தவறிய அழைப்பு மிஸ்சுடு கால்.(Missed call)
தவறான அழைப்பு (Missed call ) இதைப்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தவறிய,தவறான,அவசியமில்லாதது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் எரிச்சலையும் கோபத்தையுமே தந்தாலும் சில நேரங்களில் போதிய கையிருப்பு இல்லாமை அல்லது அலைவரிசை பிரச்னை போன்றைவையும் காரணமாய் இருக்கிறது.ஆனாலும் பெரும்பாலானவர்கள் தவறிய அழைப்பு வருவதை விரும்புவதில்லை.சிலர் இதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் உண்மையே.
இன்றைய நவீன காலத்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப கைபேசி உபயோகித்து வருகின்றனர்.இதில் வயதோ,வசதியோ வேறுபட்டாலும் விருப்பத்திற்காக,வசதிக்காக,அடுத்தவருக்காக பல வண்ணங்களிலும் அதிக விலையிலும் வைத்துள்ளார்கள்.இங்கு கிராமமோ,நகரமோ பாகுபாடு இருக்கவில்லை.அவரவர் மனதைப் பொறுத்தே உள்ளது. ஆனாலும் இந்த தவறிய அழைப்பை பற்றி எல்லோருமே தெரிந்துள்ளனர்.
ஒவ்வொரு அழைப்பின்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கைபேசி அழைப்பு சில நேரங்களில் சிலர் தவறான அழைப்பு செய்வது மிகுந்த வேதனையும் கோபத்தையுமே ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உறவினரோ அல்லது நண்பர்களோ தவறிய அழைப்பு விடும்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆனால் வியாபார சம்பந்தமாக சிலர் இப்படி செய்வது கண்டனத்திற்குரியது. இதை TRAI என்ற தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் தவறென்று சொன்னாலும் சிலர் பொருட்படுத்தாமல் அழைப்பு விடுக்கின்றனர். இதைப் பற்றி சட்ட ரீதியான புகார் தெரிவிக்கலாம்.
பொதுவாக தவறான அழைப்பு விடுவது அநாகரிகமான செயல் என்றால் ஆம் என்றே பலரும் ஒப்புக்கொள்வார்கள்.உறவினரோ நண்பரோ பொழுதுபோக்கிற்காக அவசியமின்றி உரையாட வேண்டியும் அல்லது அடுத்தவரை பேச சொல்வதற்காக நம்மிடம் தவறான அழைப்புவிடுத்து சொல்வதும் தவறென்றே நினைக்கிறேன்.இதில் நேரமும் வீணாவதுடன் பணமும் செலவாகிறது..அதுமட்டுமன்றி இன்னும் பேசும் மின் தொகுப்பு (Battery charge) கால அவகாசம் குறைகிறது இதனால் அவசியமான முக்கியமான பேசவேண்டிய இணைப்புகளும் தவிர்க்க வேண்டியதாய் உள்ளது.
நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ அழைப்பு செய்யும்போது அன்போடு சிறிய தொகையும் சேர்த்து செலவிட்டு மகிழ்ச்சியாய் அன்பை பகிரலாமே.மேலும் அவசியமில்லாத காலநேரத்தை விரயமாக்கும் இதுபோன்ற தவறைச் செய்யாமல் இனி தவறான அழைப்பைத் தவறியும் கொடுக்காமல் இருந்தால் மேலும் உங்களின் மேல் நல்ல அபிப்ராயம் ஏற்படும் என்பதை உறுதியுடன் பகிர்கின்றேன்.
வணக்கம்
ReplyDeleteஐயா.
மிகச்சிறப்பான கருத்தாடல் பதிவு அருமை வாழ்த்துக்கள்.
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//இதைப் பற்றி சட்ட ரீதியான புகார் தெரிவிக்கலாம்//
ReplyDeleteஇது வெறும் கண்துடைப்பென்றே கருதுகிறேன்... வியாபார உலகிற்கு சட்டமும் அடிமைதான்...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
சிலரை திருத்த முடியாது...
ReplyDeleteமிஸ்டு கால் ஆவது பரவாயில்லை. நமக்கு தெரியாத எண் என்றால் விட்டுவிடலாம். ஆனால் wrong call வரும்போதுதான் கடுப்பாக இருக்கும். அதிகாலை வேளையில் இல்லாதவர்கள் பெயரை குறிப்பிட்டு அவரு இருக்காராங்க என்றால் எப்படி இருக்கும்?
ReplyDeleteவேண்டுமென்றே இப்படித் தவறான அழைப்பினை ஏற்படுத்தி
ReplyDeleteவெறுப்பேத்த நினைப்பவர்களைத் தான் தேடிப் பிடித்துத்
திட்ட வேண்டும் போல் இருக்கும் .அனாவசியமான இந்த
அழைப்புகளைத் தொடுப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
உண்மையை மிகவும் உணர்வு பூர்வமாக பதிவு செய்தமைக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
நல்ல பகிர்வு. பல சமயங்கள் கடுப்பேத்துவார்கள்.... :(
ReplyDeleteஉண்மை .
ReplyDeleteநாட்டிலே இந்த மிஸ்டு கால் காரங்க தொல்லை தாங்க முடியலை
நல்ல பகிர்வு!
ReplyDeleteஆனால் தவிர்க்கவோ தப்பிக்கவோ முடியாத பிரச்சனை!
[[சிலர் இதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் உண்மையே.]]
ReplyDeleteஇவர்களை ஏன் நீங்கள் திருப்பி கூப்பிடவேண்டும்?
தமிழ்மணம் +1
இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. கைபேசி வைத்துள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது. நன்றி.
ReplyDeleteஅவசியமான பதிவு
ReplyDeleteமிஸ்டு கால் நபராய்ப் பார்த்து
திருந்தாவிட்டால் மிஸ்டு காலதை
ஒழிக்க முடியாது
சரிதான் அய்யா,அதிலும் பெண்கள் தான் அதிகமாக missed call செய்வதாக கூறப்படுகிறது .ரமணி சார் சரியா சொல்லி இருக்கிறார் பாருங்கள் .அவசியமான அட்வைஸ்
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteசிறந்த கருத்துப் பகிர்வு
மிஸ் கால் கொடுப்பவர்கள் மிஸ் பண்ணாமல் படிக்கச் வேண்டிய பதிவு இது !
ReplyDelete+1
சிறப்பான கருத்துப் பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
Missed Calls – பற்றி நன்றாகவே சொன்னீர்கள். அடிக்கடி இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளையும் எழுதவும். வாழ்த்துக்கள்!
ReplyDeleteசரிதான், இனி கவிஞர், கட்டுரைகளாகவே எழுதித் தள்ளுவார் போலிருக்கிறதே! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல பதிவு!! மிஸ்ட் கால் கொடுப்பவர்கள் படித்து உணர வேண்டிய பதிவு!!
ReplyDelete