Sunday, 5 June 2016

39 வது புத்தகக் கண்காட்சியும் எனது "என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்' புத்தகமும்

                 அன்பார்ந்த நண்பர்களே! அனைவருக்கும் எனது மகிழ்வான . நேற்று வணக்கங்கள். நேற்று சென்னை தீவுத்திடலில்  நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியைப் பார்பதற்காக சென்றிருந்தேன். நல்லப் பரந்துவிரிந்த இடத்தில் தீவுத்திடல் தமிழ்நாடு உணவு விடுதிக்கும்  போர் நினைவு சின்னம் அருகில் எல்லோருக்கும் வசதியான இடத்தில் அமைந்துள்ளது.

           சனிக்கிழமை என்பதாலோ அல்லது  பள்ளிகள் திறந்த காரணத்தினாலோ சற்று கூடம் குறைவாக இருப்பதாகவே உணர்ந்தேன்.நல்ல அகலமான  விசாலமான அரங்கில் நிறையக் கடைகள் இருந்தன.இன்னும் சில கடைகளைத் திறக்காமலும் வைத்திருந்தனர்.

             எனதுப் புத்தகம் வெளியிடும் புத்தகக் கடைக்கு சென்றேன் அங்கு எனது புத்தகம் எல்லோர் கண்ணிலும் படும்படியான இடத்தில் கண்ணைக்கவரும்படி
வைத்திருந்தார்கள்.அதுப்பற்றிய  புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.


நண்பர்களே தீவுத்திடலிலுள்ள புத்தகக்கண்காட்சிக்குச் செல்லுங்கள் என்னோட புத்தகத்தோட மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கி மகிழுங்கள் .நிறைய நண்பர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தொடங்கிவையுங்கள்

Wednesday, 1 June 2016

என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்-12.06.2016 அன்று புத்தக வெளியிடு

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களுக்கு,

நான் நீண்ட நாட்களாக அதிக வேலைப்பளு மற்றும் சில காரணங்களாய் தங்களோடு தொடர்பில் இல்லாமைக்கு வருந்துகிறேன்.

நான் கடந்த காலங்களில் தொடந்து வலையில் எழுதி வந்த கவிதைகளின்  இரண்டாவது தொகுப்பே " என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்",இதைப் படித்தவர்கள் எழுதிய கருத்துக்களை :kaviyazhi.blogspot.com  என்ற எனது வலைப் பக்கத்தில்  காண முடியும்.இந்தப் புத்தகம் தவிர இன்னும் நிறைய  கவிதைகள் மற்றும் கருத்துள்ள கட்டுரைகள் ,துணுக்குகளைக் காணலாம்


இன்று தொடங்கிய  புத்தகத் திருவிழா நடைபெறும் சென்னைத் தீவுத்திடலில் வரும்12.06.2016 அன்று மணிமேகலை பிரசுரத்தாரால் அறிவு சார்ந்த தமிழ் இலக்கிய ஆன்றோர்களும் தமிழ் சான்றோர்களும் வெளிநாட்டில் வசிக்கும்  தமிழ்அறிஞர்களும் மற்றும் எழுத்தாளர்களும் என்னைப் போன்றோர்களும்
கலந்துகொள்ளும் சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாடே வியக்கும் நல்லதொரு விழாவிற்கு தமிழ் வலைப் பதிவர்கள்,நலம் விரும்பும் நல்ல நண்பர்கள் அனைவரையும் வருக வருக என்றும் எனது புத்தகத்தை வாங்கி நல்லக் கருத்துக்களைப் படித்து தொடர்ந்து ஆதரவளிக்குமாறு சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன்

----கவியாழி-----

Sunday, 10 January 2016

மற்றவர் மனதிலும் வாழலாம்......


மாமழை தொடர்ந்த சென்னையிலே
மதங்களும் அழிந்தது உண்மையிலே
பூமாலை படைக்க மறுத்தது-மனிதம்
புரிந்தது தெரிந்தது உணர்ந்தது

கடும்மழை அதிகம் பொழிந்தும்
கரைகள் பலதும் உடைந்தும்
படும்துயர் அறிந்துத் தமிழன்-உடனே
பகிர்ந்தனர் உணவை விரைந்து

மதங்களைக் கடந்து  இணைந்தனர்
மனிதனைக் கடவுளாய்  நினைத்தனர்
பெருந்தவம் கிடைத்ததாய் எண்ணியே-விரைந்து
பெருமையாய் உதவினர் மகிழ்ந்தனர்

மாபெரும் மனிதனாய் மாறலாம்
மக்களின் மனதில் வாழலாம்
மனிதனை மக்களை மதித்தாலே-என்றும்
மற்றவர் மனதிலும் வாழலாம்---கவியாழி---

Monday, 28 September 2015

சீக்கிரமா வாங்க..........

        வலைப்பதிவர்களின் எழுச்சித் திருவிழாநீண்ட இடைவெளிக்குப்பிறகு என்னை எழுதத்தூண்டிய எழுச்சிமிகு திருவிழா இந்த வருட வலைபதிவர்கள் சந்திப்புத் திருவிழா -2015.  

ஆம் மிகவும் மகிழ்ச்சியான இந்த வருட சந்திப்பு கடந்த நாட்களை விடச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமென நம்புகிறேன்.
 காரணம் விழா ஏற்பாட்டாளர்கள் குழுவாக ஒருங்கிணைந்து திரு.முத்துநிலவன் அய்யா அவர்களின் வழிகாட்டல் விழாவை சிறப்பான பாதையில் செல்வது புரிகிறது .

மேலும் நாளொரு பதிவுகள் வெளிவந்த வண்ணம் இருப்பது ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டு முயற்சியிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே எண்ணுகிறேன். அதோடு மட்டுமல்லாமல் போட்டிகள், அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை . என்னால் பங்கேற்க முடியாவிட்டாலும் வலைப்பதிவர்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது .
 
 வலைச்சித்தரும், கரந்தையாரும்  கொடுக்கும் ஒத்துழைப்பு  மற்றும் ஆதரவும் என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்த வேதனை தருகிறது .இருந்தாலும் இந்த வருடம் 300 பதிவர்கள் பங்கேற்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியுடன்  ஆர்வத்தைத் தூண்டுகிறது. 

 இன்னும்  அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்த்து நான் எனது பயணத்தை ஒருநாள் முன்னதாகவே தொடங்கி  சனிக்கிழமை காலையில் புதுக்கோட்டை செல்கிறேன். எனக்கும் வாய்ப்புக்கிடைத்தால் நானும்  உங்களையெல்லாம் வரவேற்க காத்திருக்கிறேன்.


கவியாழி

Thursday, 23 April 2015

என்னடா வாழ்க்கையிது.......விலைவாசி குறையலை
வருமானம் வழியில்லை
பிள்ளைக்குட்டி பொம்பளைக்கும்
பசியைப் போக்க முடியில

விவசாயம் சரியில்லை
வேறவேலை தெரியலை
பொழைப்புக்கான வழியில்லை
போறதெங்கே  புரியலை

பண்ணாட்டுக் கம்பனிகள்
பயன்படுத்தும் மெசினுனால
பகலிரவு உழைப்புக்கு
பணிக்கு ஆளை எடுக்கலை

அம்மாவும் கேட்கலை 
அப்பாவும் கொடுக்கலை
அடுத்தமாச பீசுநானும் கட்டலை
அதனாலே பள்ளிக்குமே போகலை

பணம்காசு உள்ளவன் 
பதுக்கிப் பதுக்கி வைக்கிறான்
பணியாளர் மட்டுமே -வரியை
பயத்தோடக் கட்டுறான்

லஞ்சக் காசுலே வாழுறான்
லட்சங்களில் கேட்கிறான்
வசதியாக வாழ்வதற்கு 
வழிப்பறியும் செய்யுறான்

என்னடா வாழ்க்கையிது
எத்தனைபேர் நாட்டிலே
சொன்னதாய் பலநிகழ்ச்சி
சோகமாய் உள்ளதடா

(கவியாழி)