தெய்வங்கள்

தெய்வங்கள்

மார்கழி மலரே வா


மார்கழிப் பூவை சூடியதால்
மங்கையே மயக்கம் வருகிறதா 
மன்னவன் என்னிடம் ஏன்
மலருக்கே  தயக்கம் வருகிறது

தேனிக்களும் வண்டுகளும்
தேனிசை ராகமாய் பாடுகிறது
மயிலும மானுமே மகிழ்ந்து 
மகிழ்ச்சியாய் இங்கு  ஓடுகிறது

நங்கையே நல்லமுதே சுவையே
நானருந்த உனக்கு  நானமே
நாழியும் கடப்பதாய் கோபமோ
நல்விருந்து படைக்கிறேன் வா

என் அருகில் நீயும் வா
என் மடியில் சாய்ந்திடவா
நின் இதழ் எனக்குத் தா 
நிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா

Comments

  1. அருமையான புகைப்படம். அழகான கவிதை.
    நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

    ReplyDelete
  2. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    டிசம்பர் 7, 2013 அன்று திரு ராஜன் அவர்கள் வரைந்த இந்த ஓவியத்தினை எனது பக்கத்தில் வெளியிட்டு அதற்கான கவிதைகள் எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன். அதற்கு நீங்கள் எழுதி அனுப்பிய இந்தக் கவிதை எனது பக்கத்திலும் வெளியிட்டு மகிழ்ந்தது நினைவுக்கு வந்தது. நன்றி கவியாழி.

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை! நண்பரே! அருமை!

    ReplyDelete
  4. "தேனிக்களும் வண்டுகளும்
    தேனிசை ராகமாய் பாடுகிறது
    மயிலும மானுமே மகிழ்ந்து
    மகிழ்ச்சியாய் இங்கு ஓடுகிறது" என்ற வரிகள்
    என்னை ஈர்த்த வரிகள் ஆச்சே!

    ReplyDelete
  5. புகைப்படத்திற்க்கு பொருத்தமான கவிதை அருமை
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    ஓவியத்துக்கான கவித்துவம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    ReplyDelete

  7. வணக்கம்!

    மார்கழிப் பூவை மயக்கமுறத் தந்துள்ளீர்
    சீர்எழில் சொற்களைச் சேர்த்து!

    ReplyDelete
  8. நங்கையே நல்லமுதே சுவையே
    நானருந்த உனக்கு நானமே
    நாழியும் கடப்பதாய் கோபமோ
    நல்விருந்து படைக்கிறேன் வா
    சிறப்பான வரிகள் ....வாழ்த்துக்கள்.
    ........

    ReplyDelete
  9. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  11. அருமையான கவி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நங்கையே நல்லமுதே சுவையே
    நானருந்த உனக்கு நானமே - அழகிய வரிகள் ரசித்தேன் இன்பத் தேன் சுவைத்தேன்..
    அன்புடன் - சுஜேன்...

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்