Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இயற்கையின் மகிழ்ச்சியால் இன்னலே அதிகமோ ?

Image
                                       இயற்க்கையின் மகிழ்ச்சியால் இன்னலேஅதிகமோ இறந்திடும் உயிர்களே இதற்குத் தான்  சாட்சியா இடியும் மின்னலும் யாருக்காய் வந்தது இழப்பினால் மகிழ்ச்சியும் யாரிடம் சென்றது பிழைப்பே சோகமாய் பிரிவுடன்  சென்றது பெருவெள்ளம் பக்தரை பினையாக்கிச் சென்றது உயிர்களைக் காக்கும் உயிரில்லாக் கடவுளும் ஓடி ஒளிந்ததா ஒய்வாக நின்றதா? கிடைத்த வாய்ப்பினால் குறைத்துக் கொண்டதா?

விட்டுப் போன உறவு

விட்டுப்போன உறவும் வேதனைகள் சிலதும் பட்டுபோயும் நாளாச்சு பார்த்துத் தூரப்போயாச்சு கட்டுகடங்கா அன்பில் கடைசிவரை இருக்க காத்திருந்த நட்பும் காலங்கடந்துப் போயாச்சு தொட்டுப் பேசி மகிழ்ந்து துன்பம் மறந்து சிரித்தோம் கட்டுக்கதைப் பலதால் கவலையிப்போ வந்தாச்சு கெட்டுப் போன மனதை திட்டிப்பேசிக் கேட்க தைரியம் தூரப் போயாச்சு தவிப்பு கொண்டே நின்னாச்சு தட்டுப் பட்டு மீண்டும்  தலை குனிந்தே வேண்டி புட்டுப் பார்க்கச் சொல்லி புரியாம மின்று தவிச்சாச்சு

மகளிர் அணியில் மஞ்சுபாஷினி....!!

Image
இனமோ மொழியோ தடுக்காமல் இணைந்தே மகிழ்ந்தோம் வலையாலே பணமோ பொருளோ தேவையின்றி பாசம் கொண்டே இருந்தோமே இளைய வரோடு இணையாக இனிதே சிரித்தோம் சுவையாக அய்யா முகத்தில் பிரகாசம். ஆயிரம் சக்தியைக் கண்டோமே சேட்டைச் சொன்ன சிரிப்பையுமே சேர்ந்தே சிரித்துப்  பார்த்தோமே பழகிய நேரம் குறைந்தாலும் பசுமை மறந்தேப் போகாதே மகளிர் அணியில் மஞ்சுபாஷினியும் மகிழ்ந்தே வந்த சசிகலாவும் மதுமதி கணேசும் கோவைஆவியும் சீனி ரூபக்கும் மாணவரும் அத்தனைப் பேரும் அன்பாக அடிமை கொண்டோம் நட்பாலே சிரித்தே மகிழ்ந்த அந்நேரம் சிறைகை விரித்தே பறந்தோமே எத்தனை வலிமை நட்புக்கு யாரிடம் முடியும் வீராப்பு பித்தமாய் இணைந்த  நட்பாலே பிரிவும் வருமே அதனாலே அன்பாய் பழகிப் பாருங்கள் அடிமைச் சுகத்தைக் காணுங்கள் பண்பாய் சேர்ந்து பழகியே பாசத்தோடு மகிழ்ந்தே வாழுங்கள்

தமிழைப் போற்றியேப் பதிவிடுவோம்

நன்றி சொல்லா நட்பிணையே நாங்கள் வளர்க்க விரும்புகிறோம் நல்லவர் கெட்டவர் வெறுப்பின்றி நண்பராய் நினைத்தே பழகுகிறோம் வல்லவர் வறியவர் சொல்லாமல் வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம் இல்லையே என்பதைஉணர்த்தாமல் இருப்பதைப் பகிர்ந்தே புசித்திடுவோம் முதியவர் இளையவர் பகிர்வின்றி முறையே நட்பாய் மதித்திடுவோம் ஆடவர் பெண்டீர் அனைவருமே அன்பாய் மதித்தே நடந்திடுவோம் நல்லவவை கெட்டவை நடப்பதையே நாலே வரிகளில் எழுதிடுவோம் நன்மையும் தீமையும் நோக்காமல் நலமே போற்றியே பதிவிடுவோம்  இன்னல் துயரம் நடப்புகளை இணைய வலையில் பகிர்ந்திடுவோம் எல்லா ஊரிலும் எம்தமிழை இணையம் கொண்டே வளர்த்திடுவோம் சாதி மதங்களை மறந்திடுவோம் சமத்துவம் நன்றே போற்றிடுவோம் ஊரும் பேரும் தெரியாமல் உணர்வால் தமிழனய் அறிந்திடுவோம் இல்லம் இனமே பாராமல் இணைய வழியே பேசிடுவோம் வல்லமைத் தந்த தமிழுக்கு வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்

என் அப்பாவுக்கு நன்றி சொல்வேன்..

எப்போதும் எந்நாளும் குடும்பமே என்றிருந்த என் அப்பாவுக்கு இப்போது நன்றி சொல்வேன் இதற்காகத் தலை குனிவேன் மழலையிலே மடியில் கிடத்தி மாறாத அன்பு கொண்டு பணிவிடைகள் பலதும் செய்து பாங்குற வளர்த்தத் தந்தையே தப்பேதும் நான் செய்தால் தவறையே சுட்டிக் காட்டி முப்போதும் அறிவுரைச் சொல்லி முறையாக என்னை வளர்த்தாய் தேவையறிந்து தேடித் தந்தாய் தெவிட்டாத இன்பம் தந்தாய் பூவையிணை மணம் முடித்து புதிய வாழ்கையும்  அமைத்தாய் பொருள் சேர்க்கும் வழிமுறையும் பெரியோரின் மன நோக்கம் புரியும்படி சொல்லி வளர்த்தாய் புனிதனாய் என்னை பார்த்தாய் நாள்முழுதும்  உழைத்தாய் நான் வளரப் பாடுபட்டு நல்வாழ்வை எனக்கு தந்த தோள் கொடுத்த தெய்வமே வணங்குவேன் உன்னை எப்போதும் வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன் கனமும் உன்னை மறவேன் கடமையும் உம்போலச் செய்வேன்

ரசித்தவர்கள்