கடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ?
கடவுளின் பெயரால் கையேந்தி நிற்பவனும்
காடு கழனிகளில் சாதி வளர்ப்பவனும்
உடமையை இழந்தவனிடம் ஊசி விற்க -இன்னும்
ஊரையே கொளுத்தியும் உத்தமனாய் நடிக்கின்றான்
காடு கழனிகளில் சாதி வளர்ப்பவனும்
உடமையை இழந்தவனிடம் ஊசி விற்க -இன்னும்
ஊரையே கொளுத்தியும் உத்தமனாய் நடிக்கின்றான்
சட்டிப் பானையில் சமைத்து வந்தாலும
சாதியை வளத்துப் பெருமைக் கொண்டாடி
வெட்டிப் பேச்சால் வீதிக்கு வீதி-பிழைப்பாய்
சாதியை வளத்துப் பெருமைக் கொண்டாடி
வெட்டிப் பேச்சால் வீதிக்கு வீதி-பிழைப்பாய்
விற்கிறான் வேதனையை வளர்கிறான்
பொட்டிப் பாம்பாய் வளர்ந்த வனெல்லாம்
பொறுமை கொண்டு படித்தவன் கூட
புட்டி முழுதாய்க் குடித்துவிட்டு-சாதி
பெருமைப் பேசிப்மடிந்தே சாகிறான்
நீதி நேர்மை நிம்மதி தருமென
நியாயம் தர்மம் சந்ததி விளக்கென
போதியரசன் போற்றிய கொள்கையை-இன்று
புரிந்தும் மறந்தும் வாழ்வது முறையா?
--கவியாழி--
அருமை கவிஞரே இன்றைய சமூக அவலத்தை அழகாக சொன்னீர்கள்.
ReplyDeleteநன்றிங்க தம்பி.சொல்லத்தான் நினைக்கிறன்.
Deleteமுறையில்லதான். ஆனா என்ன செய்ய?!
ReplyDeleteவருகைக்கு நன்றிங்கம்மாl ! உங்க பதிவைப் பார்த்த பின்புதான் பிளாக்கில ஏதோ பிரச்சனைன்னு பதிவிட்டேன்.பாதி இருக்கு மீதியை இனிதான் தேடனும்
Deleteஉண்மை நிலவரங்கள்...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் தலைவரே...
நன்றிங்க தனபாலன்.தொடர முயற்சிக்கிறேன்
Deleteஅருமை. சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க நாகராஜ்
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க
ReplyDeleteஅரிது மாணிடராய் பிறத்தல் அரிது..
ReplyDelete