திருவாளர்.செல்லப்பா அவர்களின் சிறுகதைப் புத்தகம்
கிராமத்துப் பின்னணி உள்ள இந்த அட்டைப் படத்தைப் பார்க்கும்போது இவர் கிராமத்தை விரும்பி ரசிக்கும் எழுத்தாளர் என்பதும் படத்திலுள்ள சிறுமி செல்வி.சம்ப்ரித்தா(அவருடைய பேர்த்தி) இவரது உறவுக்கு அய்யனாரைப் போன்று பாதுகாவலராய் இருப்பார் என்பதும் தெளிவாகப் புலனாகிறதல்லவா?
இந்தப் புத்தகத்தில் உள்ள "சாந்தி நிலவ வேண்டும் " என்ற சிறுகதைக்காக பிரபா ராஜன் அறக்கட்டளையின் சார்பாகக் கலைமகள் பத்திரிகை நடத்திய சிறுகதைப் பரிசுபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்றபோது எடுத்த படம். மணிமேகலை பிரசுரமும் இணைந்து நடத்திய விழா.
ஹரணி
(முனைவர் க அன்பழகன்)
தமிழ்ப் பேராசிரியர்
அண்ணாமலைப் பல்கலைகழகம்,
சிதம்பரம்.
சொல்லியது............
"ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார் தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்."
இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளார்களின்
அதிக புத்தகங்களை வெளியிடும் அகநாழிகைப் பதிப்பகத்தார்
திரு இராய செல்லப்பா, ராணிப்பேட்டையில் பிறந்து வளர்ந்து படித்து சென்னையில் குடியேறினாலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியான கார்ப்பரேஷன் வங்கியில் பணியில் இருந்த காரணத்தால் இந்தியாவின் பல நகரங்களில் வசித்த காரணத்தின் வெளிப்பாடாய் ஒன்பது கதைகளும், மேல்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் அமெரிக்க நிகழ்வுகலைக் கொண்ட மூன்று கதைகளும் ஆக மொத்தம் பன்னிரண்டு கதைகளைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
கவிதை எழுதுவதிலும் வாசிப்பதிலும்தமிழ் இலக்கியத்திலும் வல்லவரான கவிஞர்.இராய.செல்லப்பா அவர்கள் ஏற்கனவே "எட்டயபுரத்து மீசைக்காரன்", தலைநகரில் தமிழ்க்குயில்கள்" என்ற இரண்டு் நூல்களை தில்லியில் இருந்தபோது வெளியிட்டுள்ளார்.
கவிஞர் கதையாசிரியராக மாறினாலும் தனக்கு ராசியான எட்டு எண்ணுடன் எட்டு நபர்கள் மனைவி,மகள்கள்,மகன் மருமகள், பேரன்கள் பேத்தியையும் மறக்காமல் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் தனது மாமியார் ராஜலக்ஷ்மி சீதாராமன் அவர்களுக்கு அர்ப்பணம் செய்து தனது உறவுகளையும் சொந்தங்களையும் அரவணைத்து செல்லவேண்டிய அவசியத்தை எல்லோருக்கும் முன்மாதிரியாக இப்புத்தகத்தை வெளியுட்டுள்ளார்.
எனவே நண்பர்களே அனைவரும் புத்தகத்திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தில் சர்வதேச தரத்துடன் அச்சிட்டுள்ள இப்புத்தகத்தை Rs.120 மட்டுமே கொடுத்து வாங்கி படிப்பதுடன் உங்கள் உறவினருக்கும் நண்பர்களுக்கும் பரிசாக வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்
(கவியாழி)
நல்லது ஐயா... நன்றி...
ReplyDeleteவலைப்பூ மூலமாக அறிமுகமான கவிஞர்.இராய.செல்லப்பா அவர்களுடைய நூலைப் பற்றிய தங்களின் அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteநல்ல பகிர்வு கவிஞர்.இராய.செல்லப்பா அவர்களைப் பற்றியும் அவரது நூல்களைப் பற்றியும்!! மிக்க நன்றி!!
ReplyDeleteதன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்."
ReplyDeleteஅருமையான விமர்சனம்..!
மதுரையில் கிடைக்குமிடம் தெரிந்தால்
ReplyDeleteவாங்கிப் படிக்க ஆசை
இல்லை சென்னை வரும் போது வாங்கவேண்டிய
நூலகள் பட்டியலில் நிச்சயம்
முதலாவதாக இது இருக்கும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteஅருமையான நூல் ஐயா படித்துவிட்டேன்
ReplyDeleteதனியே இந்நூலைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் ஐயா.
இனிய பொஙகல் நல் வாழ்த்துக்கள் ஐயா
த.ம.6
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
கவிதை தொகுப்பு நூல் சம்மந்தமான பதிவு செல்லப்பா ஐயாவின் வலைப்பூ பக்கம் பதிவாக வந்துள்ளது மீண்டும் அதை பதிவாக தங்களின் வலைப்பூவில் பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா.இன்னும் பல வாசக உள்ளங்களிடம் புத்தகம் பற்றிய தகவல் சென்றடைய வாய்ப்பு...
கவிஞர் செல்லப்பா ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..
--------------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் இரா.செல்லப்பா ஐயாவுடன் நான் பல தடவை பேசியுள்ளேன் அவரின் ஆக்கத்தில் உருவாகிய கவிதை புத்தகம் ஒன்று எனக்கு அன்பளிப்பு செய்வதாக என்னிடம் சொல்லியுள்ளார்.... மிகவிரைவில் கிடைக்கும் படித்து மகிழ்ந்திடலாம்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ஐயா இரா.செல்லப்பா அவர்களின் புத்தகம் குறித்த பார்வை நன்று.
ReplyDeleteஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்டுக்கள்!!
ReplyDeleteதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
ஊருக்கு வரும் போது வாங்கி படிக்குறேன் அண்ணே...
ReplyDeleteவாங்கிப்படிப்பேன் பகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteதமிழறிஞரும் தமிழ் வலைப்பதிவருமான இராய. செல்லப்பாவின் புத்தகம் கண்டு அக மகிழ்ந்தேன். நிச்சயம் வாங்கி வாசித்தும், பத்திரப்படுத்தியும் வைக்கப் போகின்றேன். :) அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநமது கவிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி! நானும் நூலினை (காசுக்கு) வாங்கி படித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteகவிஞர் இராய செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். சென்னை வரும்போது தான் வாங்க வேண்டும்.....
ReplyDelete