குவரும் தோழன் எப்படி மறக்க முடியும் தொடரும்
Delete