மலரும் தேனைத் தருவதில்லை
மார்கழி மாதத்தில் வண்டுகள்
மலர்களைத் தேடி வருவதில்லை
மலரினில் சேர்ந்திடும் பனியினால்
மலரும் தேனைத் தருவதில்லை
பனியும் அதிகம் பெய்வதாலே
பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை
பெண்களும் பூக்களை நினைத்தே
பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை
பனியில் தேனிகள் வருவதில்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும் இப்போ விருப்பமில்லை
ஆக்கல் குறைந்த காரணத்தால்
அழித்தலை ஆண்டவன் செய்வதால்
அதனால் மக்களில் பலபேர்
ஆலயம் செல்வதே உண்மை
வருடக் கடைசி உனக்கும்
வரவு செலவு உள்ளதோ?
ஏனிந்த வேதனை இறைவா!
இதுவும் உனது செயலா?
மலர்களைத் தேடி வருவதில்லை
மலரினில் சேர்ந்திடும் பனியினால்
மலரும் தேனைத் தருவதில்லை
பனியும் அதிகம் பெய்வதாலே
பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை
பெண்களும் பூக்களை நினைத்தே
பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும் இப்போ விருப்பமில்லை
ஆக்கல் குறைந்த காரணத்தால்
அழித்தலை ஆண்டவன் செய்வதால்
அதனால் மக்களில் பலபேர்
ஆலயம் செல்வதே உண்மை
வருடக் கடைசி உனக்கும்
வரவு செலவு உள்ளதோ?
ஏனிந்த வேதனை இறைவா!
இதுவும் உனது செயலா?
வித்தியாசமான சிந்தனை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நல்லாருக்குங்க. பனிக்காலம் உடலுக்கும் மனசுக்கும் இதமானதுதான் என்றாலும் அது பெரும்பாலும் தாவரங்களுக்கு எதிரியாகவே உள்ளது.
ReplyDelete''..பனியில் தேனிகள் வருவதில்லை
ReplyDeleteபகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும் இப்போ விருப்பமில்லை..''
eniya vaalththu.
Vetha.Elangathilakam
வித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteஎல்லாம் அவன் செயல்...!@
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
tamilmanam 4
ReplyDeleteமார்கழிப் பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வருவது தேவை இல்லையா ?
ReplyDelete+1
ஆக்கல் குறைந்த காரணத்தால்
ReplyDeleteஅழித்தலை ஆண்டவன் செய்வதால்
அதனால் மக்களில் பலபேர்
ஆலயம் செல்வதே உண்மை..இந்த அடிகள் நூற்றுக்கு நூறு உண்மை. மனதில் நின்ற கவிதை.
வித்தியாசமான சிந்தனை..
ReplyDeleteத.ம. +1
வித்தியாசமான, புதிய கோணத்தில் தங்களின் சிந்தனை அருமை ஐயா
ReplyDeleteநன்றி
த.ம.8
ReplyDeleteமார்கழிப் பனி, இளைஞர்களுக்கு இன்பமாகவும், தங்களைப் போன்றவர்களுக்குத் துன்பமாகவும் இருப்பதை உணரமுடிகிறது.......!
ReplyDeleteபனியின் போர்வைக்குள் வேறு சிந்தனை. அருமை.
ReplyDeleteஅருமை +1
ReplyDelete[[மார்கழி மாதத்தில் வண்டுகள்
மலர்களைத் தேடி வருவதில்லை]]
இது சரியான பொருள் கொண்டதா?
ஆம்.பனியினால் மொட்டுமே கருகுவதால் பூக்களும் பூக்கா நிலையில் இருக்கையில் தேனிக்கள் எப்படி வரும் ? மார்கழிப் பனியின் மகத்துவம்.அதுபோல் மனிதனுக்கும் (பாலின தூண்டுதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடும்) சில தவிர்க்க இயலா சூழ்நிலைகள் உண்டல்லவா?
Deleteவித்தியாசமான சிந்தனை ஐயா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு....
மலரும் தேனைத் தருவதில்லை
ReplyDeleteஎன்றதும்
பால் தரும் மலரும்
கள் தரும் மலரும்
நினைவுக்கு வர
தொடர்ந்து படித்தேன்
"வருடக் கடைசி உனக்கும்
வரவு செலவு உள்ளதோ?
ஏனிந்த வேதனை இறைவா!
இதுவும் உனது செயலா?" என
விழித்திருப்பது தெரிகிறதே!
சிறந்த கருத்துப் பகிர்வு
//மார்கழி மாதத்தில் வண்டுகள்
ReplyDeleteமலர்களைத் தேடி வருவதில்லை
பனியில் தேனிகள் வருவதில்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும் இப்போ விருப்பமில்லை//
இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது கவியாழி கவிஞரே!!!
அருமை!
த.ம.+