தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிமேல் கணக்கைத் தொடங்கு...

மார்கழி மாதத்தில் வண்டுகள்
மலர்களைத் தேடி வருவதில்லை
மலரினில் சேர்ந்திடும் பனியினால்
மலரும் தேனைத் தருவதில்லை

பனியும் அதிகம் பெய்வதாலே
பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை
பெண்களும் பூக்களை நினைத்தே
பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை

பனியில் தேனிகள் வருவதில்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும்  இப்போ விருப்பமில்லை

இனிமேல் பனியும் குறைந்து
இளமை செடிபோல் வளர்ந்து
உறவும் மகிழ்வாய் இருந்து-மக்கள்
உடனே கணக்கைத் தொடங்கு

(கவியாழி









Comments

  1. பனி கழித்துத்தான் நமக்குப் பணி :)
    நன்று
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தை பிறந்துவிட்டதல்லவா
    கண்டிப்பாக பனி குறையும் வழியும் பிறக்கும்

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா...

    நிச்சயம் புதிய ஆண்டில் புதிய கணக்கு தொடங்வோம்... சொல்லிய விதம் நன்று பகிர்வுக்கு நன்றி த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வண்டுகள் வரட்டும் விரைவில்...

    ReplyDelete
  5. நீங்களும் பகிர்வுகளை தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  6. நல்ல கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஒஹோ மார்கழியில் இவ்வளவு
    விஷயம் இருக்கா ?
    தலைப்பும் அதற்கான கவிதையும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete

  9. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
  10. பனியை விரட்டும் தங்களின் கவிதைப் பணிக்கு நன்றி.

    ReplyDelete
  11. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்