தெய்வங்கள்

தெய்வங்கள்

பார்த்ததும் திண்பதை நிறுத்து!

உறவுகள்  எனக்கு உதவி செய்யாது
உணர்தவர் கண்டும் உண்மை சொல்லாது
பிரிவினால் மனதில் பித்தம் பிடித்தேன்
பிரிந்தவர் சொல்லும் காரணம் கேட்டே!

வயிற்றில் கண்டதை விழுங்கி யதனால்
வந்ததை உண்பதும் வாழ்வைக் கெடுக்க
பயிற்சி தேவையா பலனேதும் உண்டா?
பார்த்ததும் திண்பதை நிறுத்து!

கொஞ்சிப் பேசும் கொழுந்தி யவளைச்
கிஞ்சித்தும் இடம் கிடைக்க வழியின்றி
வஞ்சித்துப் போகும் வாழ்க்கைத் துணையை
வார்த்தை யுண்டோ  வைய?

அந்த நாளில் கண்டதைத் தேடி
அலைந்த நட்பு அடங்காமல் இன்றும்
நொந்தக் கதையை நான் கேட்டே
நொடிந்தே கடிந்தேன் இன்றே

கண்ணும் இமையும் கலந்து பேசி
கண்ணன் வரவைக் கண்ட பின்னே
விண்ணைப் பார்த்து வீதியைக் காட்டி
விடுகதை போட்டது எதற்கோ?


(கவியாழி)

Comments

  1. பயிற்சியை முயற்சியால் வெல்லலாம்...

    ReplyDelete
  2. பாரதிதாசன் வந்தார் பாட்டெழுதச் சொன்னார்-நானும்
    பாரினில் அவரின் மாணவரே

    ReplyDelete
  3. அருமை கவிஞரே
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோதரா உடலுக்கு உபாதைகள் தரும்
    உணவுப் பழக்க வழக்கங்களில் அவதானம் நிட்சயம் தேவை .
    சிறப்பான கருத்து வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  5. பார்த்ததும் தின்பதை நிறுத்தினால்
    கோடி நன்மையே!

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    எல்லோரும் இதை கடைப்பிடித்தால் நோய்யற்ற வாழ்வு வாழமுடியும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. நல்ல கருத்து, தொடர்ந்து பயிலவும், தொன்மரபு கைவரவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சிறப்பான அறிவுறுத்தலுக்கு நன்றிங்க அய்யா

      Delete

  8. வணக்கம்!

    நெஞ்சை வருத்தும் நினைவுகளைத் தந்துள்ளீா்
    விஞ்சும் துயரம் விாிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. Replies
    1. எட்டாம் எண்ணைத் தந்து இன்னும்
      சிட்டாய் பறக்கச் சொன்னிர்கள்

      Delete
  10. நல்லதொரு கவிதை நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  11. வழமையான உணவுப் பழக்கம்
    இளமையில் மட்டும்தான்
    காலப்போக்கில் உடலுக்கேற்ற மாதிரித்தானே
    மாற வேண்டும் அருமை
    வாழ்த்துக்கள்
    தம 9

    ReplyDelete
  12. தங்களின் சூட்சுமம் அருமை, கவிதை வரிகளில்.

    ReplyDelete
    Replies
    1. புரிந்தமைக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  13. வரிகள் வித்தகம் செய்கின்றன.
    த ம 11

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்