தெய்வங்கள்

தெய்வங்கள்

கோழையாக சாகிறான்.

பணம் உள்ளவன் பதுக்கி வாழுறான்
பாசத்தை மறந்து பணத்தையே காக்கிறான்
குணம் உள்ளவன் கொடுக்க நினைத்தும்-இல்லாமல்
குடும்ப நலனை மட்டும் பார்க்கிறான்

கள்ள வழியில் காசுப் பார்கிறான்
கண்டபடி செலவும் செய்யுறான்
உள்ளபடி சொல்ல போனால் -நேர்மையற்ற
ஊழியத்தை  தொழிலாகச் செய்யுறான்  

நல்லவரைக் கண்டு நையாண்டி செய்யுறான்
நாலுகாசு பாதுகாக்க நாயைபோலக் காக்கிறான்
இல்லாததை  ஏளனமாய் சொல்லுறான்-இறுதியில்
இல்லாமை அறிந்து சொன்னார்கள் என்கிறான்

சொந்தமும் பந்தம்மும்  சுற்றம் மறந்து
சொத்து நிறைய  சேர்த்து வைக்கிறான் 
எந்த உணவும் தின்ன முடியாது-நோய்
வந்ததாலே மாத்திரை மட்டுமே  திங்குறான்

சின்னப் புத்தியால் செய்வதை மறக்கிறான்
சிறந்தோரை  இழந்து   சாபத்தையும் சேர்கிறான்
உள்ளபடிச் சொல்லப்போனால் உறக்கமின்றி-கோழையாக
ஊர்வாயை உலைவாயை கொண்டே சாகிறான்


Comments

  1. சொல்லப்பட்டவர்களை தொடருபவர்களையும், பெருமைப்படுத்துபவர்களையும் என்ன செய்வது...? அவர்களுக்கும் இதே நிலைமை தானோ...?

    (மறகிறான்-மறக்கிறான்; இழக்ந்து - இகழ்ந்து)

    ReplyDelete
  2. நிச்சயமாய் இல்லை நல்லவை வல்லமையே தரும் இறுதியில் மகிழ்ச்சியைத் தரும்

    ReplyDelete
  3. Mikach sariyaana avathanippuu vaazhththukkal

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார் ,நாட்டிலே நடக்கிற விஷயந்தானே

      Delete
  4. சகோதரரே! சிந்திக்கவைக்கும் கவிதை. வாழ்த்துக்கள்!

    இயலாமை ஆமையால்
    இயல்புதனை இழந்திட்டு
    இடர்ப்பட்டு இழிவாகி
    இறுதியிலே இறந்தும்போகின்ற
    சிலர்செயலாலே சீறியெழுந்த
    சிந்தனைமிக்க கவிகொண்டு
    உமதாதங்கம் உரைத்திட்டகவி அருமை
    உட்கருத்துத் தருகுதே வேதனை...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ. எப்படியும் வாழ்ந்து விடலாம் என்போருக்கு இறுதியில் இந்த நிலைதான் ஏற்படும்

      Delete
  5. அவரவர் எண்ணம் போல வாழ்வு . சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியில்லை ,முற்ப்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல

      Delete
  6. நல்வழியில்
    நயமாக சேர்த்து
    நாமும் வளர்ந்து
    பிறரையும் சிறக்க
    வைத்தாலே நலமாம்....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே
      உள்ளதை சொல்வோம்
      நல்லதை செய்வோம்

      Delete
  7. நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது தான் நடக்கும் என்பதை உணர்த்தும் கவிதை.
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.நல்லதை செய்வோம் நன்மையை பெறுவோம்

      Delete
  8. அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  9. சொந்தமும் பந்தம்மும் சுற்றம் மறந்து
    சொத்து நிறைய சேர்த்து வைக்கிறான்
    எந்த உணவும் தின்ன முடியாது-நோய்
    வந்ததாலே மாத்திரை மட்டுமே திங்குறான்//

    உண்மையை சொன்னீங்க கவிஞ்சரே நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஆம்.நாட்டில் நடக்கும் உண்மையேதான்

      Delete
  10. நேர்மையற்ற சுயநல வாழ்க்கையை படம் பிடிக்கும் கவிதை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more