தெய்வங்கள்

தெய்வங்கள்

கூட்டங் கூடிக் குடிப்பது

நாளும் கிழமையில் நட்புக்காய்
நல்லோர் சிலரின் முன்னிலையில்
நற்சுவைக் கலந்தே குடித்தனர்
நாகரீகமாய் அங்கேயே மகிழ்ந்தனர்

ஆளும் வர்க்க அரசனுடன்
அடித்தட்டு மக்களும் கூட்டமாய்
அன்றும் சேர்ந்தே சுவைத்தனர்
அப்போதே கலைந்து சென்றனர்

இன்று எல்லாமே மாறியது
எல்லோரும் சேர்ந்து ஆடுவது
கல்லாதோர் இல்லாதோர் கூடிக்
களியாட்டம் எங்கும் போடுவது

எல்லா மக்களுமே சீரழிய
எங்கும் கடைகள் திறப்பது
கோயில் பள்ளி  அருகிலும்
கூட்டம் கூடிக் குடிப்பது

இதிலே சமத்துவம் இருப்பதாய்
இணைந்தே மகிழ்ந்து குடிப்பனர்
இளையவர் முதியவர் மறந்தே
இனிமை வேண்டி துடிப்பனர்

தினமும் தொடர்ந்தே குடியை 
தைரியம் கொண்டே குடித்ததால்
தலைக்குப் போதை ஏறவே
தரையில் வீழ்ந்தே கிடந்தனர்

பணமும் புகழும் அழியவே
பாடாய்படுத்தும் இக்குடியை
மனமே  திருந்தி நிறுத்தினால்
மகிழ்வதும் உந்தன் குடும்பமன்றோ


Comments

  1. நாட்டையே பாழ்படுத்துகிறது குடி..
    அதை நீர்விட்டு வளர்க்கிறது அரசு...
    இந்த கொடுமையை என்ன சொல்ல...


    நல்லதொரு அறிவுரை கவிதை

    ReplyDelete
    Replies
    1. கேட்டால் வருமானம்?
      வருகைக்கு நன்றிங்க சௌந்தர்

      Delete
  2. நல்ல கருத்தினை கவியில் தந்தீர்கள். உங்கள் ஆதங்கம் சொற்களில் தெறிக்கிறது...
    வாழ்த்துக்கள்!

    பாலுக்கு பாலகன் பசியால் அழுதிட
    பாதகர் போதைக்கு பாட்டில்பானம் பருகியே
    பாதையும் தெரியாமல் புத்தியும்பேதலிக்க வீதியில்
    போதையில் கிடக்கிறார் வேட்டியும்விலகிடவே...

    த ம. 3

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இன்றைய தமிழகம் இப்படித்தான் உள்ளது.வருகைக்கு நன்றிங்க இளமதி

      Delete
  3. அவரவர் உணர வேண்டும்... திருந்த வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. அனைவரின் பேச்சிலும் திருத்தமும் வேண்டும்.எடுத்துச் சொல்லவேண்டும்.வருகைக்கு நன்றிங்க தனபாலன்

      Delete
  4. அருமை அய்யா.
    குடி குடியைமட்டுமா கெடுத்தது,,
    நாட்டையே அல்லவா கெடுத்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே தெரிந்ததுதான் .இருந்தும் அரசும் அதைத்தான் விரும்புகிறது

      Delete

  5. வணக்கம்!

    தமிழ்மணம் 4

    கூட்டங் கூடிக் குடித்திங்கே
    ஆட்டம் போடும் தோழா்களே!
    வாட்டங் கொண்டு கவியாழி
    வடித்த கவியை உணா்ந்திடுக!
    நாட்டம் இன்றி, உணா்வின்றி
    நாடடில் வாழ்தல் வாழ்வாமோ?
    பாட்டன் பூட்டன் ஓட்டனெலாம்
    படைத்த பாதை பாழாமோ?

    பாட்டன் - தாத்தா
    பூட்டன் - தாத்தாவின் தந்தை [கொள்ளுத் தாத்தா]
    ஓட்டன் - தாத்தாவின் தாத்தா [எள்ளுத்தாத்தா]

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கவிஞர்.பாரதிதாசன் அய்யாவுக்கு வணக்கம்.கருத்தையே கவியாக வடித்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சிங்க

      Delete
  6. அருமையாகச் சொன்னீர்கள்
    அதிக சோகம் அதிக மகிழ்ச்சி என ஆரம்ப்பித்து
    இன்று தினமும் மாலையில் என தொடர்வதை
    நினைக்க பயமாகத்தான் இருக்கிறது
    சமூக அக்கறையுடன் கூடிய பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்.சரியாச் சொன்னீங்க எல்லோருமே அதையும் மீறி காலை மாலை என்றும் கெட்டுப்போகிறார்கள்.வருத்தமாய்தான் உள்ளது

      Delete
  7. குடிப்பவர்கள் தானாகத் திருந்துவார்கள் என்பதெல்லாம் சரிப்பட்டு வராது. சுற்றி இருப்பவர்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அய்யா .ஊர்கூடித் தேரிலுப்பது போல எல்லோருமே முயற்சிக்க வேண்டும்.ஓவ்வொருவரும் இரண்டு நண்பனை திருத்தினால் பலன் இருக்குமென நினைக்கிறேன்

      Delete
  8. குடிப்பவர்கள் தானாக திருந்த வேண்டும்! சிறப்பாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. பணமும் புகழும் அழியவே
    பாடாய்படுத்தும் இக்குடியை
    மனமே திருந்தி நிறுத்தினால்
    மகிழ்வதும் உந்தன் குடும்பமன்றோ


    குடும்பம் மகிழ குடிப்பழக்கம் தொலையட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதுபோல குடும்பமும் சுற்றமும் மகிழ குடிப்பழக்கம் தொலையட்டும்.வருகைக்கு நன்றிங்கம்மா

      Delete
  10. குடி குடியைக் கெடுக்கும் என்பது
    குடிக்கும் முன்னர் தான்
    குடித்த பின்னர் தான்
    ஆடைகளின்றிய
    நம்மாளுகளைப் பார்க்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. எல்லா இடத்திலும் குடிகாரர்களின் நிலைமை இதுதானோ?.தங்களின் வருகைக்கு நன்றிங்க

      Delete
  11. சிரிப்பாகவும் மனதுக்கு வேதனையாகவும் இருக்கிறது என்னத்தை சொல்ல....!

    ReplyDelete
    Replies
    1. ஒருநாள் மாறும் உலகமே மகிழும் நாள் தொலைவிலில்லை.வருகைக்கு நன்றிங்க

      Delete
  12. சாராயம் குடிக்கப்போறவன் உடம்புக்கு சென்ட் அடிச்சுட்டு போயி நாரி திரும்புவதை பார்த்து சிரிப்பது எனக்கு வழக்கமாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா?அலுவலகத்தில் இப்படியும் நடப்பதுண்டு

      Delete
  13. //பணமும் புகழும் அழியவே
    பாடாய்படுத்தும் இக்குடியை
    மனமே திருந்தி நிறுத்தினால்
    மகிழ்வதும் உந்தன் குடும்பமன்றோ
    //சரியாகச் சொன்னீர்கள்..ஆனால் மக்கள் உணர்ந்து திருந்தணுமே... ஏதோ சாதாரண செயல் போலக் காட்டும் சில திரைப்பட பாடல்கள் வேறு.. :(
    அவற்றிற்கு எதிர்ப்பு சொல்லாமல் ரசிக்கும் மக்கள் வேறு..

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே போதைதானோ? இதையும் பாடலாக்கினால் நன்றாகத்தான் இருக்கும். வருகைக்கு நன்றிங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more