தெய்வங்கள்

தெய்வங்கள்

மற்றவர் மனதிலும் வாழலாம்......


மாமழை தொடர்ந்த சென்னையிலே
மதங்களும் அழிந்தது உண்மையிலே
பூமாலை படைக்க மறுத்தது-மனிதம்
புரிந்தது தெரிந்தது உணர்ந்தது

கடும்மழை அதிகம் பொழிந்தும்
கரைகள் பலதும் உடைந்தும்
படும்துயர் அறிந்துத் தமிழன்-உடனே
பகிர்ந்தனர் உணவை விரைந்து

மதங்களைக் கடந்து  இணைந்தனர்
மனிதனைக் கடவுளாய்  நினைத்தனர்
பெருந்தவம் கிடைத்ததாய் எண்ணியே-விரைந்து
பெருமையாய் உதவினர் மகிழ்ந்தனர்

மாபெரும் மனிதனாய் மாறலாம்
மக்களின் மனதில் வாழலாம்
மனிதனை மக்களை மதித்தாலே-என்றும்
மற்றவர் மனதிலும் வாழலாம்



---கவியாழி---

Comments

  1. "மதங்களைக் கடந்து இணைந்தனர் என்றும் ஒற்றுமை தொடரட்டும் என வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. இவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி

      Delete
  2. "மதங்களைக் கடந்து இணைந்தனர் என்றும் ஒற்றுமை தொடரட்டும் என வாழ்த்துவோம்

    ReplyDelete
  3. மதங்களைக் கடந்து இணைந்த தொண்டர்கள்
    மாமழை தொடர்ந்த சென்னையிலே உதவியே
    செயற்கரிய செயலைச் செய்து காட்டியே
    மற்றவர் உள்ளத்திலும் (மனதிலும்) வாழலாம் என்றே
    உலகிற்கு உணர்த்தி நின்றனரே!

    ReplyDelete
    Replies
    1. இவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி

      Delete
  4. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி

      Delete
  5. மழை நிறைய பாடங்களை கற்றுத் தந்து சென்றிருக்கிறது! அருமை!

    ReplyDelete
    Replies
    1. இவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி

      Delete
  6. அருமை.

    மனிதனை மனிதன் மதிப்பதோடு இயற்கையையும் மதிக்க வேண்டும்!
    தம +1

    ReplyDelete
    Replies
    1. இவ்வருட முதல் பதிவுக்கு வருகைக்கு நன்றி

      Delete
  7. /மனிதனை மக்களை மதித்தாலே-என்றும்
    மற்றவர் மனதிலும் வாழலாம்// உண்மைதான் ஐயா.
    என்றும் தொடரவேண்டும் இந்த ஒற்றுமை!

    ReplyDelete
    Replies
    1. இனி தொடர்ந்து எழுதுவேன்

      Delete
  8. அருமையான கவி கவிஞரே இது என்றும் தொடர வேண்டும் மனிதம் தழைக்க வேண்டும்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. மனிதம் தழைக்க இனி தொடர்ந்து எழுதுவேன்

      Delete
  9. இந்த வருடத் துவக்கத்தில் நல்ல எண்ணத்தை விதைத்து ஒரு கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,இனி தொடர்ந்து எழுதுவேன்

      Delete
  10. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. நல்ல கவிதை...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  12. அருமையான கவிதை நண்பரே! தாமதத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்