பட்டிணத்தான் வாழ்க்கை
பட்டினத்தில் வாழ்வதாய் சொல்கிறேன்
பார்ப்பவர் சிலரை நலமா என்கிறேன்
திட்டமாய் கடந்தே வருகிறேன்-இங்கு
தினமும் இயந்திரமாய் கடக்கிறேன்
எப்போதும் ஊமையாக செல்கிறேன்
எப்படியும் வாழ்ந்திடஎண்ணுகிறேன்
எங்கேயும் தனியாகப் போகிறேன்
எத்தனையோ மனிதர்களை பார்க்கிறேன்
கற்பனையாய் கடமைக்காய் வாழ்கிறேன்
காசுபணம் உள்ளவர்போல் நடிக்கிறேன்
இத்தனையும் எதற்காய் என்றெண்ணினால்
அத்தனையும் அடுத்தவர்க்கான கற்பனையே
அடுத்த வீட்டில் இருப்பவர் அறியேன்
அவர்தம் உறவை ஏதென்று தெரியேன்
தடுத்திடும் உறவே தடையாய் காரணம்
தடுப்பதை மறுக்க தவறுதல் முறையா
இருக்கிற காலம் இப்போதும் இறுதிவரை
இப்படித்தான் வாழ்கிறோமே பட்டணத்தில்
குறுகிய நட்பும் குடும்ப வட்டத்திலும்
குறையாய் சொல்லாமல் வாழ்கிறோமே
உணர்வினால் இந்தியனாய் தமிழனாய்
உரக்கச் சொல்லி சிரிக்க இயலுமா
கலகம் செய்யும் சாதி மதம்-பட்டணத்திலும்
கடந்தே வாழ நம்மால் முடியுமா
பார்ப்பவர் சிலரை நலமா என்கிறேன்
திட்டமாய் கடந்தே வருகிறேன்-இங்கு
தினமும் இயந்திரமாய் கடக்கிறேன்
எப்போதும் ஊமையாக செல்கிறேன்
எப்படியும் வாழ்ந்திடஎண்ணுகிறேன்
எங்கேயும் தனியாகப் போகிறேன்
எத்தனையோ மனிதர்களை பார்க்கிறேன்
கற்பனையாய் கடமைக்காய் வாழ்கிறேன்
காசுபணம் உள்ளவர்போல் நடிக்கிறேன்
இத்தனையும் எதற்காய் என்றெண்ணினால்
அத்தனையும் அடுத்தவர்க்கான கற்பனையே
அடுத்த வீட்டில் இருப்பவர் அறியேன்
அவர்தம் உறவை ஏதென்று தெரியேன்
தடுத்திடும் உறவே தடையாய் காரணம்
தடுப்பதை மறுக்க தவறுதல் முறையா
இருக்கிற காலம் இப்போதும் இறுதிவரை
இப்படித்தான் வாழ்கிறோமே பட்டணத்தில்
குறுகிய நட்பும் குடும்ப வட்டத்திலும்
குறையாய் சொல்லாமல் வாழ்கிறோமே
உணர்வினால் இந்தியனாய் தமிழனாய்
உரக்கச் சொல்லி சிரிக்க இயலுமா
கலகம் செய்யும் சாதி மதம்-பட்டணத்திலும்
கடந்தே வாழ நம்மால் முடியுமா
pattinaththu vaaxhvin verumaiyai solliponavitham arumai thodara vaazhththukkal
ReplyDeleteநானும் பட்டிணத்தை பார்க்க வந்தவன் தான் எனக்கும் தெரியுமே அதனால்தான் சொல்கிறேன் சார்+
Deleteநடைமுறைச் சிக்கலால் வரும் மனவுளைச்சலை அழகான கவியில் கூறினீர்கள்.
ReplyDeleteமாறுபட்ட சிந்தனை. வாழ்த்துக்கள்!
உண்மையில் பட்டிணத்தை நம்பி வந்தோரின் இன்றைய நிலையே இதுதான்
Deleteஅடுத்தவருக்காக வாழ்கிறேன்.... சரியாச் சொன்னீங்க!
ReplyDeleteகௌரவத்திற்கு வாழ்ந்து கஷ்டத்தை அனுபவிப்பவரில் நானும் ஒருவன்
Deleteஅடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் தெரியாது... தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை... பட்டணத்தில் "எல்லாம்" அவசரம்...
ReplyDelete(எல்லாம் : வாழ்வின் முடிவு கூட !)
இப்படித்தான் நண்பரே வாழமுடிகிறது.இப்போது உள்ளதை நீங்களே அறிவீர்கள்
Deleteகிராமத்தில் எப்போதும் சொந்த பந்தங்களுடன் மகிழ்வாய் வாழலாம்
ReplyDeleteஅந்த வாழ்க்கையை இழந்து ஏனோ தானோ என்று பட்டினத்தில் வெறும்
பகட்டு வாழ்க்கை இப்படி வாழ்வது என்பது உண்மையிலும் கொடுமை
தான் ஐயா .கவிதை அருமை ! மேலும் இனியன தொடர வாழ்த்துக்கள் .
சுற்றமும் நட்பும் சூழ வருக என்று நகரத்தில் ஒருவரும் அழைக்க முடியாத நிலைதான் இன்று உள்ளது
Deleteதுக்கத்தை கிளரிவிட்டுடீங்க கண்ணை கவரும் காகித பூக்களாய் வாழ்க்கை இங்கே மனம் கிடையாது மணமும் கிடையாது
ReplyDeleteஏன் மனிதமும் கிடையாது.அய்யய்யோ பாவம் என்று முனகிக்கொண்டே கடந்துசெல்லும் மனிதவாழ்க்கை
Delete' பட்டிண' வாழ்க்கையை சொல்லி கவிதை..அருமை!
ReplyDeleteசில சமயம் பட்டினி வாழ்க்கையாய் இருந்ததுமுண்டு
ReplyDeleteகவிதை அருமை. மூடிய கதவுகளுக்குள் தீவுகளைப்போல் வாழ்க்கை..
ReplyDeleteஉண்மைதான் .ஆளில்லாதீவுபோல
Deleteபட்டணத்து வாழ்க்கையே இப்படித்தான்!
வெளியூரில் உள்ளவங்களுக்குப் உண்மையைப் புரியணுமே அய்யா
Deleteஅருமையாச் சொல்லிட்டீங்க!
ReplyDeleteநன்றிங்க குட்டன்
Deleteஉணர்வினால் இந்தியனாய் தமிழனாய்
ReplyDeleteஉரக்கச் சொல்லி சிரிக்க இயலுமா
கலகம் செய்யும் சாதி மதம்-பட்டணத்திலும்
கடந்தே வாழ நம்மால் முடியுமா...அருமை ..
சாதியம் மதமும் சாகும்வரை கூடவே வரும் என்பதில் மாட்டருக் கருத்தில்லையே
Deleteஉண்மை!உண்மை!
ReplyDeleteபட்டினத்தில் அடுத்தவருக்காகத் தான் வாழ்கிறோம்.
அடுத்தவரின் மரியாதை கிடைக்கவேண்டியும் நடிக்கிறோம்
Deleteதிட்டமாய் கடந்தே வருகிறேன்-இங்கு
ReplyDeleteதினமும் இயந்திரமாய் கடக்கிறேன்
இதுவாக உள்ளது வாழ்வு.
நல்ல வரிகள்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பட்டணத்து வாழ்க்கையை விட்டு வேறு எங்கு தான் போவது? கிராமத்து வாழ்க்கை, கவிதைகளில் மட்டுமே இனிப்பதாய் உள்ளது, நண்பரே! வயலுக்கு நீரில்லை. குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. மின் கருவிகள் தொடர்ந்து இயங்க வழியில்லை. நல்ல பள்ளிகள் இல்லை. அடிப்படை வசதியான கழிப்பறைகள் இல்லை. எதை நம்பி நான் உங்கள் கிராமத்தில் வந்து குடியேறுவது? பட்டணத்திலேயே இருந்து தொலைக்கிறேன் போங்கள்.
Deleteபார்க்கூடாது பேசக்கூடாது என்றும் வேகவேகமாக செல்லும் சிலபேர் உள்ளார்கள்.
Deleteஎல்லா இல்லைகள் என்றாலும் என்ன குறை கிராமத்தில்? நிம்மதியும் நட்பும் கிடைக்கிறதே
Deleteசரியான பகிர்வு
ReplyDeleteதளம் பச்சை பசேலுன்னு அருமையாக உள்ளது
நம் மனதைப்போல விருப்பம்போல
Delete