தவறான அழைப்பு (Missed call ) இதைப்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தவறிய,தவறான,அவசியமில்லாதது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் எரிச்சலையும் கோபத்தையுமே தந்தாலும் சில நேரங்களில் போதிய கையிருப்பு இல்லாமை அல்லது அலைவரிசை பிரச்னை போன்றைவையும் காரணமாய் இருக்கிறது.ஆனாலும் பெரும்பாலானவர்கள் தவறிய அழைப்பு வருவதை விரும்புவதில்லை.சிலர் இதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் உண்மையே. இன்றைய நவீன காலத்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப கைபேசி உபயோகித்து வருகின்றனர்.இதில் வயதோ,வசதியோ வேறுபட்டாலும் விருப்பத்திற்காக,வசதிக்காக,அடுத்தவருக்காக பல வண்ணங்களிலும் அதிக விலையிலும் வைத்துள்ளார்கள்.இங்கு கிராமமோ,நகரமோ பாகுபாடு இருக்கவில்லை.அவரவர் மனதைப் பொறுத்தே உள்ளது. ஆனாலும் இந்த தவறிய அழைப்பை பற்றி எல்லோருமே தெரிந்துள்ளனர். ஒவ்வொரு அழைப்பின்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கைபேசி அழைப்பு சில நேரங்களில் சிலர் தவறான அழைப்பு செய்வது மிகுந்த வேதனையும் கோபத்தையுமே ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உறவினரோ அல்லது நண்பர்களோ தவறிய அழைப்பு விடும்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆ