Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/மனிதம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

மற்றவர் மனதிலும் வாழலாம்......

மாமழை தொடர்ந்த சென்னையிலே மதங்களும் அழிந்தது உண்மையிலே பூமாலை படைக்க மறுத்தது-மனிதம் புரிந்தது தெரிந்தது உணர்ந்தது கடும்மழை அதிகம் பொழிந்தும் கரைகள் பலதும் உடைந்தும் படும்துயர் அறிந்துத் தமிழன்-உடனே பகிர்ந்தனர் உணவை விரைந்து மதங்களைக் கடந்து  இணைந்தனர் மனிதனைக் கடவுளாய்  நினைத்தனர் பெருந்தவம் கிடைத்ததாய் எண்ணியே-விரைந்து பெருமையாய் உதவினர் மகிழ்ந்தனர் மாபெரும் மனிதனாய் மாறலாம் மக்களின் மனதில் வாழலாம் மனிதனை மக்களை மதித்தாலே-என்றும் மற்றவர் மனதிலும் வாழலாம் ---கவியாழி---

உண்மை வாழ்வு...

முதுமையைத் தேடி செல்பவர் யாரோ முறையாய் அதையும் தடுப்பவர்  உளரோ மூன்றும் மூன்றும் ஒன்பதைத் தவிர்க்க முடிந்தால் கணக்கை மாற்றிடத் துணிவோ காலைமாலை என்பது உண்மை என்றால் கடவுளும் செயலும் நம்பிக்கை என்றால் நேரமும் பொழுதும் மாறுதல் நன்றாம் நிம்மதியைக் கெடுப்பது மட்டும் எதனால் சொல்வோர் சொல்லும் சொற்கள் யாவும் சொல்லா நிலையில் தவிர்த்திட முடிந்தால் எல்லோர் வாழ்வும் நிம்மதி கொண்டே எளிதில் சொல்லால் மடிந்திட மாட்டார் அவரவர்  வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால் அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால் அன்பும் அறமும் ஓங்கி வளர்ந்ததால் அகிலம் முழுதும் அன்பே வாழும் படைப்பில் நிறைய அர்த்தங்கள் உண்டு பகலும் இரவும் செய்யும் நிகழ்வால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலைப்பது போல கிடைத்த அனைத்தும் மகிழ்ச்சியே என்று (கவியாழி)

விதியா? விஞ்ஞானமா?

எல்லா நொடியும் செல்வதுபோல எல்லோர் மனமும் செய்வதுபோல சொல்லா நிலையில் செய்ததுபோல செய்தால் தவறும் இருந்திடாதோ நல்லது என்றே நாளும் செய்து நடப்பவை அனைத்தும் நல்லதே என்றும் நாட்கள் முழுதும் செய்யும் செயலில் நலிந்த செயலும் உள்ளது  முறையா மதிதான் சொல்லும் செயலை செய்து மக்கள் மனதில் இடமும் பிடித்தும் மறந்தும் செய்யும் செயலை எண்ணி மறுபடி எண்ணி வருத்துதல் தவறா பிணியைப் போக்க மருந்தும் உண்டு பிழையாய் அதனால் நிகழும் செயலும் துணையாய் எண்ணி மருத்துவர் ஏனோ தொடர்ந்து இன்னும் கொடுத்தல் நன்றோ எல்லோர் மனமும் ஏக்கம் இன்றி எல்லா தினமும் மகிழ்ச்சி கொண்டால் பொல்லா நிலையும் அன்றி வாழ்ந்தால் பொழுதும் விதியை மறுத்து வாழ்வோம் விதியென்று நான் நம்ப மறுத்தும் விளையாட்டாய் எண்ணி தவிர்த்தால் விஞ்ஞானம் ஏன் என்னைத் திருத்தி வீண் செயலை ஏன் தடுக்கவில்லை (கவியாழி)

விதியின் செயல்......

சிறிதாய் மனதில் காயம் பட்டாலும் சிதறி ஓடுமாம் சில்லறை போல பெரியோர் மனதும் வெம்பித் தவித்து பெரும் வேதனையில் வெந்தே போகுமாம் வருவோர் துயரம் அறியாமல் தெரியாமல் வந்ததும் சொல்லும்  வார்த்தை யாலும் பெரிதாய் ஏதும் மாற்றமும் மின்றி பெருகியே வருந்தியே  கடனாய்ச் சேர்க்கும் உரியோரும் உற்றாரும் சொன்னால் கூட உதவிக்கு உழைப்பையும் தந்தால் கூட பணமும் பொருளும் கொடுத்தாலும் கூட படைத்தவன்  வந்தாலும் தோஷம் தீருமா எல்லோர்க்கும் வந்திடும் இந்த நிலை எப்படி தீர்ந்திடும் எப்போது மாறிடும் தப்பாமல் தவம் செய்தாலும் மாறா தங்கியே கடனை தீர்க்கும் மாயை விதியாய் வந்ததாய் சொல்வார் சிலர்  விரைவில் தீர்ந்திடும் கடவுள் நினைத்தால் மதியால் வெல்ல முடியா தருணம் மனிதன் படைப்பில் யாவர்கும் பொதுவோ (கவியாழி)

சிந்தை யது மங்கும்.....

சிந்தை யது மங்கும் சித்தம் மழுங்கி நடுங்கும் வித்தை செய்யும் மனதால் விடியும் வரை கலங்கும் சொந்தமும் தள்ளி வெறுக்கும் சொல்லைக் கேட்க மறுக்கும் சந்தங் களின் றின்றி சரீரம் அதிரக் கத்தும் வேந்தன் முதல் வீரன் வேட்கை யுள்ள யாரும் விரும்பி அருகில் வந்தால் வெட்டித் தலை சாய்க்கும் எங்கும் இருள் பரவி இருட்டாய் மனதுள் இருக்கும் அருகில் வர பயந்தே ஆட்டமாய் ஆடி ஒடுங்கும் தூக்க மின்றித் தவித்தே துயரம் கொள்ளும் மனிதன் தீர்க்க வரும் நிகழ்வால் துயரம் பறந்தே போகும் (கவியாழி)

மனிதம் மனதில் இருந்தாலே......

மனிதம் இல்லா மனிதரையே மாற்றம் செய்ய வையுங்கள் மனதில் துளியும் அன்புடனே மனிதனாக வாழச் சொல்லுங்கள் செல்வம் அதிகம் சேர்ந்தாலே செல்லும் வழியும் தடுமாறும் சொல்லில் வார்த்தை  தவறாகி சொந்தம் தள்ளி உறவாடும் சொந்தமும் நட்பும் இல்லாமல் சுகமாய் வாழ்க்கை வாழ்ந்தாலும் செல்லும் வழியில் சிலரேனும் சிரித்துப் பேசச் செய்திடுங்கள் குற்றம் குறைகளை நல்லதை குணத்தை மாற்றி வாழ்வதை சுற்றமும் நட்பும் உணர்ந்ததை சொல்லிப் புரிய வையுங்கள் அருகில் இல்லா உறவுகளால் அதிகத் துன்பமும்  வருவதையும் அன்பே இல்லா மனிதர்களின் அடைந்த நிலையை காட்டுங்கள் மனித வாழ்க்கை உணர்வதற்கு மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு மனிதம்  மனதில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம் (கவியாழி)

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே மனதில் தோன்றும் எல்லாமே மறைக்க முடியா தருணங்களாய் மடியும் நிலைக்கு வந்துவிடும் மலையும் கடலும் வானமும் மரமும் செடியும் கொடியுமே மனதில் பாரத்தைக் குறைத்திடும் மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும் தோழமைத் துணிவும் சேர்ந்ததும் தொடரும் துன்பமும் விலகிடும் தொடரும் நட்பின் ஆதரவால் தொல்லைகள் மறைந்து சென்றிடும் இதயம் உணரா மனிதருக்கும் இனியவை செய்திடசொல்லிடும் இன்பம் தந்திடும் செயல்களை இனியும் செய்ய வைத்திடும் கலக்கம் வேண்டாம் நண்பனே கடவுள் போல வந்தேனும் கருணை கொண்டு உதவியாய் கடந்து செல்ல வைப்பார்கள் (கவியாழி)

ரசித்தவர்கள்