தெய்வங்கள்

தெய்வங்கள்

நல்லவராய் வாழ்ந்திடுவோம்....

எண்ணத்ததைத் தூய்மையாக
எப்பொழுதும் வைத்திருந்தால்
எல்லோரும் மகிழ்ச்சியாக
இன்பமாக வாழ்ந்திடலாம்

சொல்லுவதைச் செயலாக்கி
சொன்னபடி வாழ்ந்திருந்தால்
செல்வமது நிலைத்திடுமாம்
சொந்தமெனத் தாங்கிடுமாம்

உள்ளமதில் கள்ளமின்றி
உண்மையாகப் பேசிவந்தால்
தொல்லையில்லா வாழ்க்கையாக
தொடர்ந்திடலாம் எப்பொழுதும்

அன்புடனே அறநெறியும்
அடுத்தவருக்கு உதவியுமே
இன்பமெனச் செய்திட்டு
இருப்பதையுமே கொடுத்திடலாம்

நண்பனையும் அன்புடனே
நன்னடத்தைச் சொல்லிவந்தால்
நன்றியுடன் இருந்திடுவான்
நல்லபடி வாழ்ந்திடுவான்

உள்ளவரை எச்செயலும்
உயர்வதற்காய் செய்தாலும்
நல்லவையே செய்திடுவோம்
நல்லவராய் வாழ்ந்திடுவோம்

(கவியாழி)



Comments

  1. வணக்கம்
    ஐயா.

    தற்காலத்து மனிதனுக்கு உரிய வகையில் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழும் கலையை கவிதையில் சொன்ன விதம் நன்று !
    +1

    ReplyDelete
  3. [[உள்ளமதில் கள்ளமின்றி
    உண்மையாகப் பேசிவந்தால்]]

    நான் இன்றும் இப்படித்தான்,.
    தமிழ்மணம் +1

    ReplyDelete
  4. //எண்ணத்ததைத் தூய்மையாக
    எப்பொழுதும் வைத்திருந்தால்
    எல்லோரும் மகிழ்ச்சியாக
    இன்பமாக வாழ்ந்திடலாம்//

    சிறப்பான வரிகள்..

    ReplyDelete
  5. Visit : http://www.kummacchionline.com/2014/01/cocktail134.html

    ReplyDelete
  6. நல்லவையே செய்திடுவோம்
    நல்லவராய் வாழ்ந்திடுவோம்//

    சிரமம்தான் என்றாலும் முயல்வோம். அருமையான பாடங்கள் சொல்லும் கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லதையே செய்திடுவோம்! நல்லவராய் வாழ்ந்திடுவோம்! அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. "உள்ளவரை எச்செயலும்
    உயர்வதற்காய் செய்தாலும்
    நல்லவையே செய்திடுவோம்
    நல்லவராய் வாழ்ந்திடுவோம்" என
    சிறந்த கோட்பாடு (தத்துவம்) ஒன்றை
    நன்றாகச் சொல்லி வைத்தீர்களே!
    பாராட்டுகள்!

    ReplyDelete
  9. சிறப்பான கவிதை.....

    த.ம. +1

    ReplyDelete
  10. சிறந்த நேர்மறை சிந்தனையைத் தரும் கவிதை. நன்றி.

    ReplyDelete
  11. நல்லதையே நினைத்திடுவோம்! கவிஞரின் நல்லெண்ணம் வாழ்க!

    ReplyDelete
  12. சிறந்த நேர்மறை சிந்தனையைத் தரும் கவிதை.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இதை அப்படியே வாழ்வில் கடைபிடித்தால்
    வாழ்வு சொர்க்கமாகிவிடும்.

    அத்தனையும் உண்மை நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  14. எண்ணத்ததைத் தூய்மையாக
    எப்பொழுதும் வைத்திருந்தால்
    எல்லோரும் மகிழ்ச்சியாக
    இன்பமாக வாழ்ந்திடலாம்//

    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. எண்ணத்தை தூய்மையாக....ஆரம்பமே அசத்தல்!! நல்ல அருமையான படப்பு!!

    வாழ்த்துக்கள்!

    த.ம. +

    ReplyDelete
  16. கடைப்பிடிக்கவேண்டிய கொள்கைகளுடன் ஆன அழகிய கவிதை///நல்லதொருபடைப்பு கவிஞரே

    ReplyDelete
  17. "நல்லவையே செய்திடுவோம்
    நல்லவராய் வாழ்ந்திடுவோம்" முயற்சிப்போம்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more