தெய்வங்கள்

தெய்வங்கள்

முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!

சாதியெனும் பட்டத்தைத் தலைமீது தந்ததா
சக்தி வாய்ந்த எதிரிகளால் வளர்ந்து வந்ததா
மோதிவரும் கூட்டமெல்லாம் உழைக்க மறுப்பதால்
முன்னோர்கள் சொன்னதென வளர்த்து வருவதா

பாதிவயிறு உண்ணாமலே உழைக்கும் வர்க்கமே
பகலிரவாய் மோதிக்கொண்டு சாதி வளர்ப்பதா
மீதியுயிர் போகும்வரை வெட்டிச் சாய்ப்பதால்
மீண்டுவரும் பயனையாரோ மகிழ்ச்சிக் கொள்வதா?

பாடுபட்டுச் சேர்ந்து வாழும் கூட்டம் மட்டுமே
பகலிரவாய் அன்பு கொண்டு கூடிவாழுமே
நாடுவிட்டு நாடுபோவோர் அந்த நாட்டிலே
நாகரீக போர்வையாலே சொல்ல மறுப்பதேன்?

வேளாண்மை  நம்தொழிலாய்ப் போற்றி வாழ்வதால்
வேலைவெட்டி யில்லா நிலைமை மாறியே
ஏழைகளும் ஒற்றுமையாய் சேர்ந்து வாழவே
ஏற்றத்தாழ்வு மாறிவிடும் உண்மை உழைப்பிலே!

அன்புடனே ஒற்றுமையாய் இணைந்து செல்வதால்
அன்னியனும் பயப்படுவான் நம்மைப் பிரிக்கவே
பண்புடனே பழகுவதால் பயனும் உள்ளதே
படித்தோரே புரிந்தோரே உண்மை நிலையிதே!

படிப்பறிவு நிறைந்திருக்கும் இந்தநாளிலும்
பகைமையோடு வாழ்வதனால் பயனும் இல்லையே
முடிவேடுப்பீர் வாழும்வரை உண்மை நிலையினை
முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!

(கவியாழி)


Comments

  1. அருமை... உண்மை உழைப்பு எதையும் சாதிக்க வல்லது ஐயா...

    ReplyDelete
  2. அன்புடனே ஒற்றுமையாய் இணைந்து செல்வதால்
    அன்னியனும் பயப்படுவான் நம்மைப் பிரிக்கவே..உண்மை இதுவே ஒற்றுமையின் வெற்றி.

    ReplyDelete
  3. அருமை! ஐயா கவிதை வரிகள்! அன்புதான் இந்த உலகையே கட்டி ஆளும் சக்தி வாய்ந்தது. அதுவும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு!

    ReplyDelete
  4. பண்புடனே பழகுவதால் பயனும் உள்ளதே
    படித்தோரே புரிந்தோரே உண்மை நிலையிதே!
    மிகச்சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. ஏற்றத்தாழ்வு மாறிவிடும் உண்மை உழைப்பிலே
    மிகச் சரியான கருத்து.
    எங்கே சகோதரா தங்களைக் காணோமே
    நலமா?

    ReplyDelete
    Replies
    1. நலமாக உள்ளீர்களா? இனி வருவேன் இணையத்தில் தொடர்வேன்

      Delete
  6. உண்மை தான் முற்போக்குச் சிந்தனையால் மட்டுமே மனிதநேயம் வெல்லும் .
    அருமையான நற் கருத்து பாராட்டுக்கள் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

      Delete
  7. பாதிவயிறு உண்ணாமலே உழைக்கும் வர்க்கமே
    பகலிரவாய் மோதிக்கொண்டு சாதி வளர்ப்பதா, நாம் என்று மாறுவோம். அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  8. அருமை கவிஞரே இதில் வெளிநாட்டு வாழ்வையும் இணைத்தது அருமை.
    தமிழ் மணத்தில் இணைக்க 7

    ReplyDelete
  9. உழைப்பால் உயர்வு, அருமை...!

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா.

    100வீதம் உண்மையான வரிகள் ஐயா... உழைப்பே உயர்வு..... பகிர்வுக்கு நன்றி த.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  11. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  12. அன்புடனனே ஒற்றுமையாய் இணைந்தே செல்வோம்
    அருமை ஐயா
    தம +1

    ReplyDelete
  13. அருமை அருமை
    சிந்தனையில் புதுமை
    பழமைச் சிறப்புடன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  14. அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்