Wednesday, 19 June 2013

மகளிர் அணியில் மஞ்சுபாஷினி....!!

Photo: சென்னை பதிவர் சந்திப்பு


இனமோ மொழியோ தடுக்காமல்
இணைந்தே மகிழ்ந்தோம் வலையாலே
பணமோ பொருளோ தேவையின்றி
பாசம் கொண்டே இருந்தோமே

இளைய வரோடு இணையாக
இனிதே சிரித்தோம் சுவையாக
அய்யா முகத்தில் பிரகாசம்.
ஆயிரம் சக்தியைக் கண்டோமே

சேட்டைச் சொன்ன சிரிப்பையுமே
சேர்ந்தே சிரித்துப்  பார்த்தோமே
பழகிய நேரம் குறைந்தாலும்
பசுமை மறந்தேப் போகாதே

மகளிர் அணியில் மஞ்சுபாஷினியும்
மகிழ்ந்தே வந்த சசிகலாவும்
மதுமதி கணேசும் கோவைஆவியும்
சீனி ரூபக்கும் மாணவரும்

அத்தனைப் பேரும் அன்பாக
அடிமை கொண்டோம் நட்பாலே
சிரித்தே மகிழ்ந்த அந்நேரம்
சிறைகை விரித்தே பறந்தோமே

எத்தனை வலிமை நட்புக்கு
யாரிடம் முடியும் வீராப்பு
பித்தமாய் இணைந்த  நட்பாலே
பிரிவும் வருமே அதனாலே

அன்பாய் பழகிப் பாருங்கள்
அடிமைச் சுகத்தைக் காணுங்கள்
பண்பாய் சேர்ந்து பழகியே
பாசத்தோடு மகிழ்ந்தே வாழுங்கள்
54 comments:

 1. ”மகளிர் அணியில் மஞ்சுபாஷினி....!! என்ற தலைப்பும் கவிதையும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  //அன்பாய் பழகிப் பாருங்கள்
  அடிமைச் சுகத்தைக் காணுங்கள்
  பண்பாய் சேர்ந்து பழகியே
  பாசத்தோடு மகிழ்ந்தே வாழுங்கள்//

  ;))))) மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சென்னை வந்தாலும் சிந்திப்போம் சிரிப்போம் மகிழ்வோம்.உங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 2. ரூபக் தம்பிக்கு அம்மா மெஸ்ல 10 டோக்கன் வாங்குன மாதிரி என்ன ஒரு சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. அந்த வாய்ப்பை நீங்க ஏன் தவற விட்டுடீங்க? உங்களுக்கும் வேண்டுமா வாருங்கள்

   Delete
 3. அருமையான கவிதை...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 4. கலந்து கொள்ள முடியவில்லையே
  என்கிற ஆதங்கம் என்னுள் அனலாய் விரிகிறது
  படமும் அதற்கான அழகான கவிதையும் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதங்கம் புரிந்தது.உங்கள் சூழ்நிலை எனக்குத்தெரியுமே.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 5. இனிமையான சந்திப்பு இது இனி என்றும் தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. என்றுமே தொடரும் இனிமையான தருணங்கள் .நீங்களும் வாருங்கள் எங்களுடன் நிம்மதியாய் மகிழுங்கள்

   Delete
 6. உண்மை தாச! உண்மையே! உணர்ந்து சொன்ன தன்மையே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிங்கய்யா

   Delete
 7. இணைந்த நட்புடன் இசைத்த கவிதனில்
  பிணைந்த அன்பின் பேருவகை கண்டேன்
  துணையென கலந்து தோழர் இருக்கையில்
  வினையதும் கலங்கி விரைந்தோடிடுமே!.

  அற்புதம்! சிறப்பான கவிதையில் சிந்தையில் வந்த
  உவப்பான உண்மையை உரைத்தீர்கள் சகோதரரே!

  அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் !!!

  த ம.6

  ReplyDelete
  Replies
  1. அன்பான தருணங்கள் அனைவருக்கும் கிடைத்தது.அதுபோலவே உங்கள் வருகையும் எனக்கும் மகிழ்வைத் தருது

   Delete
 8. சந்திப்பு சேதி கேட்டு , பார்த்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க நீங்களும் வந்திருக்கலாமே .இன்னும் சிறப்பாய் இருந்திருக்குமே.அடுத்த முறை நீங்களும் வாங்க

   Delete
 9. அட.... நேற்று நடந்த சந்திப்பை கூட கவிதையாய் வடித்துவிட்டீர்களே.... அருமை...

  ReplyDelete
  Replies
  1. நீங்க அந்த படத்தில் இல்லாதது மட்டுமே குறையாய் உள்ளது.அடுத்ததுப் பார்ப்போம்

   Delete
  2. //சீனி ரூபக்கும் மாணவரும்// அப்ப எங்களைத் தான் மாணவர்ன்னு சொன்னீங்களா... இஸ்கூல் பையன இல்லையா

   Delete
  3. ஓ படத்திலா... சரி சரி... இல்லாட்ட சங்கத்து கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன்

   Delete
  4. மாணவனும் ஸ்கூல் பையனும் ஒன்றுதானே.இதுக்கெல்லாம் விளக்கம் தேவையா?,பையன்னு சொல்லாம மாணவர் என்று மரியாதையா தானப்பா சொன்னேன்

   Delete
 10. பதிவர்சந்திப்பு கவிதை அருமை! தலைப்பு பிரமாதம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வுக்கு நன்றிங்க எஸ்.சுரேஷ்

   Delete
 11. சிரித்து மகிழ்ந்த தருணம். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க மாதேவி.நீங்களும் வாங்க

   Delete
 12. மற்றவர்களின் பதிவைப் படித்தேன் நீங்கள் கவிதையாகவே வடித்துவிட்டீர்களே...

  ReplyDelete
  Replies
  1. எங்களோடு அருகில் இருந்தால் நீங்களும் வந்திருக்கலாமே

   Delete
  2. Rishaban Srinivasan சிரித்தே மகிழ்ந்த அந்நேரம்
   சிறைகை விரித்தே பறந்தோமே

   Delete
 13. புலவர்குரல் இராமாநுசம் அன்பாய் பழகிப் பாருங்கள்
  அடிமைச் சுகத்தைக் காணுங்கள்
  பண்பாய் சேர்ந்து பழகியே
  பாசத்தோடு மகிழ்ந்தே வாழுங்கள்

  ReplyDelete
 14. காந்தி மதி எதாவது கருகும் வாசம் வருதா? ஒண்ணுமில்ல்ல இங்க என் வயிறு எரியுது கலந்துக்க முடியலியேன்னு

  ReplyDelete
 15. Vetha ELangathilakam அன்பாய் பழகிப் பாருங்கள்
  அடிமைச் சுகத்தைக் காணுங்கள்
  பண்பாய் சேர்ந்து பழகியே
  பாசத்தோடு மகிழ்ந்தே வாழுங்கள்

  ReplyDelete
 16. சந்தித்து உரையாடி மகிழ்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்கயா ! நீங்களும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க

   Delete
 17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அடுத்தமுறை நீங்களும் வரவேண்டும்.நினைவினில் மூழ்க வேண்டும்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 18. வேறு வலை ஒன்று இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை.

  ReplyDelete
 19. என்னைப் போன்றவர்கள் இந்த மாதிரி
  படங்களைப் பார்த்து மகிழ வேண்டியது தான்.

  படங்களும் பாடலும் அருமை கவியாழி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் இங்கு வந்துட்டுப் போங்க
   நிறைவான மகிழ்ச்சியை அள்ளிக்கிட்டுப் போங்க
   காத்திருக்கோம் வரவேற்க நாங்க
   கட்டாயம் தமிழால்ப் பெருமைப் படுவீங்க.

   Delete
 20. நட்புகளைச் சந்தித்த கதையை அழகிய கவிதையாக்கி விட்டீர்கள். புகைப்படம் முகநூலில் கண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நீங்களும் வந்துடும் நிறைய படங்களும்

   Delete
 21. சந்திப்பு மனை நெகிழ்ச் செய்கிறது அய்யா.
  நட்பு இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்குத்தான்
  எவ்வளவு வலிமை,,
  நட்பை நேசிப்போம்
  நட்பைச் சுவாசிப்போம்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே.நீங்களும் சென்னை வாங்க மகிழ்ச்சியாப் போங்க

   Delete
 22. ஆ! கவிதை...! அருமையா இருக்குது! உணர்வுகள் நிரம்பி இருக்குது! அசத்திட்டீங்கோ கவியாழி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க கணேஷ்.பெரியவங்க சொன்னா பெருமாளு சொன்ன மாதிரின்னு சொல்லுவாங்க.பாலகணேசன் சொன்னா இன்னும் நல்லத்தான் இருக்கு

   Delete
 23. பதிவர் சந்திப்பு மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா......

  ReplyDelete
  Replies
  1. சென்னைக்கு வந்தப் புயல் உங்க ஊருக்கும் வரப்போகுது.பெங்களூர் வரும் எஸ்.ரமணி.மஞ்சுபாஷிநியையும் பாருங்க அங்குள்ள நண்பர்களேல்லோரும் சேருங்க.படத்தையும் செய்தியையும் மறக்காமப் போடுங்க

   Delete
 24. எத்தனை வலிமை நட்புக்கு
  யாரிடம் முடியும் வீராப்பு/// அருமை சார்..உண்மைதான் நண்பர்கள் கூடி பேசும்போது கிடைக்கும் சந்தோசம் வேறு எப்பொழுதும் வருவதில்லை

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வாருங்கள் எங்களுடன் நிம்மதியாய் மகிழுங்கள்

   Delete
 25. அனுபவச் சிதறலால்
  அழகாய் வெளிப்படுகிறது
  நட்பு!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்
   நணபரே
   நீங்க
   வந்தாலும்
   மகிழ்சிதான்

   Delete
 26. பதிவர் சந்திப்பு கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைெவளிக்குப்பின் உங்கள்வருகைக்கு நன்றி

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்