இயற்கையின் மகிழ்ச்சியால் இன்னலே அதிகமோ ?
இயற்க்கையின் மகிழ்ச்சியால்
இன்னலேஅதிகமோ
இறந்திடும் உயிர்களே
இதற்குத் தான் சாட்சியா
இடியும் மின்னலும்
யாருக்காய் வந்தது
இழப்பினால் மகிழ்ச்சியும்
யாரிடம் சென்றது
பிழைப்பே சோகமாய்
பிரிவுடன் சென்றது
பெருவெள்ளம் பக்தரை
பினையாக்கிச் சென்றது
உயிர்களைக் காக்கும்
உயிரில்லாக் கடவுளும்
ஓடி ஒளிந்ததா
ஒய்வாக நின்றதா?
கிடைத்த வாய்ப்பினால்
குறைத்துக் கொண்டதா?
உத்தர் கண்ட மாநிலத்தில் வெள்ளம் பற்றிய பதிவுகல் எதுவும் கண்ணில் படவில்லை. முதன்முதலில் பட்டது உங்கள் கவிதைதான். வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு. சிக்கிக் கொண்டவர்கள் அனைவரும் நல்லபடியாக மீட்கப் படவேண்டும்
ReplyDeleteஆம்நண்பரே இயன்ற உதவியை முன்வந்து செய்வோம்.
Deleteசந்தர்ப்பம் கிடைத்தால் நாமும் அங்கே செல்லலாம்
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்ப தாங்கள் எழுதும் கவிதைகள் பிரமாதம்... தங்களது சமூக ஆதங்கத்தை உணர்கிறேன்... தொடருங்கள் ஐயா..
ReplyDeleteஎன்னால் முடிந்தது எழுத்து மட்டுமே .அதையே மகிழ்ச்சியாய் செய்கிறேன்.வருகைக்கு நன்றி
Deleteத.ம.3
ReplyDeleteநன்றிங்க தம்பி
Deleteஇயற்கையைக் கொன்றோம்! இயற்கை நம்மைக் கொல்கிறது!
ReplyDeleteஉண்மைதான் சுரேஷ்.இனியாவது நாமெல்லாம் மாறவேண்டும் இயற்கையைப் போற்ற வேண்டும்
Deleteவரும் தகவல்கள் மேலும் மேலும் வருத்தப்பட வைக்கிறது...
ReplyDeleteஆமாம் நண்பரே ஆயிரத்தைத் தாண்டுமாம்
Deleteஇய்ற்கைச்சீற்றம் வலுவானது ..!
ReplyDeleteஎளிதில் நம்மை வலுவிழக்க வைத்துவிடும்
Deleteஇயற்கையின் மகிழ்ச்சிக்கு [!] மனிதனின் பங்கு மிகவும் அதிகம் அண்ணே....!
ReplyDeleteஅதைத்தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்
Deleteஇயற்கையின் சீற்றமதை நாமும் இங்கு தொலைக்காட்சி செய்தியில் பார்த்தோம். நெஞ்சை உலுக்குகிறதே..
ReplyDeleteசெய்தியை பாடலாய் பாடி அறியத்தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ!
த ம. 6
உங்க ஊரு மழையும் குளிரும் இருந்தாலும் சொர்க்கம்.ஆனா சொர்க்கமென நினைத்து சென்ற இடத்தில் எப்படியொரு சோகம்.வருத்தமாய் உள்ளது
Deleteஇயற்கையை சீண்டினால் அதற்கு பதிலடி இப்படி கோரமானதாய் தான் இருக்குமென காட்டிவிட்டது.
ReplyDeleteஇயற்கையை பகைத்தால் இப்படித்தான் நடக்கும்.என்பது உண்மைதான்
Deleteஇயற்க்கைக்கு எதிராக நாம் செயல்களை செய்யும் பொழுது அதுனடைய சீற்றத்தை எதாகினும் ஒரு பொழுதில் காட்டியே தீரும்...
ReplyDeleteஉண்மைதான் அங்கு நிறைய மரங்கள் இருந்திருந்தால் மண்ணரிப்பு இருந்திருக்காது.
DeleteUnmai....
ReplyDeleteNature gives us all happiness but when it scream more
we'll be no more
இயற்கையை நாம் அழிப்பதால் இன்று நம்மையே திருப்பி அழிக்கிறது
Delete