கூட்டங் கூடிக் குடிப்பது
நாளும் கிழமையில் நட்புக்காய் நல்லோர் சிலரின் முன்னிலையில் நற்சுவைக் கலந்தே குடித்தனர் நாகரீகமாய் அங்கேயே மகிழ்ந்தனர் ஆளும் வர்க்க அரசனுடன் அடித்தட்டு மக்களும் கூட்டமாய் அன்றும் சேர்ந்தே சுவைத்தனர் அப்போதே கலைந்து சென்றனர் இன்று எல்லாமே மாறியது எல்லோரும் சேர்ந்து ஆடுவது கல்லாதோர் இல்லாதோர் கூடிக் களியாட்டம் எங்கும் போடுவது எல்லா மக்களுமே சீரழிய எங்கும் கடைகள் திறப்பது கோயில் பள்ளி அருகிலும் கூட்டம் கூடிக் குடிப்பது இதிலே சமத்துவம் இருப்பதாய் இணைந்தே மகிழ்ந்து குடிப்பனர் இளையவர் முதியவர் மறந்தே இனிமை வேண்டி துடிப்பனர் தினமும் தொடர்ந்தே குடியை தைரியம் கொண்டே குடித்ததால் தலைக்குப் போதை ஏறவே தரையில் வீழ்ந்தே கிடந்தனர் பணமும் புகழும் அழியவே பாடாய்படுத்தும் இக்குடியை மனமே திருந்தி நிறுத்தினால் மகிழ்வதும் உந்தன் குடும்பமன்றோ