மற்றவர் மனதிலும் வாழலாம்......
மாமழை தொடர்ந்த சென்னையிலே
மதங்களும் அழிந்தது உண்மையிலே
பூமாலை படைக்க மறுத்தது-மனிதம்
புரிந்தது தெரிந்தது உணர்ந்தது
கடும்மழை அதிகம் பொழிந்தும்
கரைகள் பலதும் உடைந்தும்
படும்துயர் அறிந்துத் தமிழன்-உடனே
பகிர்ந்தனர் உணவை விரைந்து
மதங்களைக் கடந்து இணைந்தனர்
மனிதனைக் கடவுளாய் நினைத்தனர்
பெருந்தவம் கிடைத்ததாய் எண்ணியே-விரைந்து
பெருமையாய் உதவினர் மகிழ்ந்தனர்
மாபெரும் மனிதனாய் மாறலாம்
மக்களின் மனதில் வாழலாம்
மனிதனை மக்களை மதித்தாலே-என்றும்
மற்றவர் மனதிலும் வாழலாம்
---கவியாழி---
"மதங்களைக் கடந்து இணைந்தனர் என்றும் ஒற்றுமை தொடரட்டும் என வாழ்த்துவோம்
ReplyDeleteஇவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி
Delete"மதங்களைக் கடந்து இணைந்தனர் என்றும் ஒற்றுமை தொடரட்டும் என வாழ்த்துவோம்
ReplyDeleteமதங்களைக் கடந்து இணைந்த தொண்டர்கள்
ReplyDeleteமாமழை தொடர்ந்த சென்னையிலே உதவியே
செயற்கரிய செயலைச் செய்து காட்டியே
மற்றவர் உள்ளத்திலும் (மனதிலும்) வாழலாம் என்றே
உலகிற்கு உணர்த்தி நின்றனரே!
இவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி
Deleteசரியாகச் சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteஇவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி
Deleteமழை நிறைய பாடங்களை கற்றுத் தந்து சென்றிருக்கிறது! அருமை!
ReplyDeleteஇவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி
Deleteஅருமை.
ReplyDeleteமனிதனை மனிதன் மதிப்பதோடு இயற்கையையும் மதிக்க வேண்டும்!
தம +1
இவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி
Delete/மனிதனை மக்களை மதித்தாலே-என்றும்
ReplyDeleteமற்றவர் மனதிலும் வாழலாம்// உண்மைதான் ஐயா.
என்றும் தொடரவேண்டும் இந்த ஒற்றுமை!
இனி தொடர்ந்து எழுதுவேன்
Deleteஅருமையான கவி கவிஞரே இது என்றும் தொடர வேண்டும் மனிதம் தழைக்க வேண்டும்
ReplyDeleteதமிழ் மணம் 5
மனிதம் தழைக்க இனி தொடர்ந்து எழுதுவேன்
Deleteஇந்த வருடத் துவக்கத்தில் நல்ல எண்ணத்தை விதைத்து ஒரு கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ,இனி தொடர்ந்து எழுதுவேன்
Delete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
நல்ல கவிதை...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா...
அருமையான கவிதை நண்பரே! தாமதத்திற்கு மன்னிக்கவும்
ReplyDelete